Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

த‌னது கணவனை கனிவுடன் கண்டித்து, இறந்து போன மனைவி பாடிய பாடல் – வீடியோ

த‌னது இறப்பால் வாடும் கணவனை தேற்ற ஆவியாக வந்த மனைவி தனது கணவனுக்கு ஆறுதல் கூறுவ துபோலவும், அதே நேரத்தில் அவ ன் செய்யும் தவறுகளை மிகுந்த கண்டிப்புடன் சுட்டிக் காட்டுவதாக அமைந்த இந்த பாடல் அன்றைய காலத்தில் சக்கை போடு போட்ட‍து.

உனக்கு ஆறுதலாக இருக்க‍ வேண்டி யவளை தனிமையில் தவிக்க விடு வது நியாயமா? கேள்வியும் எனது உடலை நீ நேசித் திருந்தால், என்னை நீ மறந்து விடு என்றும். எனது உள்ள‍த்தை நீ நேசித்திருந்தால், வந்தவளை வாழ வை என்றும் தனது கணவனை இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ அறிவுறுத்தும் பாடல் நீங்களும் கேட்டு மகிழுங்கள்!

சிறப்பு

கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற‍ மன்ன‍வனே அழலாமா! என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் கற்பகமாக கே.ஆர். விஜயா அவர்கள் நடித்திருப்பார். இது கே.ஆர். விஜயா அவர்களின் முதல் படம் ஆகும். அதோடு மட்டுமல்லாமல் கே.ஆர். விஜயா அவர்க ளின் இயற்பெயர் ரங்க நாயகி ஆகும். இவரது பெயரை கே.ஆர். விஜயா என்று மாற்றியது யார் தெரியுமா? இந்த படத்தில் வில் லனாக நடித்திருகும் நடிகவேல் எம்.ஆர். ராதா அவர்கள்தான்.

1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப் படத் தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, நடிகவேல் எம்.ஆர். ராதா, ரங்காராவ், முத்துராமன், சித்தூர் நாகையா  மற்றும் பலரும் நடித் துள்ளனர்.

– விதை2விருட்சம்

Leave a Reply