Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விரக்தியில் இருந்து விடுபட, விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள்

VIDHAI2VIRUTCHAM VIEWER GOMATHY’S QUESTION: Sir, from my birth I feel very lonely, never attachment anyone,and now i am in suicide position,I take many movements to clear this but i cant totally I am failure in my life, can i know any ways to relive my stage?

விதை2விருட்சம் வழங்கும் சில எளிய ஆலோசனைகள்

எப்போதும் நமது மனம் நமது கட்டுப்பா ட்டிலேயே தான் வைத்துக் கொள்ள‍ வே ண்டும். உங்களுக்கு எந்த பிரச்சனை என் றாலும் அந்த பிரச்சனை உங்களது நெருங் கிய தோழி(ழர்) யின் பிரச்சனையாக கருதி சிந்தித்து ப்பாருங்கள் அந்த பிரச்ச னைக்கு விரைவிலேயே நீங்களே ஒரு நல்ல‍ வழியினை கண்டுபிடி ப்பீர்கள்.

உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலு ம் அதை உங்களின் நலம் விரும்பிக ளாக இருக்கும் நெருங்கிய உறவினர் அல்ல‍து நல்ல‍ தோழி(ழர்)களி டம் கல ந்தாலோசியுங்கள்.

பலர் உங்களுக்கு பலவிதமான ஆ லோசனைகளை வழங்குவார்கள். ஆலோசனை கேட்பது தவறேதுமில் லை. ஆனால் அந்த ஆலோசனைக ளை நன்கு ஆராய்ந்து உங்களது மன துக்கு எது சரியென்றுபடுகிறதோ அதையே தங்க‌ளது இறுதியான உறுதியான‌ முடிவாக கொள்ளுங்கள்.

கண்ணாடியில் தங்களது உருவத்தை பார்த்து, பொன்னான நேரத்தை செலவழிக்கும் பெண்க ளே அதிகம் ஆகையால் தங்களது சிகை அலங் காரம் மற்றும் உடையலங்காரங்க பாணிகளை சற்று மாற்றியபின் தங்களது உருவத்தை கண் ணாடியில் பாருங்கள். உங்களுக்கே ஒரு புதிய உற்சாகம் பிறக்கும்

உங்களது மனம் சோர்வாக இருக்கும்போது உங் களுக்கென்று கட்டாயமாக ஒரு பழக்க‍த்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அது பொழுது போக் காக இல்லாமல் அது பிறருக்கு பயனுள்ள‍தா கவும் இருக்க‍ வேண்டும். உதார ணமாக இணை யதளமோ அல்ல‍து வலைப்பூவோ ஒன்றை உரு வாக்கி அதில் உங்கள் எண்ணங்களை கட்டுரைகளாக வெளியிடலாம்.

அல்ல‍து தாங்கள் விரும்பும் உருவங்களை ஓவியமாக வரைந்தோ அல் ல‍து ஏதேனும் கலைகளிலோ உங் களது பொன்னான நேரத்தை செல விடலாம்.

எப்போதும் மனதினை திடமாக வை த்துக்கொள்ள‍வேண்டும். நமது மனம் எப்போது பலவீனமாகிறதோ அப்போதே நாம் பிறரது கட்டுப்பாட் டிற்குள் சிக்கிட நேரிடும். இந்நேரத் தில் உங்களுக்கு தேவைப்படுவது தன்னம்பிக்கையும், தைரியமும் தான்.

மரணத்தை நாம் அழைத்த‍தாக இருக்க‍ கூடாது. இந்த பூவுலகில் எந்த தொரு பிறவிக்கோளாறும் இன்றி பிறப்பதே அரிது! அப்படி எந்த வித மான பிற‌விக்கோளாறும் இல்லாமல் பிறந்த நீங்கள் எதற்காக இந்த மர ணத்தை பற்றி நினைககிறீர்கள் இனி மரணத்தை பற்றி சிந்திக்க‍ வேண்டாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களது பகுதியை சார்ந்த நல்ல‍தொரு குடும்ப நல ஆலோசகரை சந்தித்து, தங்களது மனக்குமுறல்களையும், பிரச்சனை களையும் அவரிடம் முறையிட்டு தங்களது பிரச்சனைக்கு தீர்வு காண முயலுங்கள்

தொடரும் . . .

இப்ப‍டிக்கு
– விதை2விருட்சம்

2 Comments

Leave a Reply