Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஊனம் ஒரு தடையல்ல‍ – வீடியோ

எல்லி கேலிஸ் என்ற ஏழு வய து சிறுமி மூளை க்காய்ச்ச லால் பாதிக்கப் பட்டு கால்கள் வெட்டி யெடுக்கப்பட்ட பின்பு செயற் கைக் கால்கள் பொருத்தப்பட் டன. இந்த செயற்கை கால்கள் அசையும் மூட்டுக்க ளைக் கொ ண்டிருப்பதால் எலில் உற்சாக த்துடன் கால்பந்து விளையாடு கிறாள். மேலும் சக மாணவிக ளுக்கு கால்பந்தாட்டப் பயிற்சி யும் அளிக்கிறாள்.

2005ம் ஆண்டு யூலை மாதம் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எல்லி கேலிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை தொட ங்கிய சில மணி நேரத்தில் அவளது இதயம் நின்றுவிட்டது.  உடனே அவ ளின் தாயும் தந்தையும் கதறி அழுதனர். அவள் இறந்து விட் டாளோ என்று நினைத்த வேளையில் அவள் இதயம் துடிக்கத் தொட ங்கியது. அடுத்த நான்கு நாட்களில் காலும் கையும் கருத்துவிட்டது. எனவே அவ ற்றை உடலிலிருந்து நீக்கிவிட்டனர். பின்பு சாதாரண செயற்கை கால் கள் பொருத்தப்பட்டன.

தினமும் அவற்றை 20 நிமிடம் பொருத்தி வலியோடு நடந்து பார்த்தாள். டிசம்பர் 2006ல் அசையும் மூட்டுக்களைக் கொண்ட செயற்கை கால் எல்லிக்குப் பொருத்தப்பட்டது. பின்பு 2009 ஏப்ரல் மாதத்தில் கார்பன் இழைகள் கொண்ட எடை குறைவான மற்றும் விளையாடுவதற்கு வசதி யான செயற்கைக் கால் பொரு த்தப்பட்டது. இதன் பின்பு இவள் மற்ற சிறுவர், சிறுமியரைப் போல் ஓடியாடி விளை யாட முயன்றாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பள்ளிக்கான கால்பந்தாட்ட விளை யாட்டுக் குழுவில் சேர்ந்து மற்றவர்களைப்போல அற்புதமாக விளையா டுகிறாள். சக மாணவிகளுக்கு விளையாடப் பயிற்சியளிக்கிறாள்.  ஆர் செனல் என்ற கால்பந்தாட்ட குழு மீது இவளுக்கு ஆர்வம் அதிகம். தன் தந்தையோடு உட்கார்ந்து தொலைக்காட்சியில் கால்பந்தாட்டத்தை ரசித்து பார்ப்பாள். இப்போது நோய்த் தாக்குதலின் சவால்களைச் சந் தித்த சாதனையாளராகி விட்டாள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: