Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கடினமான சூழ்நிலைகளை சமாளிப்பது எப்ப‍டி?

எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகி றோம். ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது. எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும். மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங் கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும். இப்படிப் பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ் வொருவருக்கும் வேறுபடும். அவரவர்களுடை ய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும். சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது. இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள் .இவர்களுக் கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன. அல்ல து அவற்றை வளர்த்துக் கொண்டார்கள். அவை 

எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)

நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம் பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கை யை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறா ர்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகி றார்கள்.

தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார் கள்.

சுய மதிப்பு .(self esteem)

நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம் மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.

கடுமையாக உணர்வதில்லை.(sense of control)

பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை. கடி வாளத்தை கையில் வைத்தி ருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக் கழிக்கப் படுவதில்லை.


நல்லதே நடக்கும் (optimism)


தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோ க்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.

நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)

அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்.

மேலே சொல்லப் பட்ட வை நம்மை நாமே பரி சோதித்துக்கொள்ள சொ ல்லப்பட்டவை தான். இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க் கவும், இல்லாவிட்டால் வளர்த்துக் கொ ள்ளவும் முடியும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply