Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லட்சுமிகாந்தனை கொலை செய்தது யார்??

தமிழக, இந்திய அளவில் நடைபெற்ற முக்கியக் கொலை வழக்கு

1940-களில் தியாகராஜ பாகவதர்தான் திரையுலகின் சூப்பர் ஸ்டார். இவருடைய வெண்கலக் குரலுக்கு மக்கள் அடிமைப்பட்டு கிடந்தனர். மேடையிலோ திரையிலோ இவர் தோன்றினால் மக்கள் மெய் மறந்து சொக்கி நின்றனர்.  இவ ருடைய ஹரிதாஸ் படம் சென்னை பிராட் வே திரையரங்கில் சுமார் 700 நாள்கள் ஓடி பெரும் சாதனை படைத்தது. இவர் காரில் போகும்போதுகூட மக்கள் வழிமறித்து நிறுத்தி பாடச் சொல்லி கேட்பார்கள். இவ ர் நடித்து வெளியான சிந்தாமணி படத் தைத் திரையிட்ட ராயல் டாக்கீஸ், அதில் கிடைத்த வசூலை வைத்தே சொந்தமாக தியேட்டர் ஒன்றை வாங்கி அதை சிந்தா மணி தியேட்டர் என்று பெயரிட்டது. திவான் பகதூர் என்று பட்டம் பெற்ற திரையுலகைச் சேர்ந்த ஒரே நடிகர் இவர்தான்.

இவர் ஒரு ட்ரெண்ட் செட்டர். இவர் குரல் மட்டுமல்ல, சிகையலங்கார மும் இளைஞர்களியே பிரபலம் அடைந்திருந்தது. பாகவதர் ஸ்டைல் என்று அதற்குப் பெயர். திரையுலகை இவர் அளவுக்கு ஆண்ட இன்னொ ருவரைச் சொல்வது கடினம். திரையுலகின் மூலம் இவர் அடைந்த லாபங்களும், திரை யுலகம் இவர் மூலம் அடை ந்த லாபங்களும் மகத்தான வை. தங்கத் தட்டில் உணவு உண்டவர். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாரின் வாழ்க்கை ஒரு கொலை வழக்கால் தலை கீழாக மாறிப்போனது. அது தான் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு.

பாகவதரைப் போலவே இதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்னொரு வர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.  வில்லுப்பாட்டு, மேடை நாட கம், திரையுலகம் என்று பல துறைகளில் பிரசித்தி பெற்றவர். திரை ப்படத்தில் தான் பங்குபெறும் நகைச்சுவை காட்சிகளுக்கு தானே வசனம் எழுதினார். சுமார் 150 திரைப்படங்களில் நடித்திருக்கிறா ர். இவர் நடித்த பல படங்களில் இவருக்கு ஜோடியாக பெண் கதாபாத்திரத்தில் நடித்த டி. எம்.மதுரம் கலைவாணரின் நிஜ வாழ்க்கை யிலும் துணைவியாக ஆனார். திரைவானில் வெற்றிக்கொடிகட்டி பறந்து கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையையும் அதே லட்சுமி காந்தன் கொலை வழக்கு தாக்கி சீரழித்தது.

இரு பெரும் நடிகர்களின் வாழ்வில் சுனாமி யை ஏற்படுத்திய அந்த லட்சுமிகாந்தன் யார் ? இன்றைய மஞ்சள் பத்திரிகைகளுக்கெல்லா ம் முன்னோடியாகத் திகழந்த சினி கூத்து என் னும் சினிமா இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவர். சினி கூத்தில் சினிமாவைப் பற்றிய விமர்சனம் மட்டுமல்ல, சினிமாக்காரர் களைப் பற்றிய விமரிசனமும் இடம்பெற்றது. பரபரப்பான கிசுகிசுக்கள், எந்த நடிகருக்கும் எந்த நடிகைக்கும் தொடர்பு போன்ற ‘சுவாரஸ் யமான’ செய்திகள் இடம் பெற்றன. நடிகர், நடிகைகளுடைய தனிப்பட்ட வாழ்க் கை ரகசியங்கள் என்ற பெயரில் பல புனைவுகள் தயார் செய்ய ப்பட்டு அச்சில் ஏற்றப்பட்டன. அதனால் பல நடிகர், நடிகைகளின் சமூக அந்தஸ் துக்கு பங்கம் ஏற்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தியாகராஜ பாக வதர், என்.எஸ். கிருஷ்ணன், ஸ்ரீராமுலு நாயுடு (இவர் பிரபல இயக்குனர். கோவை பக்ஷிராஜ் ஸ்டுடியோவின் உரிமையாளர்) மூவரும், அன்றைய சென்னை மாகாண ஆளுநரான ஆர்தர் ஆஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்பிடம் சென்று லட்சுமிகாந்தனுக்கு சினிகூத்து பத்தி ரிக்கை நடத்த வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என்று வே ண்டி ஒரு மனுவைச் சமர்ப்பித்தனர். ஆளு நரும் அவர்களுடைய வேண்டுகோளு க்கு இசைந்து லட்சுமிகாந்தனுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய் தார்.

ஆனால், லட்சுமிகாந்தன் தன்னுடைய நடவ டிக்கையை நிறுத்திக் கொள் ளவில்லை. போலியான ஆவணங்களின் பேரில் தன் வெளியீட்டைத் தொடர்ந்து நடத்திவந்தான். அரசாங்கத்துக்கு இது தெரிய வரவே அந்த வெளியீட்டையும் முடக்கியது. லட்சுமிகாந்தன் இதற்கும் அசரவில்லை. ஹிந்து நேசன் என்ற வேறொரு பத்திரிகையை த் தொடங்கினான். மீண்டும் ஏகப்பட்ட கிசுகிசுக்களை எழுதினான். இம் முறை ஒரு முன்னேற்றம். சினிமாக்காரர்கள் மட்டுமல்லாமல் சமுதா யத்தில் உள்ள பெரும் புள்ளிகள், தொழில் அதிபர்கள் என்று அனைவரைப் பற்றிய ரகசியங்களையும், புனை கதை களையும், கிசுகிசுக்களையும் எழு தித் தள்ளினான்.

லட்சுமிகாந்தன் எழுதும் கிசுகிசுக்க ளுக்கு பயந்தவர்கள், அவனுடைய நட் பைச் சம்பாதிக்க அவனுக்கு ஏகப்ப ட்ட பணத்தை வழங்கினர். இதன் கார ணமாக லட்சுமிகாந்தன் சொந்தமாக ஒரு அச்சகத்தையே விலைக்கு வாங் கிவிட்டான். தனக்கு எதிராக ஆளுந ரிடம் மனு கொடுத்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீ ரா முலு ஆகியோர்மீது நிறைய கிசுகிசுக்களை எழுதினான். அந்தக் கால கட்டத்தில் மேற்சொன்ன மூவரைத் தவிர்த்து லட்சுமிகாந்தனின் கிசுகிசு க்களால் பாதிக்கப்பட்டு அவனுக்குப் பல எதிரிகள் உருவாயினர்.

இந்நிலையில், 1944 ஆம் ஆண்டு லட்சுமிகாந்தன் தன்னுடைய வழக் கறிஞர் நண்பர் வீட்டுக்குச் சென்று விட்டு சைக்கிள் ரிக்ஷாவில் வீடு திரு ம்பிக் கொண்டிருந்தான். அப்போது சென்னை வெப்பேரி அருகே வந்து கொண்டிருக்கையில் அடையாளம் தெரியாத சிலர் அவனைக் கத் தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்று விட்ட னர். கத்திக்குத்து காயத்துடன் அவன் மருத் துவமனைக்குச் செல்லாமல் அவனுடைய வழக்கறிஞர் நண்பர் வீட்டிற்குச் சென்று நட ந்த விவரத்தை தெரிவித்தான். அவனுடைய நண்பர் அவனை மருத்துவமனைக்குச் செ ன்று சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி அறிவு றுத்தினார். கூடவே தன்னுடைய ஜூனிய ரையும் லட்சுமிகாந்தனுக்கு துணையாக அனு ப்பி வைத்தார். ஆனால் லட்சுமிகாந்தன் மரு த்துவமனைக்கு செல்லும் வழியில், வெப்பேரி காவல் நிலையத்துக்குச் சென்று, நடந்த சம்பவங்களைப் பற்றிப் புகார் ஒன்றை கொடுத்தான். தன்னை அடையாளம் தெரியாத யாரோ குத்தி விட்டதாகத்தான் தெரிவித்தான். தியாகராஜ பாகவதரையோ என்.எஸ். கிருஷ்ணனையோ புகாரில் குறிப்பிடவில்லை.

மருத்துவமனையிலும் அவன் புறநோயாளியாகத்தான் அனுமதிக்கப்பட் டான். காவல் நிலையத்திலும் மருத்துவமனையிலும் அவன் எந்தவிதக் கவலையும் இல்லாமல் காணப்பட்டான். நகைச்சுவை உணர்வுடன் இருந் ததாகவும் சொல்வார்கள். மருத்து வம னையில் தனக்கு சிகிச்சை அளித் த வ ர்களிடம் லட்சுமிகாந்தன் ஒரு கொலை விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கி றான்.  சமீபத்தில் தனுஷ்கோடியிலி ருந்து சென்னைக்கு வந்த போட் மெயில் ரயிலில், தேவகோட்டையைச் சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் கொலை செய் யப்பட்ட சம்பவம் அது. அந்தக் கொலையில் ஒரு பிரபல சினிமா நடிகை சம்மந்தப்பட்டிருப்பதாகவும், கொலை நடந்த ரயிலில் அவள் பயணம் செய்ததாகவும், கொன்ற பிறகு, ரயில் நிலையத்தில் இறங்கி விட்ட தாகவும் லட்சுமிகாந்தன் சொன்னா ன். அந்த நடிகைக்கு அரசியல் செல் வாக்கு இருப்பதால் அவள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில் லை என்றும் தெரிவித்தான். தகுந்த ஆதாரங்களைக் கொண்டு அந்த நடிகையைச் சிக்கவைக்கப் போக தாகவும் தெரிவித்தான்.

மறு நாள் விடியற்காலையில் எதிர் பாராதவிதமாக லட்சுமிகாந்தன் உயி ரிழந்தான். லட்சுமிகாந்தனை யார் கொன்றிருக்கக்கூடும் என்னும் கேள்வி எழுந்தபோது, தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் , ஸ்ரீரா முலு நாயுடு ஆகிய மூவரையும் அதற்குப் பொறுப்பாளிகளா க்கி யது காவல் துறை. மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள்மீது குற்ற ப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றவாளிகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் ராஜாஜி, வி.டி. ரங்கசாமி ஐயங்கார், கோவிந்சாமிநாதன், கே.எம்.முன்ஷி, பி.டி.சுந்தர்ராஜன், சீனிவாச கோபால் மற்றும் பிரேடல் ஆஜரானார்கள். நீதிபதி மாக்கெட் தலைமையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. வழக்கு நடந்த சமய த்தில் ஜூரி முறை இருந்தது. ஜூரி என்றால் நடுவர் குழு. பொது மக்களிலிருந்து 12 நபர்களைத் தேர் ந்தெடுத்து இந்த நடுவர் குழு அமைக்கப்படும். வழக்கு விசாரணை யில் பங்கு கொண்ட நடுவர் குழு தான், குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி யா அல்லது நிரபராதியா என்று முடிவெடுக்கும். அந்த முடிவை வைத்து நீதிபதி தகுந்த தீர்ப்பை அளிப்பார். இப்பொழுது இது நடைமுறையில் இல்லை.

வழக்கு விசாரணையில் பங்கு கொண்ட நடுவர் குழு விசாரணையின் இறுதியில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் குற் றவாளிகள் என்று யாரும் எதிர்பார்க்காத தீர்ப்பை வெளியிட்டது. ஆனால் ஸ்ரீராமுலு குற்றம் ஏதும் இழைக்கவில்லை என்ற முடிவையும் நீதிபதி க்குத் தெரிவித்தது. நடுவர் குழுவின் முடிவின்படி நீதிபதி, தியாகராஜ பாகவதருக்கும், என்.எஸ். கிரு ஷ்ணனுக்கும் ஆயுள் முழுவதும் நாடு கடத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். (இந்தியா சுதந்தரம் அடைந்த பிறகு, 1955 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு, இந்திய தண்டனைச் சட்ட த்திலிருந்து நாடு கடத்தும் தண்டனை நீக்கப்பட்டது).

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தியாகராஜ பாகவதர், என்.எஸ். கிருஷ்ணன் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதி மன்றம் கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து பாக வதரும் கலைவாணரும் ப்ரிவி கவுன்சிலில் இர ண்டாவது மேல்முறையீடு செய்தார்கள். ப்ரிவி கவுன்சில் லண்டனில் இருக்கிறது. இந்தியாவில் உச்ச நீதிமன்றம் நிறுவப்படாத நிலையில், இந் திய உயர் நீதிமன்றங்களுடைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பியவர்கள் லண்ட னில் உள்ள ப்ரிவி கவுன்சிலைத்தான் அணுக வே ண்டியிருந்தது. இந்தியா சுதந்தரம் அடைந்த பின்னர் உச்ச நீதிமன்றம் தோற்றுவிக்கப்பட்டு, ப்ரிவி கவுன்சிலில் மேல்முறையீடு செய்வது நிறுத்தப்பட்டது.

பாகவதர் மற்றும் கலைவாணருடய மேல்முறையீட்டை விசாரித்த ப்ரிவி கவுன்சில், கீழ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை சரியாக நடத்தப் படவில்லை என்று கூறி, வழக்கை மறுவி சாரணை செய்யுமாறு கீழ் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்தியாவில் மறுபடியும் இந்த வழக்கு வி சாரிக்கப்பட்டு, இறுதியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேப்பல் மற்றும் ஷஹாபு தின் அடங்கிய பெஞ்ச் (Division Bench) முன்பு விசாரணைக்கு வந்தது. (இதில் நீதிபதி ஷஹாபுதின் பின் னாளில் இந்தியப் பிரிவினையின் போ து பாகிஸ்தான் சென்றுவிட்டார். அங்கே அவ ர் பதவி உயர்வு அடைந்து இறுதியாக பாகி ஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகி த்தார்). இம்முறை குற்றவாளிகளுக்காக வாதாடியவர் பிர பல வழக் கறிஞர் எத்திராஜ். வழக்கை விசாரித்த புதிய பெஞ்ச், தியாகராஜ பாகவதரையும் என்.எஸ்.கிருஷ்ணனையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இந்த வழக்கு முடியும்வரை பாகவதரும் கலைவாணரும் சுமார் இரண் டரை ஆண்டுகள் சிறையிலிருந்தனர். லட்சுமிகாந்தன் கொலை வழக்கி லிருந்து விடுபடுவதற்கு பாகவதரும் கலைவாணரும் தாங்கள் சம்பா தித்த அனைத்து சொத்துகளையும் செலவு செய்திருந்தனர்.  தியா கராஜ பாக வதர், தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் 12 திரைப் படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்திருந்தார். அவை அனைத்தும் கை நழுவிப் போனது. பாகவதரின் மவுசு காணாமல் போயிருந்தது. அவர் திரைப்பட த்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மேடை கச்சேரிகளில் பாடி னார்.

திராவிட இயக்கம் வளர்ந்துகொண்டிருந்த காலகட்டம் அது. இயக்கத்தின் தலைவராக இருந்த அண்ணாதுரை, தியாகராஜ பாகவதரைத் திராவிட இயக்கத்தில் சேருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு பாகவதர் இணங்கவில்லை. பாகவதர் திரைப்படத்துறையிலிருந்து விலகிய பிறகு , தமிழ் திரைப்படங்கள் வேறொரு தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தது. நாத்திக கொள்கையையும், கடவுள் மறுப்புப் பிரசாரத்தையும் மக்களி டையே சேர்ப்பதற்கு திரைப்படங்கள் பயன்படுத்தப்பட்டன.

பாகவதரால் மீண்டும் உயரத்தைத் தொடமுடியாமலே போய்விட்டது. 1959ம் ஆண்டு, தன்னுடைய 49-வது வயதில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் துறந்தார். கலைவாணர் விடுதலையானபிறகு பல படங்களில் நடித்தார். புதிய நாடகக் கலைஞர்களை உருவாக்கினார். பல கலைஞர்களைத் திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்து வைத்தார். மீண்டும் பாகவதர் போல் இல்லாமல், திராவிட இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1957-ஆம் ஆண்டு தன்னுடைய 48வது வயதில் கலைவாணர் காலமானார்.

லட்சுமிகாந்தனை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் இன்றுவரை மர்மமாகவே நீடிக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

Leave a Reply

%d bloggers like this: