பளிங்கு பாதையில் சென்று வழுக்கி விழுந்தவர்களுமுண்டு.
கற்களும் முற்களும் நிறைந்த பாதையில் எங்கும் விழாமல் அப்பாதையை கடந்தவர்களும் உண்டு.
இது எப்படி சாத்தியம்? என்று கேட் டால்
பளிங்கு பாதைதானே வேகமாக செல்லலாம் என்றால், அந்த வேக மே அவர்களை வழுக்கி விழ செய் திடும்.
கற்களும் முற்களும் நிறைந்த கடினமான பாதையாக இருந்தால் நாம் இப்பாதையை எப்படி கடக்க வேண்டும் என்ற முன்னெச்சரிக் கையுடனும் சற்று பொறுமையுடனும் சென் றால் அப்பாதையை விரைவிலேயே எங்கே யும் விழாமல் கடந்து விட முடியும்.
வாழ்க்கையில் பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருந்தால், வெற்றிகள் பல குவிக்கலாம்.
– – விதை2விருட்சம், ராசகவி ரா. சத்தியமூர்த்தி