Monday, August 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது – குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வர தட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதா க பிரசாந்த்தை கோர்ட்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம் தன்னந்தனியாக புலனாய்வு செய்த பிரசா ந்த் (ஹீரோவாச்சே) கிரக லட்சுமி ஏற் கனவே திருமணமானவர் என்பதை கண்டு பிடிக்க, அதன் பின் நடந்தது எல் லாமே தலை கீழ் ஆட்டம்.

பிரசாந்த் முன்ஜாமீன் வாங்க அலைந்தது போக, ஓடி ஒளியவேண்டிய நிலைக்கு ஆளானார் கிரகலட்சுமி. அவருக்கு ஏற்கன வே திருமணமாகி விட்டது என்பதை நிரூ பிக்க தனி வழக்கு போட்ட பிரசாந்த், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இந்த வழக்கின் தன்மையை முத லில் இருந்தே பார்ப்போம்.

நடிகர் பிரசாந்த்-கிரகலட்சுமி திருமணம் 2005-ம் ஆண்டு நடை பெற்றது. கிரகலட்சுமி ஏற்கனவே திருணமானவர் என தெரிய வந்த தும் 2007-ம் ஆண்டு பிரசாந்த் கிரக லட்சுமியை விட்டு பிரிந்தார். திரும ணம் செல்லாது என அறிவிக்க 2009 -ல் குடும்ப நல நீதிமன்றத்தில் பிரசா ந்த் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லா து என தீர்ப்பு கூறினர். 

அதைத் தொடர்ந்து தன்னை பிரசாந் துடன் இணைத்து வைக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்மனு இன்று தள்ளு படி செய்து குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: