தாரமும் குருவும் தலை விதிப்படி எனும் எம் ஆன்றோரின் வாக்கிற்க மைவாக எம்மை விட மேலான சக்தி ஒன்றின் மூலம் தான் எம் ஒவ்வொரு வரினதும் இல் வாழ்க்கைத் துணையின் தெரிவும் இடம் பெறுகின்றது. இரு மனம் சேர்ந்து ஒரு மனதாக தீர்மானம் மேற் கொண்டு இடம் பெறும் நல் வைபோகம் திருமணம் என்று நாம் கூறினாலும் இரு மனங்களும் இணைந்த ஏகமனதான தெரிவு இடம் பெற ஏதோ ஒரு கார ணி ஏதுவாகஅமைந்து கொள்கின்றது. எம் மை நம்பி வீட்டிற்கு இல்லாளாக காலடி எடுத்து வைக்கும் துணைவியரை நமது அன்பினால் அரவணைத்து அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை ஆண்கள் அனை வருக்கும் உள்ள மிக முக்கியமான செயலாகும்.
இனி நாம் இப் பதிவினூடாக “திருமண ஆன ஆண்களுக்கும், திருமணம் ஆகப் போகும் ஆண்களுக்கும்”மிகவும் பயன்மிக்க சில விடயங்களை ஆராய்ந்து பார்ப்போமா?பெரியவர்களின் ஆசிர்வாதத்துடனோ அல்லது திருட்டுத் தனமாகவோ திருமணம் இடம் பெற்றாலும் பெண்ணைப் பூப் போல மென்மையாக கண் கலங்காது பார்க்க வேண்டும் என்று
பெரியவர்கள் கூறுவார்கள். பெண் ணை மனதளவிலும், உடலளவிலும் திருப்திப்படுத்துவது தாம்பத்தியம் மட் டும் தான் எனப் பலரது மனங் களில் கருத்துக்கள் இருக்கும் இக் காலத்தில் எம் அன்பான பேச்சின் மூ லமாகவும், எம் ஒவ்வோர் செயல்கள் மூலமாகவும், மனைவியின் மன உணர்வினைப் புரிந்து கொண்டு நாம் நடந்து கொள்ளும் முறைகள் மூலமா கவும் மனைவியை மகிழ்ச்சிப்படுத் தலாம் என மணமான பெரி யவர்கள் பலர் சொல்கின்றார்கள். நாம எம் பொண்டாட்டியை அன்பாகத் தானே கூப்பிடுறோம்! இவன் என்ன புதுசா சொல்லுறான் என்று? உங்களில் பலருக்கு ஒரு டவுட் தோன்றலாம்.
தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் “என்னங்க” எனும் வார்த்தையி னைக் கேட்டுப் பலரது மனைவிமார்களின் காதுகள் புளித்துப் போயிருக்கும். இந்த என்னங்க எனும் வார்த்தைக்கு நிகராக ஈழத்தில் மிகவும் பிரபலம் பெற்றிரு க்கும் வார்த்தை தான் “இஞ்சாருங்கோ! “இஞ்சா ருங்கோ! இஞ்சாருங்கோ என் று செல்லம் பொழிந்து மனைவி கணவ னை கூட்டத்தின் மத்தியில் மெதுவாக இடுப்பில் சுரண்டி/ கிள்ளி அழை க்கும் போது அவன் கொஞ்சம் வெறுப்போடு கூடிய பார்வையினை வீசி,
நம் நாடுகளில் பொதுவாக “இஞ்சாருங்கோ”, “மாமா”, “அத்தான்”, “செல்
லம்”, “படவா”, “ராஸ்கல்”, “குட்டி”, “ஹனி (Honey)” “ஓய், / ஏய்”; “அப்பா “, “மச்சான்”, “மச்சினன்”, எனப் பல சொற்களைப் பெண்கள் கையாண்டு தம் ஆசை நாயகன் மீதுள்ள அன்பி னைப் பல்வேறு வடிவங்களில் வெளி ப்படுத்திக் கொள்வார்கள். “ஏலேய் மாமா! என்ன பண்ணிக்கிட் டிருக்கி றாய்?” என்றும்,
“என்னோட ஆசை அத்தானில்லே! உன்னை நினைச்சாலே உள்ளம் குளிருதடா!” எனவும், “என்னோட செல் லமெல்லே! என் மாம்பழமெ ல்லே! என் ஹனியெல்லே! என் செல்லக் குட்டியெல்லே!”எனவும் தம் அன் பினைப் பெண்கள் வெளிப்படுத்துவா
ர்கள். ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை ஈழத்திலும், இந்தியாவிலும் கணவன் மனைவியருக் கிடையிலா ன நெருக்கத்தினை வெளிப்படு த்தும் வகையில் நடை முறையில் இருக்கு ம் பொதுவான சொல் தான்; “என்னங் க!” மற்றும் “இஞ் சாருங்கோ!”
ஆனால் இன்று வாழும் இளைய தலை முறையினர் மத்தியில் பிரபல் யமான வார்த்தைகள் தான் செல்லம், ஹனி, அத்தான், மாம்பழம், கண் ணே! கனியே! மச்சானே எனும் வார்த் தைகளாகும். ஆண்களிடம் உள்ள ஒரு இழிவான குணம் என்ன தெரி யுமா? பொது இடங்களில் வைத்து மனைவியைப் பேசினால் தாம் ஏதோ
வீரப் புருஷர்கள் என ஊரில் உள்ளோர் நம்புவார்கள் என நினைத்து தம் வீர தீர த்தைப் பொது இடங்களில் காட்ட முனை வது. பல பேர் குழுமி நின்று பார்க்கும் ஒரு கோவில் திருவிழாவில் “ஏலேய் மாமா! எனக்கு அந்த வைரக் கல்லுப் பதி ச்ச தோடு வாங்கித் தாறியா?” என்று கேட்டால்! ஆண் மகனோ தன் சேர்ட் காலரைக் கொஞ்சம் இழுத்து விட்டு, “எடி யேய் பஞ்ச வர்ணம்! உனக்குச் சொன் னாப் புரியாது! கொஞ்சம் பொத்திட்டு இருக்கிறியா? நீ திருவிழாப் பார்க்க வந்த னியா? இல்லே பாக்கட் மணிக்கு வேட்டு வைக்க வந்த னியா?” என்று திட்டுவார்கள்!
கண்ணே! கரும்பே! கனியே! தே னே! மானே என்று நீங்கள் விரும் பும் வகையில் அழைக்கலாம். இல் லையே என்னடா செல்லம் நீ என் னைக் கூப்பிட்டியா என்றும் அழை க்கலாம். இல்லையே உங்களை மாமா என்று பொது இடத்தில் துணைவி கூப்பிடும் போது டார் லிங் என்றோ இல்லை செல்லம் என்றோ நீங்கள் பதிலுக்கு அழை த்து மகிழலாம் அல்லவா? அத்தான் என்று உங்களை அன்பாக அழைக் கும் துணைவியை நீங்கள் மச்சாள் என்று பதிலுக்கு அழைத்துப் பாரு
ங்கள்!அவள் முகம் ஆயிரம் வா ற்ஸ் பிரகாசமுடைய மின் விளக்கு வெளிச்சத்திற்கு ஒப்பானதாக மாறி விடுவதனைக் காணுவீர்கள். “கட்டி லறையிலும், வீட்டினுள்ளு ம் தான் நாம இப்படிக் கூப்பிடு வோம். பொது இடங்களில் பெண் ணைப் பெயர் சொல்லி அழைப்பது தானே ஆண்மைக்கு அழகு” என நினைப்போர் இன்று முதல் உங் களைக் கொஞ்சம் சேஞ் பண்ணிக்கலாம் அல்லவா?
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்