Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறிவைக்கப்படும் குடும்பம்?

”முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வி நடத்தும் டெ லிகாம் நிறுவனம் எனக்குப் பணம் தர வேண்டும். அதைக்கேட் டால், பல்வேறு மட்டங்களில் இருந்தும் எனக்குக் கொலை மிரட் டல்கள் வருகின்றன…” எனக் கடந்த 11-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், பீகார் மாநிலம் ரோத்தாஸ் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் திவிவேதி என்ற சாஃப்ட்வேர் நிறுவன அதி பர் அதிரடிப் புகார் கொடுக்க… கோபாலபுர ஏரியாவில் புதிய கிடு கிடுப்பு!

புகார் கொடுத்துள்ள சஞ்சீவ் குமார் திவிவேதி யிடம் பேசினோம். ”2009-ம் ஆண்டு தமிழகத்தில் பிரபல மான இரண்டு வர்த்தக நிறுவ னங்களைச் சேர்ந்த இருவர் என்னைச் சந்தித்து, ‘ஐஸ் டெலிகாம்’ என்ற கம்பெனியின் வர்த்தகம் குறித்துப் பேசினார்கள். பிறகு சென் னை கோட்டூர்புரம், ரஞ்சித் ரோட்டில் உள்ள ஐஸ் டெலிகாம் நிறுவ னத்தின் தலைமைச் செயல் அதிகாரி

ஷ்யாமைச் சந்திக்க அழைத்துச் சென்றனர். அந்த நிறுவனம் அப் போதைய முதல்வர் கருணாநிதியின் மகள் செல்விக்குச் சொந் தமானது என்பதை அவர்கள் கூறிதான் அறிந்துகொண்டேன். தங்க ளது நிறுவனமும் இந்த ஐஸ் டெலிகாம் நிறுவனமும் இணைந்து, 3ஜி மற்றும் 4ஜி மொபைல் டவர்கள் மற்றும் நெட்வொர்க்கிங் பணி கள் நிறைவேற்றுவதற்காக 3,250 கோடிக்கு தென் மாநில டெண்ட ரைப் பெற்று இருப்பதாகக் கூறினர். தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பெயரைச் சொல்லி… நாடு முழுவ தும் இதுபோல 40 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் பெற்று இருப்பதா கவும் கூறினார்கள். எனக்கு சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பு உண்டு. என் மூலமாக கூடுதல் விலை வைத்து, அந்தத் தென் மாநில டெண்ட ரை 4,000 கோடிக்கு விற்க முடி வெடுத்தனர். இதற்கு, கமிஷன் தொகையாக எனக்கு 60 கோடி தருவதாகச் சொன்னார்கள். அதற்கான கடிதமும் கொடு த்தனர். இதைத் தொட ர்ந்து, உரிய நிறுவனங்களுடன் பேசி ஒப்பந் தத்துக்கு ஏற்பாடு செய் தேன். என் அழைப்பை ஏற்று, மொபைல் போன் டவர் நிறுவும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சென் னைக்கு வந்தனர். அவர்கள் என் விருந்தினர்களாக ஸ்டார் ஹோட் டல்களில் தங்கி னர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் மற்றும் சிலரோடு அவர் களைச் சந்திக்கவைத்தேன். வெளி நாட்டினர் தங்கியது உள்ளிட்ட அனைத்துச் செலவுகளையும் நானே கவனித்துக் கொண்டேன்.

இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு கையெழுத்து ஆவதற்கு முன், 2ஜி பிரச்னை பெரிதாகி இந்திய அரசியலையே பரபரக்க வை த்தது. அதோடு, ஆ.ராசாவும் கைது செய்யப்பட்டார். இந்த நிலை யில், செல்வி மற்றும் ஷ்யாம் உள்ளிட்ட அனைவரும் அந்த ஒப்பந் தத்தில் இருந்து விலகிக்கொண்டதுடன், தொகை அளிக்கப் படாத பில்களை என்னிடம் விட்டுச் சென்றுவிட்டனர்.

ஷ்யாம் மற்றும் செல்வியை சந்திக்க பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. டெல்லிக்குச் சென்று ஆ.ராசாவை நண்பர் ஒருவர் மூலம் சந்தித்தபோது, அவரும் கை விரித்துவிட்டார். ஒரு வழி யாக கனிமொழியைச் சந்தித்தேன். பிரச்னையை முடித்துத் தரு வதாக அவர் கூறினார். ஆனால் அதன் பிறகு பல ரவுடிகள் என் னைத் தேடி வந்து மிரட்டினர். இதனால், என் குடும்பத்தினரை பீகா ருக்கு அனுப்பிவைக்கும் சூழல் ஏற்பட்டது. இப்போது நான் தனி யாகவே வாழ்கிறேன். கடந்த ஒரு வருடமாகவே தி.மு.க-வினரி டம் இருந்து எனக்குத் தொடர்ந்து கடுமையான மிரட்டல்கள் வரு கின்றன. எனவேதான் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத் தேன்.

எனது சாஃப்ட்வேர் நிறுவனத்தைக்கூட கவனிக்காமல் இவர்களுக் காக இரவு பகலாக அலைந்தேன். அதனால் என்னுடைய சொந்த நிறு வனத்திலும் நஷ்டம் ஏற்பட்டு, இப்போது நான் குடும்பச் செல வை சமாளிக்கவே திண்டாடுகிறேன். ஆனால், நான் செலவு செய்த தொகையைக் கொடுக்கக்கூட இவர்களுக்கு மனது இல்லை யே…” என விரக்தியுடன் முடித்தார்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்க செல்வியைத் தொடர்புகொண்டபோது, ”சஞ்சீவ்குமார் திவிவேதி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. மேலும், ஐஸ் டெலிகாம் நிறுவனத்து டன் எனக்கு எந்த விதமான வணிகத் தொடர்புகளும் கிடையாது. அப்படி இருக்க யாரோ சிலரின் பேச்சுக்களை நம்பிக்கொண்டு என் மீது அபாண்டக் குற்றச்சாட்டை அள்ளி வீசுகிறார் அந்த மனிதர். என து பெயருக்கு களங்கம் கற்பிக்க முயன்ற காரணத்துக்காக, வழக்கறிஞர் மூலமாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறே ன். அந்த நோட்டீஸில் உள்ளதுதான் என் கருத்து” என்றார்.

செல்வியின் வழக்கறிஞர் ரவீந்திரன், சஞ்சீவ்குமாருக்கு அனுப் பியுள்ள நோட்டீஸில், ”எனது கட்சிக்காரர் செல்விக்கு அந்தப் புகாரில் குறிப்பிடப் பட்டுள்ள நபர்களுடன் எந்தவிதமான வணிக தொடர்புகளும் கிடையாது. பொய்ப் புகாரை வாபஸ் பெறாவிட்டா ல், சட்ட ரீதியாகக் கடும் நடவடிக்கை எடுப்போம்” என்று கூறி யுள்ளார்.

”ஐஸ் டெலிகாம் நிறுவனத்துடன் தனக்கு வணிகத் தொடர்பு இல் லை என்று செல்வி கூறுகி றாரே?” என சஞ்சீவ்குமார் திவிவேதியி டம் மீண்டும் கேட்டபோது, ”அந்த நிறுவனத்தின் தலைமை அதி காரி ஷ்யாமுடன் செல்விக்கு நன்கு அறிமுகம் உண்டு. இன் னொரு நபரின் பெயரில் அந்த நிறுவனத்தை நடத்துவது செல்வி தான்” என்றார் உறுதியாக. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி மீண்டும் கமிஷனர் அலுவலகத்துக்கு சஞ்சீவ்குமார் திவிவேதியை அழை த்த போலீஸார், அவரிடம் ஆடியோ வாக்குமூலம் வாங்கி இருக்கி றார்களாம்.

‘கைதுப் படலம் முடியவில்லை’ என்று முதல்வர் ஜெயலலிதா கூறியது சரிதான். ‘மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் இளைய மரு மகன் விவேக் ரத்னவேலு விரைவில் போலீஸ் வளையத் துக்குள் வரலாம்’ என்று ஒரு தகவல் கசியவே, விசாரணையில் இறங்கினோம். சென்னை சூளைமேட்டில் இருக்கும் சித்ரா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமை யாளர் கோவிந்தராஜன், அழகிரி மருமகன் மீது சென்னை போலீ ஸில் புகார் கொடுத்து இருக்கிறார். கொந்த ளிப்பில் இருக்கிறார் கோவிந்த ராஜன்… ”20 ஆண்டுகளா கக் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 2008-ம் ஆண் டு பெருங் குடி டோல்கேட் அருகில் 27 கிரவுண்டு நிலம் வாங்கி னேன். அடுத்த சில நாட்களில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் இளைய மருமகன் விவேக் ரத்னவேலு தலைமையில் அடியாட் கள் என் நிலத்தில் நுழைந்து, செக்யூரிட்டி ஆட்களை அடித்து விரட்டினார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தார் கள். உடன டியாக துரைப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தேன். ஆனால், நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன், என் நிலத்தில் அவரது ஆட்களை நிறுத்தி இருந் தார். நான் எனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் மன்ன னை சந்தித்தேன். அப்போது, ‘அந்த இடத்தில் விவேக் ரத்னவேலு ஒரு ஸ்டார் ஹோட்டல் கட்டப்போகிறார். அதனால் நாங்க கொடு ப்பதை வாங்கிக்கிட்டுப் போயிடு’ என்று மிரட்டினார். அடுத்து தி. நகர் ரெஸிடென்சி ஹோட்டலில் தங்கி இருந்த விவேக் ரத்ன வேலு, பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘ 10 கோடி கொடுத்தால், நிலத்தைக் கொடுத்துடுறேன்’ என்று சொன்னா ர். நான் ‘அவ்வளவு முடியாது. ஐந்து கோடியை… அதுவும் மாதம் ஒரு கோடி என ஐந்து மாதங்களில் தருகிறேன்’ என்று கூறினேன்.

அதற்கு சம்மதித்தவர், மறுநாளே என் அலுவலகத் துக்கு வந்து ஒரு கோடி பெற்றுக் கொண்டார். அன்றே அவரது ஆட்களும் என் நில த்தில் இருந்து வெளியேறினார்கள். ஆனால், இரண்டாம் நாளே மீண்டும் அவரது அடியாட்கள் என் நிலத்தில் புகுந்தனர். திரும்ப வும் அவரைச் சந்தித்தேன். ‘உடனே, மூன்று கோடி வேண்டும். இல்லாவிட்டால் உன் நிலம் உனக்குக் கிடைக்காது’ என்றார். வட்டி க்கு கடன் வாங்கி 1.35 கோடி கொடுத்தேன். மீதி 1.65 கோடிக்கு விவேக் ரத்னவேலுவின் பினாமியான ரபீக்கிடம் நான் கடன் வாங்கியதுபோல ஒரு புரோநோட்டில் கையெழுத்து வாங்கிக் கொ ண்டு என் நிலத்தை என்னிடம் ஒப்படைத்தார். சில நாட்கள் கழித்து 1.65 கோடியை பணமாகக் கொடுக்கச் சென்ற போது, ‘பணம் ஏன் லேட்?’ என்று கேட்டு என்னை சிறைவைத்தவர், சூளைமேட்டில் இருக்கும் 50 லட்சம் மதிப்புள்ள எனது பிளாட்டை அவருடன் இருக்கும் ஆனந்த் என்பவர் பெயரில் எழுதி வாங்கிக் கொண்டார். எனது நிலத்தில் சுமார் 1 கோடி மதிப்புக்குக் கட்டடத் தளவாடங்கள் இருந்தன. அதையும் விற்றுவிட்டார்கள். தொடர் ந்து விவேக் ரத்ன வேலுவால் பிரச்னை வரும் என்று பயந்து, நான் அந்த இடத்தை விற்றுவிட்டேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விவேக் ரத்னவேலு, அவருடன் இரு க்கும் பயஸ், ரபீக், பெருமாள் உடை யார் உட்பட ஏழு பேர் மீது கடந்த ஜூலை மாதம் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். முதல்வரின் தனிப் பிரிவுக்கும் புகார் அனுப்பினேன். கைதுக்குப் பயந்து அவர் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் இங்கே வருவார் என்கிறார்கள். அவர் என்னிடம் பறித்த பணத்துக்காக மட்டும் அல்ல… அவர் செய்த அடாவ டிக்கும் சேர்த்து கூண்டில் ஏறி பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்கிறார் கோபமாக.

விவேக் ரத்னவேலுவைத் தொடர்புகொள்ள முயற்சித்தோம். இய லவில்லை. அவர் விளக்கம் அளித்தால் பிரசுரிக்கத் தயாராக இரு க்கிறோம். மதுரை முன்னாள் துணை மேயர் மன்னனும் பேசத் தயாராக இல்லை. விவேக் ரத்னவேலுவுக்கு நெருக்கமானவராக சொல்லப்படும் பெருமாள் உடையாரிடம் பேசியபோது, ”விவேக் ரத்னவேலு யார் என்றே எனக்குத் தெரியாது. அவரை நான் பார்த் ததுகூட இல்லை. அந்தப் புகாருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” என்றார்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் பேசினோம். ”கோவி ந்தராஜன் கொடுத்த புகாரை விசாரணைக்காக அடையாறு துணை ஆணையருக்கு அனுப்பி இருக்கிறோம். விசாரணையில் தவறு செய்திருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக நடவடிக்கை இருக்கு ம்” என்றார்.

– தி.கோபிவிஜய்

***

மதுரை மாட்டுத்தாவணி அருகே இருக்கும் அழகிரிக்குச் சொந்த மான ‘தயா சைபர் பார்க்’ என்ற கட்டடம் ஆக்கிரமிப்புச் சிக்கலில் மாட்டி இருக்கிறது. சுமார் 1.20 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் கட்டடத்துக்காக மாநகராட்சியின் எட்டு சென்ட் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையருக்கு, ஏற்கெனவே ஒரு கடிதம் எழுதினார் கலெக்டர் சகாயம். அப்போது, ‘மாநகராட்சி அனுமதி பெ ற்று உள்ளோம்’ என்று அழகிரி தரப்பில் சொன்னார்கள். ஆனால், அனுமதி கொடுக்கப்படவில்லை என்பதை உறுதி செய்த மாநக ராட்சி தற்போது அழகிரிக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்களுக்குள் பதில் சொல்லியாக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இன் னொரு பக்கம் உள்ளூர்த் திட்டக் குழுமத்திடம் அப்ரூவல் வாங் கியதற்கு மாறாகவும், சில கட்டுமானப் பணிகளை செய்து இருக் கிறார்களாம். அதுவும் சிக்கல் ஏற்படுத்தும் என்கிறார்கள் மாநக ராட்சி அதிகாரிகள்!

– குள.சண்முகசுந்தரம்

Thanks to Amanushyam

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: