Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

96 சிற்றிலக்கியங்கள்

தமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கிய ங்கள் 96 வகைப்படும் எனச் சொல் வது மரபாகும். சிற்றிலக்கியங்களின் இலக்கணத்தைப் பாட்டியல் நூல்கள் வரையறை செய்கின்றன. 96 வகை ப் பிரபந்தங்கள் என்ற எண்ணிக்கை எந் த நூலிலும் நிறைவாக விளக் கப்பட வில்லை. இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்னும் முறைப் படி இவ்விலக்கிய நூல்களுக்கு இலக் கணம் கூறுமுற்படுபவை பாட் டியல் நூல்களாகும்.

தொல்காப்பியத்தின் அகப்புறத் துறைகளுள் பல பிற்காலத்தில் தனிச் சிற்றிலக்கியங்களைாக வளர்ச்சிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இலக்கிய வகை – பொருள்

1. அகப்பொருள் கோவை – களவு, கற்பு முதல் கரு உரி அகம்.
2. அங்கமாலை – ஆண், பெண் அங்கங்கள்.
3. அட்டமங்கலம் – கடவுள் காக்கப் பாடுதல்.
4. அநுராகமாலை – தலைவன் தன் கனவைப் பாங்கர்க்குக் கூறுதல்.
5. அரசன் விருத்தம் – மலை, கடல், நாடு, நில வருணனை, வாள்,தோள்மங்கலம்.
6. அலங்கார பஞ்சகம் – –
7. ஆற்றுப்படை – பரிசில்பெற்ற கலைஞர் பெறவிரும்புபவரை ஆற்றுப்படுத்துவது.
8. இணைமணி மாலை – –
9. இயன்மொழி வாழ்த்து – குடி இயல்பு, அரசன் இயல்பு கூறி பொருள் வேண்டல்.
10. இரட்டை மணிமாலை – –
11. இருபா இருபஃது – –
12. உலா – தலைமகன் உலாவை எழுபருவ மகளிர் கண்டு களித்தல்.
13. உலாமடல் – கனவில் பெண் இன்பம்.
14. உழத்திப்பாட்டு – பள்ளர், பள்ளியர் – உழவு- சக்களத்தி சண்டை.
15. உழிஞைமா – மாற்றார் ஊர்ப்புறம் – உழிஞை சூடி முற்றுகை.
16. உற்பவ மாலை – திருமாலின் பத்து பிறப்பு.
17. ஊசல் – வாழ்த்துதல்.
18. ஊர் நேரிசை – பாட்டுடைத் தலைவன் ஊர்.
19. ஊர் வெண்பா – ஊர்ச்சிறப்பு.
20. ஊரின்னிசை – பாட்டுடைத்தலைவன் ஊர்.
21. எண் செய்யுள் – தலைவன் ஊர்ப்பெயர்.
22. எழு கூற்றிருக்கை – சிறுவர் விளையாட்டு அடிப்படை.
23. ஐந்திணைச் செய்யுள் – ஐந்திணை உரிப்பொருள்.
24. ஒருபா ஒருபஃது – அகவல் வெண்பா.
25. ஒலியல் அந்தாதி – –
26. கடிகை வெண்பா – தேவர் அரசரிடம் காரியம்.
27. கடைநிலை – 
28. கண்படை நிலை –
29. கலம்பகம் – 18 உறுப்புகள்.
30. காஞ்சி மாலை – மாற்றார் ஊர்ப்புறத்துக் காஞ்சி மாலை சூடுதல்.
31. காப்பியம் – அறம், பொருள், இன்பம், வீடு என்ற பொருளில் பாடுவது.
32. காப்பு மாலை – தெய்வம் காத்தல்.
33. குழமகன் – பெண் கையிலிருக்கும் குழந்தையைப் புகழ்தல்.
34. குறத்திப்பாட்டு – தலைவி காதல், குறத்தி குறிசொல்லுதல்.
35. கேசாதி பாதம் – முடிமுதல் அடிவரை வருணனை.
36. கைக்கிளை – ஒரு தலைக்காமம்.
37. கையறுநிலை – உற்றார் இறந்த பொழுது வருந்துவது.
38. சதகம் – (அகம், புறம்) நூறு பாடல் பாடுவது.
39. சாதகம் – நாள், மீன் நிலைபற்றிக் கூறுவது.
40. சின்னப் பூ – அரசனின் சின்னங்கள் பத்து.
41. செருக்கள வஞ்சி – போர்களத்தில் வெற்றி ஆரவாரம், பேய்கள் ஆடல் பாடல்.
42. செவியறிவுறுஉ – பெரியோருக்குப் பணிவு, அடக்கம்.
43. தசாங்கத்தயல் – அரசனின் பத்து உறுப்பகள்
44. தசாங்கப்பத்து — அரசனின் பத்து உறுப்பகள்
45. தண்டக மாலை —
46. தாண்டகம் – 27 எழுத்து முதல் கூடிய எழுத்துக்களைப் பெற்று வரும்.
47. தாரகை மாலை – கற்புடை மகளிரின் குணங்களைக் கூறுதல்.
48. தானை மாலை – கொடிப்படை.
49. தும்பை மாலை – தும்பை மாலை சூடிப்பொருவது.
50. துயிலெடைநிலை – பாசறையில் தூங்கும் மன்னனை எழுப்புதல்.
51. தூது – ஆண் – பெண் காதலால் அஃறிணையைத் தூதனுப்புதல்.
52. தொகைநிலைச் செய்யுள் – –
53. நயனப்பத்து – கண்.
54. நவமணி மாலை – –
55. நாம மாலை – ஆண்மகனைப் புகழ்தல். 
56. நாற்பது – காலம் இடம் பொருள் இவற்றுள் ஒன்று.
57. நான்மணி மாலை —
58. நூற்றந்தாதி – –
59. நொச்சிமாலை – மதில் காத்தல்.
60. பதிகம் -ஏதேனும் ஒருபொருள்.
61. பதிற்றந்தாதி – –
62. பயோதரப்பத்து -மார்பைப் பாடுவது.
63. பரணி – 1000 யானைகளை வென்றவனைப் பாடுவது.
64. பல்சந்த மாலை —
65. பவனிக்காதல் – உலாவல் காமம் மிக்குப் பிறரிடம் கூறுவது.
66. பன்மணி மாலை – கலம்பக உறுப்புகள்.
67. பாதாதி கேசம் – அடிமுதல் முடிவரை.
68. பிள்ளைக்கவி (பிள்ளைத்தமிழ்) – குழந்தையின் பத்துப்பருவங்கள்.
69. புகழ்ச்சி மாலை – மாதர்கள் சிறப்பு.
70. புறநிலை – நீ வணங்கும் தெய்வம் நின்னைக் காக்க.
71. புறநிலை வாழ்த்து – வழிபடு தெய்வம் காக்க.
72. பெயர் நேரிசை – பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
73. பெயர் இன்னிசை – பாட்டுடைத்தலைவன் பெயரை சார்த்திப்பாடுதல்.
74. பெருங்காப்பியம் – கடவுள் வணக்கம், வருபொருள், நான்குபொருள் படபாடுதல்.
75. பெருமகிழ்ச்சிமாலை – தலைவியின் அழகு, குணம் , சிறப்பு.
76. பெருமங்கலம் – பிறந்தநாள் வாழ்த்து.
77. போர்க்கெழு வஞ்சி – மாற்றார் மீது போர்தொடுக்கும் எழுச்சி.
78. மங்கல வள்ளை – உயர்குலத்துப்பெண்.
79. மணிமாலை – –
80. முதுகாஞ்சி – இளமை கழிந்தோர் அறிவில் மாக்கட்கு உரைப்பது.
81. மும்மணிக்கோவை —
82. மும்மணிமாலை – –
83. மெய்கீர்த்தி மாலை – அரசனின் கீர்த்தியைச் சொல்லுவது.
84. வசந்த மாலை – தென்றல் வருணனை.
85. வரலாற்று வஞ்சி – குலமுறை வரலாறு.
86. வருக்கக் கோவை —
87. வருக்க மாலை —
88. வளமடல் – மடலேறுதல்.
89. வாகை மாலை – வெற்றி வாகை சூடுதல்.
90. வாதோரண மஞ்சரி – யானையை அடக்கும் வீரம்.
91. வாயுறை வாழ்த்து – பயன்தரும் சொற்களை அறிவுரையாகக் கூறுவது.
92. விருத்த இலக்கணம் – படைக்கருவிகளைப் பாடுவது.
93. விளக்கு நிலை – செங்கோல் சிறக்கப்பாடுவது.
94. வீர வெட்சி மாலை – ஆநிரை கவர்தல்.
95. வெற்றிக் கரந்தை மஞ்சரி – ஆநிரை மீட்டல்.
96. வேனில் மாலை – இளவேனில், முது வேனில் வருணனை

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

12 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: