Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்கள் எதைத்தான் விரும்புகிறார்கள்- அதற்கான காரணங்கள் என்ன


*கடலின் ஆழத்தில் உள்ளதை க் கூட கண்டுவிடலாம், பெண் ணின் மன ஆழத்தில் புதைந்து கிடப்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்று கவிஞ ர்களும், உளவியல் நிபுணர்க ளும் தெரிவித்துள்ளனர். ஆ னால் அமெரிக்காவைச் சேர்ந் த பிரபல மனோதத்துவ ஆய் வாளர் பேகோ ஆய்வு செய்து ள்ளார்.

*எண்ணற்ற பெண்களிடம் பேசியதன் அடிப்படையில் அவர்களின் மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ரகசிய ங்களை வெளிக் கொண் டு வந்துள்ளார்.

*பெண்கள் எதைத்தான் விரு ம்புகிறார்கள்? அதற்கான கார ணங்கள் என்ன என்பதைப் பற் றி பேகோ மிகப்பெரிய பட்டி யலிட்டுள்ளார். அவை உங்க ளுக்கு:

தனித்திறன் அவசியம்

*மிகச்சிறந்த ஆண்மகனைத் தான் அனை த்து பெண்களும் பிடிக்கும் என்று கூறியுள் ளனர். தனித் திறன் மிக்கவ னாகவும், அனை வராலும் பாரட்டு பெற்ற ஆண் மக னையே தங்கள் துணையாக தேர்ந்தெடுப்போம் என்று  80 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர்.

*மிக முக்கியமாக படுக்கை யறையில் புதுமையாக செ யல்படும் கணவனாக அமையவேண்டும் என்பது அனைத்து பெண்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. போர் அடிக்கும் விதமாக இல்லாமல், எதையும் வித் தியாசமாக சொல்லவோ, செய்யவோ வேண்டும் என்று அநேகம் பெண்கள் கூறியுள்ளனர்.

வருமானத்தின் பகிர்வு

*கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண் களிடமும் உள்ளது. அந்த வேலை யை கணவன் தேடித் தந்தால் அவ ர்கள் மிகவும் மகிழ்வார்கள். ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டு மே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ் சம் பணம் இருக்க வேண்டும். அப் போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

ஓய்வுக்கு அனுமதிக்கவேண்டும்

*அலுவலக நாளில் அதிகாலையில் எழு ந்து வேலைகள் செய்து விட்டு அரக்க, பரக்க ஓடவேண்டியுள்ளது. எனவே விடு முறை நாட் களிலாவது தங்கள் இஷ்டம் போல தூங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்பது 70 சதவிகிதம் பெண்களின் வி ருப்பமாக இருக்கிறது. ஏதாவது விசேச மாக செய்யலாமே என்று கணவன் தொ ந்தரவு செய்யக்கூடாதாம்.

வெளியூர் டூர் அவசியம்

*வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் பலரும் வாரம் ஒருமுறையாவது தங்கள் கணவர் தங்களை தியேட்டர், ஹோட்டல் என்று அழைத்து செல்ல வேண்டும் என்று விரும்புகின்றனர். வருட த்திற்கு ஒருமுறை நான்கைந்து நாட்கள் வெளியூர் சுற்றுலாவிற்கு அழைத்து செல்ல வேண்டுமாம்.

*திருமணத்தின்போது ஒல்லியா இருந்தவர கள் குழந்தைபேற்றினால் குண்டாகிவிட்டா ல் அதைக்கூறி மனதை புண்படுத்தக் கூடாது என்பது நூறு சதவிகித பெண்களின் கருத்தாக உள்ளது.

கட்டுப்பாடு கூடாது

*ஆபிசிற்கு போகிறேன் பேர்வழி என்று வீட் டில் இருக்கும் பெண்க ளை அநேக ஆண்கள் படுத்தி எடுப்பதாக ஏராளமான பெண்கள் நினைக்கின்றனர். எனவே காலை நேரத்தில் அலுவலகம் புறப்படும் ஆண், அது எடு, இதை எடு என்று தொந்தரவு செய்யக்கூடா தாம். அதேசமயத்தில் பொறுமையாக கேட் டால் அதனை செய்து தர ரெடியாகவே இரு ப்பதாக பெண்கள் தெரிவித்துள்ளனர்.

*சாவி கொடுத்த பொம்மை போல பெண்க ளை பயன்படுத்தக்கூடாது என்பது ஒட்டு மொத்த பெண்களின் எண்ணமாக இருக்கி றது. அதிகம் பேசாதே, சிரிக்காதே என்று கட்டுப்படுத்தக்கூடாதாம். தங்களுக்கான சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பது அநேகம் பேரின் விருப்பமாக உள்ளது.

*செல்போனில் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள் ளக் கூடாது. `அய்யோ� பில் அதிகமாகி விடும்� என்று சொன்னால் எரிச்சல் ஆகிவிடும் என்று பெண்கள் தெரிவித்துள்ளனர். அதனால், தங்களின் மனம்போல் பேச விட்டுவிட வேண்டும் என்று பெண்கள் தெரிவித்து ள்ளனர்.

சம பங்கு வேண்டும்

*எந்தவொரு முடிவை கணவன் எடுத் தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷ யத்தில் மனைவியை புறக்கணிக்கக் கூ டாது. குழந்தைகளை கவனிப்பதில் இரு வரும் சமமாக இருக்கவேண்டும் என்பது பெண்களின் விருப்பம். எதற் கெடுத்தா லும் குற்றம் குறை கூறிக்கொண்டி ருக்கும் ஆண்களை அறவே பிடிக்காதாம் பெண்களுக்கு.


*என்ன பெண்ணின் மனதில் உள்ள ரகசியங்கb ளைப் படித்து மயக்கமே வருகிறதா? இது சாம் பிள்தான். புதிதாக திருமணம் செய்து கொண்ட ஆண் புது மனைவியின் ஆசையை நிறை வேற்றபடும்பாடு இருக்கிறதே பக்கத்தில் இரு ந்து பார்ப்பவர்கள் செம சிரிப்பை வரவழைக் கும். அவர்கள் பேசாமல் பேகோ கூறியவற்றை படித்து அதன்படி பெண்களின் சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றினா லே குடும்பம் குதூகலமாக மாறிவிடும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: