Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள …

புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ள முற்படுபவர்களுக்கு கை கொடுக்கும் இணைய தளங்க ளின் வரிசையில் பாலிஸ் பீக்ஸ் (polyspeaks.com) இணைய தள மும் சேர்ந்திருக்கிறது.  ஆனால் பாலிஸ்பீகஸ் மொழி பாடம் எல் லாம் நடத்துவதில்லை. அதற்கு பதிலாக கற்று கொள்ள விரும்பு ம் மொழியில் பயிற்சி பெற உதவு கிற‌து.அதாவது எந்த மொழியை கற்க விரும்புகின்றனறோ அதே மொழியை பேசுபவருடன் இணைய உரையா டலில் ஈடுபட வழி செய்கிற‌து.

புதிதாக மொழியை கற்க முற்படும் போது அந்த மொழியை தாய் மொழி யாக கொண்டவரோடு பேசிப்பார்ப்பதை விட சிறந்த வழி வேறு இருக்க முடியாது. இத்தகைய சிறந்த வழியை தான் பாலிஸ்பீக்ஸ் தளம் உண் டாக்கி தருகிறது. இந்த தளத்தில் உறுப்பினரானவுடன் எந்த மொழியில் பேச வேண்டும் என்று கேட்பது போல பல்வேறு மொழி பேசுபவர் களோடு தொடர்பு ஏற்படுத்தி தரு கிற‌து.பயனாளிகள் தாங்கள் கற்க விரும்பும் மொழி பேசுபவரோடு இணையத்தில் உரையாட துவங் கி விடலாம்.

உதாரனத்திற்கு ஜப்பானிய மொ ழி கற்று கொள்பவர்கள் இந்த தள ம் மூலம் ஜப்பானியரோடு அரட்டை அடித்து அந்த மொழியில் உள்ள பேச்சு நுணுக்கங்களை தெரிந்து கொள்ள‌‌ முற்படலாம். இதே போலவே வேற்று மொழி பேசுபவர்களோடு வீடியோ வழியே உரையாடும் வசதி யை வெர்ப் லிங் தளம் தருகிறது.

ஆனால் பாலிஸ்பீக்ஸ் வீடியோ வசதி இல்லாமல் சாட் செய்வது போல வே இணைய உரையாடலில் ஈடுபட வைக்கிறது.புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளும் நிலையில் பேசு வதை விட எழுத்து மூலம் உரையா டுவதே உகந்த‌தாக இருக்கும் என்று நினைத்து இந்த அரட்டை வசதியை தருவதாக பாலிஸ்பீகஸ் தளம் தெரிவிக்கிற‌து. பேஸ்புக் கணக்கை கொண்டே இதில் உறுப்பினராகி வேற்று மொழி பேசுபவருடன் அரட் டையில் ஈடுபட்டு மொழியை வள ர்த்து கொள்ளலாம்,நட்பையும் வளர் த்து கொள்ளலாம்.

ஒரு காலத்தில் சாட் என்று சொல்லப்படும் அரட்டை தளங்கள் இணைய த்தில் கொடி கட்டி பறந்தன.அதன் பிறகு அரட்டை தளங்களின் செல்வா க்கு தேய்ந்து போய்விட்டன. அதன் பிறகு சாட்ரவுலட் தளம் மீண்டும் அர‌ட்டை தளங்களுக்கு புதிய மவுசை தேடித்தந்தது. இந்த நிலையில் அரட்டையை மொழி கற்பது உள்ளிட்ட பயனுள்ள வழிகளில் பயன்படு த்துவதற்கான வாய்ப்பை பாலிஸ்பீக்ஸ் போன்ற தளங்கள் ஏற்படுத்தி தரு கின்ற‌ன.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply