Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீனாப்பெண்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ள புதிய விவாகரத்து சட்டத் திருத்தம்

சீனாவில் சமீபத்தில் விவாகரத்து சட்டத்தில் செய்யப்பட்டுள்ள புதிய திருத்தம், அங்குள்ள பெண்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியு ள்ளது. இச் சட்டத் திருத்தத்தால், பெண்கள் பெருமளவில் பாதிக்க ப்படுவர் என, நிபுணர்கள் கருதுகி ன்றனர். இந்தியாவைப் போலவே சீனா விலும், கூட்டுக் குடும்ப வாழ் க்கை தான் இருந்தது. ஆனால், கடந்த பல ஆண் டுகளாக அங்கு, கூட்டுக்குடும்ப வாழ்க்கை சிதறிய து. தொடர்ந்து தனிக் குடித் தனம் துவங்கியது. மேலும், அபரிமித மான பொருளாதார வளர்ச்சியால், பல் வேறு சிக்கல்களும் தோன்றியுள்ளன.
 
அதிகரிக்கும் விவாகரத்து: ஒரு காலத்தில் சீனாவில், விவாகரத்து என் பது மோசமான வார்த்தையாகக் கருதப்பட்டது. இன்று அதே சீனாவில், மாறி வரும் பொருளாதாரச் சூழலில், விவாகரத்து மளமளவென அதி கரித்து வருகிறது. இந்தாண்டின் கடந்த ஒன்பது மாதங்களில் மட்டு ம், 28 லட்சம் தம்பதியர் விவாகர த்து கோரி விண்ணப்பித்துள்ளனர். பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்க ளில் கடந்த ஐந்தாண்டுகளில், வி வாகரத்து 7 சதவீதம் அதிகரித் துள்ளது. மொத்தத்தில், நாட்டில் விவாகரத்து பெறுவோரின் எண் ணிக்கை, தற்போது 17.2 சதவீதமா க அதிகரித்துள்ளது. அதாவது, சீன பொது விவகார அமைச்சகத்தின் கணக்குப்படி, சராசரி யாக ஒரு நாளைக்கு, 10 ஆயிரம் விவாகரத்துகள் நடக் கின்றன.

புதிய சட்டத் திருத்தம்: இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி, விவாகரத்து சட்டத்தில் ஒரு திருத்தத்தை அறிவித்தது. அதன் படி, விவாகரத்து பெற்ற பின், அந்தத் தம்ப தியர், ஒரே வீட்டில் வசிக்க முடியாது. அல்லது அந்த வீட்டை பாதியாகப் பிரி த்துக் கொள் ளவும் முடியாது.

வீடு கிடையாது: இருவரில், யார் அந்த வீட்டைச் சொந்தமாக வாங்கியுள்ளா ரோ, அவர் மட்டும் தான் அந்த வீட்டில் இருக்க முடியும். மற்றவர், அதை விட்டு வெளியேறிவிட வேண்டும். அதாவது கணவன், தனது கா சில் சொந்தமாக வீடு வாங்கியிருந்தால், விவாகரத்து பெற்றபின், அந்த வீட்டின்மீது மனைவி உரிமை கொண்டாட முடி யாது.

பெண்களுக்கு பாதிப்பு: இந்த சட்டத் திருத்தத்தால், அதிகம் பாதிக்கப் படுவது பெண்கள் தான். சீனா வில் பாரம்பரியமாக, கணவன் அல்லது அவரது பெற்றோர் தான் ஒரு வீட்டை சொந்தமாக வாங்கு வர். ஆனால், சமீப காலமாக பொருளாதார வளர் ச்சி என்ற பெயரில், வீடு மற்றும் நிலத்தின் விலை விண்ணை முட்டிவிட்டது. இதனால், பெண்கள் பலர் சொந்தவீடுள்ள ஆணையே திருமணம் செய்து வருகின்றனர். இந்த புதிய விவாகரத்து சட்டம், ஆண்களுக்குத் தான் சாதகமாக உள்ளது. சொந்த வீடுள்ள கணவனிடம் இருந்து வலுக்கட்டா யமாக, மனைவி வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பெயரளவில் பெண் உரிமை: யாங்யி யான்,31, என்ற பெண் இதுகுறித்துப் பேசும் போது,”எங்களுக்குத் திரும ணம் ஆகும் முன்பே, எனது முன்னா ள் கணவர், ஒரு அபார்ட்மென்ட் வா ங்கியிருந்தார். சமீபத்தில் எங்களுக் கு விவாகரத்தும் ஆகிவிட்டது. தற் போதைய திருத்தப்பட்ட சட்டத்தி ன்படி, எனக்கு அந்த வீட்டில் உரிமை இல்லை. அதாவது, நான் வீடிழந்தவ ளாகி விட்டேன். எனினும், எனது சேமிப்பை வைத்து ஓரளவுக்கு சமாளி த்து வருகிறேன். ஆனால், நான் ஒரு இல்லத்தரசியாக (ஹவுஸ் ஒய்ப்) இருந்திருந்தால் கஷ்டம் தான்’ என்றார்.

சீனாவின் நீதித் துறையில், 13 ஆண் நீதிபதிகளுக்கு ஒரு பெண் நீதிபதி என்ற அளவில் தான், பெண் உரிமை உள்ளது. அதே போல் தான், குடும்ப விவகாரங்களிலும் பெண் உரிமை என்பது, வெறும் ஏட்டளவில் தான் இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: