Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள யூடியூப்

சர்வதேச அளவில், வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப், தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கு கிறது. 2005ம் ஆண்டில், பே பால் நிறு வனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம், தமக்குப் பிடித்தமான வீடி யோக்களை அப்லோட் செய்து பார் ப்பதோடு மட்டு மல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வரு கிறது. இதன்மூலம், வீடியோ பிரி யர்களின் ஏகோபித்த ஆதரவினை, யூ டியூப் பெற்றுள்ளது என்று கூறி னால், அது மிகையல்ல. இந்நிலையில், மேலும் ஒரு வரப் பிரசா தமாக, யூடியூப், பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ள தாக தெரிவித்துள்ளது. 

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவன ங்கள், தங்களது வீடியோ படைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்து அதன்மூலம் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் (ஐபி ஆர் எஸ்), யூடியூப்புடன் இதற் கான புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கையெ ழுத்திட்டுள்ளது. 

முன்னணி பாடலாசிரியர்களான ஜாவேத் அக்தர், பங்கஜ் உத்தாஸ் உள்ளிட்டோரும், முன்னணி இசை நிறுவனங்களான ஈரோஸ் மியூசிக் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், எம்கே புரொடெக்சன்ஸ் உள்ளிட்ட 2,233 உறப்பினர்கள் இந்த இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர். 

தற்போதைய அளவில், யூடியூப் இணையதளத்தில் உள்ள விளம் பரங்களின் மூலம், அந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்து வரு கிறது. ஐபிஆர்எஸ் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், இசைய மைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் தங்களது வீடியோ ப‌டைப்புகளை யூ டியூப் இணைய தளத்தில் போஸ்ட் செய்வதன் மூலம், அவர் களுக்கும் கணிசமான தொகை வழங்க யூடியூப் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply