Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளை ஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ் க்கை முறையில் இவையெல்லாம் இயல் பாகிப் பேனது. அதனால் ஏற்படும் விளைவுக ளோ பயங்கரம்!

ரத்த அழுத்தம் என்றால் என்ன?

ரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தே வையை விட மிக உயர்ந்தி ருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்று கூறுகி றோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவு களை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத் திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை ‘சைலன்ட கில்லர்’ என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப் பட்டது?

1732-ல் ‘ஸ்டீபன் ஹேல்ஸ்’ என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண ‘மானோ மீட்டர்’ என்ற கரு வியை வைத்து அளந்தார். 1896-ல் ‘சிவரோசி’ என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் ‘ஸ்பிக்மோ மேனோ  மீட்டரை’ கண்டு பிடித்தார். 1905-ல் தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்ப தையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனை வரது கவனமும் இதன்மீது திரும்பி யது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத் தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல் லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந் தால் அந்த நோயாளியை மேற் கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயி ருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண் டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை ‘ரத்த அழுத்த நோயாளி’ எனக் கூற லாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வ ரை.

2. 106 முதல் 115 வரை.

3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித் திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கு ம்.

எதனால் ரத்த அழுத்தம அதிகமாகி றது?

1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கி றது. இதற்கான காரணம் துல்லிய மாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.

2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பே ரை முழுமையாகக் குண ப்படுத்த வாய்ப்பு ள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அக ற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற் றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந் நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இத னால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறை தல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழு தடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோ தனைகள் செய்யப்படும்?

முதலில் சிறுநீர் பரிசோதனை செ ய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழு தடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதா க ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத் த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய் களும் வரும் வாய்ப்புகள் அதிகம். ‘ஈ.சி. ஜி.’ என்பது இதயம் எந்த அள வுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்ப தை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய ‘எக்ஸ்ரே’ பரிசோதனை உதவும். ‘எக்கோ’, ‘ஆஞ்சியோகிராம்’ போ ன்ற பரிசோதனைகளைக்கூட செய்துபார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடை யே உள்ள வேறுபாடு என்ன?

கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் ‘பிரி-எக்லாம்சியா’ என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடை பவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முத ல் முறையாக கர்ப்பமடைந்த பெண் களுக்கு 6 முத ல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இரு க்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவ ர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளி யேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய் யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதி ப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கி றார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறி வுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத் தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத் துவரின் ஆலோ சனைப்படி செயலாற்றுங் கள். உப்பு அதிக முள்ள ஊறுகாய், கரு வாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்க ச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக் கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண் ணெய் போன்ற கொழுப் புச் சத்து மிகுந்த உணவுப் பொருட் களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிக ளை உண்டு பண்ணக் கூடும். தொட ச் சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற் கொள் ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவது டன் அழுத்தத்தையும் குறைக் கும். புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்து ங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயி னால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனை யின்றி அவர் சிபாரி ச்செய்யும் மருந்து களின் அளவை நீங்களாகவே குறை க்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடை யை குறையுங் கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அள வை முறை யாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு மு றை எழுதிக் கொ டுத்த மருந்தை வாழ் நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென் று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

ஹோமியோ மருந்துகள்:

RAUWOLFIA Q, CRATAE-GUS Q, ADONISVER Q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப் படையில், நீரில் கலந்து குடிக்கலாம். DIGITALIS, CACTUS BERBERIS VULGARIS போன்ற மாத்திரைகளை யும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமி யோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்து களை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக் கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (MOTHER TINCTURES) கல வைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற் றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.

– டாக்டர் ப.உ. லெனின்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: