Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புள்ள‍ அம்மாவுக்கு . . .

ந‌வம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

அன்புள்ள‍ அம்மாவுக்கு . . .

தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு, அப்பாவி தமிழ் ஜனங்களின் சார்பில் அன்பு கலந்த வணக்க‍ங்கள். தமிழக மெ ங்கும் நடைபெற்ற‍ உள்ளாட்சித் தேர்தல் களில் சட்ட‍மன்றத் தேர்தலைப் போல வே தமிழக மக்கள் தங்களை அசுரபல த்துடன் வெற்றி பெறச் செய்து ள்ள‍னர். வாழ்த்துகிறோம். பாராட்டுகி றோம்.

இதற்கு காரணம் எதிர்கட்சிகளின் மீது அவர்களுக்குள்ள‍ கோபமோ வெறுப்போ அல்ல‍. உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக் கை தான். உங்களிடமிருந்து பல திட்ட‍ங்களை இந்த அப்பாவி மக்க‍ள் எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் வாக்களித்த‍படி தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக மாற்றிக் காட்டுவீர்கள் என்று ஏகப்பட்ட‍ நம் பிக்கையூடான காத்திருக்கிறார் கள்.

க‌டந்த ஆறு மாதங்கபளில் தமிழ் நாட்டில் அப்ப‍டி ஒன்றும் பெரிய மாற்ற‍ம் நடக்க‍வில்லை. அற்புதங் கள் ஏதும் நிகழவில்லை. கடந்த ஆட்சியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வதும், அவர்களை சிறை க்கு அனுப்புவதும், கட்டிடம் முதற்கொ ண்டு கல்வி வரை கடந்த ஆட்சி மேற்கொண்ட திட்ட‍ங்களை ஒரே யடியாக ஓரங்கட்டுவதும் போன்ற முயற்சிகள் மட்டுமே தொடர் நிகழ்ச்சிகளாகி வருகின் றன•

மக்க‍ளுக்கான அரசு என்று ஒவ் வொரு முறையும் சொல்லிக் கொள்ளும் நீங்கள் மக்க‍ளுக்காக உடனடியாக செய்ய வேண்டிய வை சில அல்ல‍ . . . பல . . .

சென்னை மாநகரம் குப்பைகளா லும், கழிவுகளாலும் தேங்கிய மழை நீராலும் போக்குவரத்து நெ ரிசலாலும் மாநரகமாக மாறியி  ருக்கிற‌து. இதற்கு நிரந்தர தீர்வு உண்டா? அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளால், தெருக்களெல்லாம் குடி மக்க‍ளுக்கு சொந்த மாகி யிருக்கிறதே! இவை. எப்போது மக்க‍ள் பயமின்றி நடமாடும் வீடியாகும்.

மின்வெட்டு இல்லாத நாளே யில்லை – இது தமிழகம் முழுவதும் கேட்கும் பரிதாபக் குரல். இது உங்கள் காதுக ளுக்கு விழுகிறதா? கிராம்ப் புற மருத்துவமனைகளும், ஆரம்பப் பள்ளிகளுகும், அய் யோ பாவம் நிலையில் உள் ள‍னவே! இவை. சீர்செய்ய‍ப் படுமா?

அதிரடி மாற்ற‍ங்களினால் அரசியல் வாதிகள் மகிழலாம். ஆனால் அடி ப்படை வசதி மாற்ற‍ங்களால் மட்டு மே உங்களுக்கு வாக்களித் த‍ ஒவ் வொரு அப்பாவித் தமிழனும் மகிழ் வான்

இந்த உரத்த‍ சிந்தனை உங்களுக்கு ள் தோன்ற வேண்டும் என்பதே எங் களின் கூட்டுப்பிரார்த்த‍னை

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

  • சென்னை மாநகரம் குப்பைகளா லும், கழிவுகளாலும் தேங்கிய மழை நீராலும் போக்குவரத்து நெ ரிசலாலும் மாநரகமாக மாறியி ருக்கிற‌து. இதற்கு நிரந்தர தீர்வு உண்டா? அரசாங்கமே நடத்துகிற மதுக்கடைகளால், தெருக்களெல்லாம் குடி மக்க‍ளுக்கு சொந்த மாகி யிருக்கிறதே! இவை. எப்போது மக்க‍ள் பயமின்றி நடமாடும் வீடியாகும்.
    மின்வெட்டு இல்லாத நாளே யில்லை – இது தமிழகம் முழுவதும் கேட்கும் பரிதாபக் குரல். இது உங்கள் காதுக ளுக்கு விழுகிறதா? கிராம்ப் புற மருத்துவமனைகளும், ஆரம்பப் பள்ளிகளுகும், அய் யோ பாவம் நிலையில் உள் ள‍னவே! இவை. சீர்செய்ய‍ப் படுமா?
    இந்த தலைப்பு செய்தி வெளியிட்ட நாள் நவம்பர் 11, 2011. இன்றுவரை இதில் எதுவுமே நிவர்த்தி செய்யப்படாதது வேதனையளிக்கிறது! இன்னும் எதிர்கட்சிகளிப் பழிவாங்கும் நிகழ்வுகளே தினமும் தொடர்கிறது? மேலும் சென்னை மாநகராட்சி முழுதும் தண்ணீர் பிரச்சினை! கழிவுநீர் கலந்து குடிதண்ணீரில் பல இடங்களில் வருவது தினசரி செய்திகள்.இதை எல்லாம் அமைச்சர்கண்ணில் இதுவரை படவில்லையா? கான்ட்ராக்ட் காரர்களிடம் கமிஷன் வாங்கி,சொத்து குவிப்பதிலேயே எல்லா தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினகளின் வேலையாகி விட்டது! ஊர் எக்கேடு கெட்டால் என்ன? நாம் பத்து தலைமுறைகளுக்கு சொத்து சேர்ப்பதே முதல் பணி என்று அனைவரும் முனைப்புடன் இருப்பது அம்மாவின் காதில் படவில்லையா?

  • கிடக்கிறது கிடக்கட்டும்,கிழவியைத்தூக்கி மனையில் வை! எனபதுபோல,தமிழகம் நாறிக்கிடக்கிறது! குடிக்க தண்ணீர் கிடைப்பது இல்லை! குப்பௌ கூளங்கள் இல்லாத இடமில்லை! இத்தனை போக்குவரத்துக்கு புது பேருந்துகள் விட்டும், மக்கள் இன்னும் தொத்திக்கொண்டு பயணிப்பதைத்தான் காண முடிகிறது!சிறு பேருந்துகள் வேறு, ஆளுங்கட்சி சின்னத்தை, மூலை முடுக்கெல்லாம் விளம்பரப்படுத்தி சுற்றுகின்றன! எந்த அரசுத்துறையிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இலவசக் கழிப்பிடம் எல்லாம், கட்சிக்காரர்களின் கட்டணக் கொள்ளை வேறு!நாளிதழகளில் தினமும்,தங்கச்செயின் அறுப்பு,கொலை, கொள்ளை,ஏ.டி.எம்.சூறை,அரசியல் பழிவாங்கும் கொலைகள்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை,சாலைகளில் காவலர்களின் வசூல் வேட்டை!ஆட்டோ கட்டண சீரமைப்புக்குப் பின்பும் இன்னும் தொடரும் மேலே,கீழே,பாக வாட்டில் என்று அதிக வசூல்!எந்த அர்சு அலுவலகத்திலும் பணி நடப்பதாகத் தெரியவில்லை! எங்கேயும் ஸ்ரைக்.தொடரும் மின் வெட்டு! இந்த அழகில் தமிழக மக்கள் அவதிப்படுவது போதாது என்று, அகில இந்தியாவையும் பாழடிக்க அம்மா துடிப்பது ஏன்? முதலில் தவறாது தினமும் பெங்களூறு சென்று,சொத்துக் குவிப்பு வழக்கை எதிர்கொண்டு,தன்னை நிரபராதி என்று பொது மக்களுக்கு நிரூபிக்க வேண்டும்!இல்லாவிட்டால் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: