Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரகசியமா… அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண் டை வெடிச்சுடும்

சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். பெண்களிடம் இவ்வளவு நேரம் தான் ரகசியம் தங்கும் என்று. ஆனால், பெண்களிடம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் தங்காது என்ற சமீபத்திய ஆய்வு முடிவை நம்பித்தான் ஆக வேண் டும்.

பெண்களுக்கான முகஅழகு கிரீம் பிராண்ட்களில் ஒன்று சிம்பிள். அதன் சார்பில் இணைய தளம் வழி யாக இந்த அதிமுக்கிய ஆய்வு நட த்தப்பட்டது. பெண்களிடம் ஒரு பர ம ரகசியம் சொன்னால் சராசரியாக எவ்வளவு நேரம் அதை பாதுகாப் பார்கள் என்பதுதான் கேள்வி. 3,000 பெண்களிடம் இது கேட்க ப்பட்டது.

ரகசியமா… அதை உடனே யார்கிட்டயாவது சொல்லலைன்னா மண் டை வெடிச்சுடும் என்று 10ல் ஒரு பெண் தெரிவித்தார். தனிப்பட்ட தோ, அதிமுக்கியமானதோ, மேட்டர் எதுவானாலும் கவலையில் லை என்பதுதான் ஹைலைட். 

அடுத்தவர் ரகசியத்தை கேட்கும் சுக மே அலாதி என்றவர்கள் 85 சதவீதம் பேர். யாரைப் பற்றியது அந்த ரகசி யம் என்பதை பொருத்து பெரும்பா லும் பெண்கள் அதை முதலில் காதி ல் போடுவது கணவர் அல்லது அம் மா அல்லது நெருங்கிய நண்பரிடம்.

ஏன் ரகசியத்தை போட்டு உடைக்கிறீ ர்கள் என்ற கேள்விக்கு, மனதில் இருந்து பாரத்தை இறக்கி னால்தான் நிம்மதி என்று ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் பதில ளித்தனர். அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ரகசியம் காக்க முடியாது என்றவர்கள் 3ல் இரண்டு பேர்.

இதுபற்றி சிம்பிள் நிறு வன செய்தி தொடர் பாளர் கூறுகையில், ரகசியத்தை காப்பதில் பெண்களின் மனப் போராட்டம் இந்த ஆய்வில் வெளிச்சமாகி விட்டது. இருந்தாலும், தக வல் தொடர்பு முன்னேற் றத்தால் அதிகம் பேருக்கு குறைந்த நேரத்தில் ரகசியத்தை தெரி விப்பது சாத்தியமாகி விட்டதும் காரணமாக இருக்கலாம் என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: