2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கலைஞர் டிவியின் சொத்துக்களை
முடக்க அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate) முடிவு செய்துள் ளது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை முறை கேடாகப் பெற்ற டி.பி. ரியா லிட்டி உரி மையாளர் ஷாகித் ஹுசேன் பல்வாவின் ஸ்வா ன் டெலிகாம் நிறுவனம் (இப்போது இதன் பெய ர் Etisalat DB) தனது துணை நிறு வனமான குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் பிலி ம்ஸ் ஆகியவை மூலமாக கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடியை வழங்கியது.
முதலில் இந்தப் பணம் டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திலிருந்து குசே
காவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனத்துக்கு டிரான்ஸ்பர் செய்யப் பட்டது. இந்த நிறுவனத்தின் உரிமை யாளர்கள் ஷாகித் ஹுசேன் பல்வா வின் சகோததர் ஆசிப் பல்வா மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர்.
இந்தப் பணம் அங்கிருந்து படத் தயாரிப்பாளர் கரீம் மொரானியின் சினியுக் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து இந்தப் பணம் கலைஞர் டிவிக்கு வந்து சேர்ந்தது.
ஆனால், இதை சினியுக் தங்களுக்கு கட னாகவே வழங்கியதாகவும், அதை வட் டியோடு சேர்த்து ரூ. 214 கோடியாகத் திருப்பித் தந்து விட்டதாக கலைஞர் டிவி கூறுவதை சிபிஐ ஏற்கவில் லை. 2ஜி விவகாரம் வெடித்தவுடன், பிரச்சனையிலிருந்து தப்பு வதற்காகத் தான் இதை கலைஞர் டிவி கடன் போல காட்டுவதாக சிபிஐ கூறுகிறது. இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனி மொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்கட்டமாக கலைஞர் டிவி க்கு பணத்தைத் தந்த ஷாகித் ஹுசேன் பல்வாவுக்கு சொந்த மான டைனமிக்ஸ் ரியாலிட்டி உள் ளிட்ட 4நிறுவனங்களின் ரூ. 233.55 கோடி சொத்துக்களை முடக்க கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமலாக்கப் பிரிவு உத்தரவு பிறப்பித் தது.
இந்நிலையில் இப்போது கலைஞர் டிவி, குசேகாவ்ன் புரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் சினியுக் ஆ
கிய நிறுவனங்களின் ரூ. 13.5 கோடி சொ த்துக்களை முடக்க அமலாக்கப் பிரிவு அடு த்த உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.
இந்த உத்தரவின்படி 3 நிறுவனங்களின் அசையும்- அசையா சொத் துக்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவை முடக்கப்படவுள்ள ன. சட்ட விரோத பண பரிமாற்ற சட்டப் பிரிவு 4ன்கீழ் இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு எடுக்கவு ள்ளது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்