Monday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில் – வீடியோ

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம். காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் திருமூலநாதர் (மூலட்டானேசுவரர்,சபாநாயகர், கூத்தப்பெருமான்,விடங்கர், மேருவிடங்கர்,தட்சிணமேருவிடங்கர்,பொன்னம்பலக் கூத்தன்)
உற்சவர்
அம்மன் உமையாம்பிகை (சிவகாமசுந்தரி)
தல விருட்சம் தில்லைமரம்
தீர்த்தம் சிவகங்கை, பரமானந்த கூபம்,வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரமதீர்த்தம்,சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் கோயில்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு
பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர்

முனிவர்களுள் சிறந்தவரான வசிஷ்ட மாமுனிவரின் உறவி னரான மத்யந்தினர் என்ற முனி வருக்கு மாத்யந்தினர் என்ற மகன் பிறந்தான். அவனுக்கு ஆன்மஞானம் கிடைக்க வேண் டுமெனில் தில்லைவனக் காட்டி ல் உள்ள சுயம்பு இலிங்கத்தை வணங்கு மாறு முனிவர் சொன் னார். இதையடுத்து, மாத்யந்தி னர் தில்லை வனம் வந்தடைந் தார். இங்குள்ள இலிங்கத்தைத் தின மும் பூஜை செய்தார்.

பூஜைக்கு தேவையான மலர்களை, பொழுது விடிந்த பிறகு எடு த்தால் தம் பூஜை, தவம் முதலியவற்றிற்கு நேரமாகிற படியா லும், மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுப்பதால் அம்மலர்கள் பூஜைக்கு ஏற்றவையல்ல என்பதாலும் ஒவ்வொரு நாளும் மிகவும் மனம்வருந்திக் கொண்டே மலரெடுத்துப் பூஜை செய்து கொண்டு வந்தார். இக்குறையை சுவாமியிடம் முறையிட்டார். சுவாமி தங் கள் பூஜைக்காக பொழுது விடியுமுன் மலர்களைப் பறிக்க இருட் டில் மலர்கள் தெரியவில்லை. பொழுது விடிந்த பின்னர் மலர்க ளைப் பறிக்கலாம் என்றால் மலர்களில் உள்ள தேனை வண்டுகள் எடுத்துவிடுவதால் பூஜைக்கு நல்ல மலர்கள் கிடைக்கவில்லை என்று கூறினார். உடனே சுவாமி“மரங்களில் ஏறுவதற்கு வசதியாக வழுக்காமல் இருக்கப் புலியினுடைய கை கால்கள் போன்ற உறுப்பு களும், இருளிலும் நன்றாகத் தெரியும்படியான கண்பார்வையும் உனக்கு கொடுத்தோம்” என்று கூறியருளினார். மேலும்,”புலிக்கால் புலிக்கைகளைப் பெற்றதால் உன் பெ யரும் வியாக்கிரபாதன்” என்றும் கூறி னார். மாத்யந்தினரும் பெருமகிழ்வு கொண்டு தின மும் மனநிறைவோடு பூஜை செய்து வந்தார் என தல வர லாற்றுக் குறிப்பு கூறுகிறது.

சிதம்பரம். நடராஜர் தங்க விதானத் தின் கீழ் இருப்பது இங்கு தான். தாழ்த் தப்பட்டவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்ற சட்ட திட்டத்தை, புரா ண காலத்திலேயே நந்தனாருக்காக அடித்து நொறுக்கிய தலம். இந்த தல ம் பற்றிய அபூர்வ தகவல்கள் இங்கே.

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும்,ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள் பாலிக்கிறார். சித்சபையில் சபா நாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற் றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன் றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமா லை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட் சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இரு க்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது,முடிவும் கிடை யாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். சித்+அம்பரம் =சிதம்பரம்.சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. “மனிதா! உன்னிட ம் ஒன்றுமே இல்லை‘ என்பது தான் அந்த ரகசியத்தின் பொருள்.

பஞ்சபூத தலங்கள்:

சிதம்பரம் ஆகாயம்

திருவண்ணாமலை அக்னி

திருவானைக்கா நீர்

காளஹஸ்தி வாயு

காஞ்சிபுரம், திருவாரூர் நிலம்.

பஞ்சபூத தலங்களில் சிதம்பர ம் ஆகாயத் தலமாகும். சிதம்பர ரக சிய ஸ்தானத்தில் அம்மனுக்குரிய ஸ்ரீசக்கரத்தையும், சிவனுக்கு ரிய சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாகப் பிரதிஷ்டை செய்ய ப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உண்டு. இந்த சக்கரத்தில் நட ராஜப் பெருமான் ஐக்கியமா கி, தன் ஆனந்த நடனத்தி னால் உலகை படை த்து, காத் து, அழித்து, மறைத் து, அரு ளிக் கொண்டிருக்கி றார்.

மூவர் பாடிய தேவாரத் திருப் பதிகங்களை கண்டெடுத்த தலம் இது. திருநாரையூரைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி என் பவரும் திருமுறை கண்ட சோழ மன்னனும் திருநாரையூர் தலத்தி ல் உள்ள பொல்லாப் பிள்ளை யாரை வணங்கி அப்பெருமானு டைய திருவருளால் சிதம்பர த்தில் பொன்னம்பலத்தின் அரு கே மூவர் திருக்கர முத்திரை களோடு தேவார ஏடுகள் உள் ளன என்று அறிந்தனர். பின்பு தில்லையை வந்தடைந்து மூவ ருக்கும் விழா எடுத்து குறிப் பிட்ட இடத்தில் தேடும்போது கறையான் புற்று மூடிக்கிடக்க ஏடுகள் கிடந்தன. பின்னர் எண் ணெய் விட்டு புற்றினுள்ளே இருந்த சுவடிகளை எடுத்துப் பார்த்த போது பல பகுதிகள் கறையானுக்கு இறையாகிப் போயிருந்தன. பின்பு உள்ளவற்றை எடுத்துப் பத்திரப் படுத்தினர். இவ்வாறு கிடை க்கப்பெற்றதே தற்போது நாம் படிக் கும் தேவாரப் பதிகங்கள். அத் தகைய அரிய தேவாரப் பதிகங்கள் கிடைத்த தலம் இது.

திருநாளைப்போவார் என்று அழைக் கப்பட்ட நந்தனார் சிவன்பதம் அடைய அக்னி குண்டத்தில் இறங்கிய அருந் தவத் தலம். நால்வர் இத்தலத் தில் எழுந்தருளியபோது நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்தனர் என்கின்றனர். 

கிழக்கு கோபுரம் வழியாக மாணிக்க வாசகரும் தெற் கில் ஞான சம்பந்தரும்,மேற்கில் அப்பரும், வடக்கு கோபுரம் வழி யாக சுந்தரரும் சென்று சிற்சபையில் இறைவனை கண்டு தரிசி த்தனராம். இந்த ஊரின் தேரோடும் வீதிகளில் அப்பர் பெருமான் அங்கப்பிரத ட்சணமே செய்தாராம்.

இலங்கையை சேர்ந்த புத்தமத மன் னனின் ஊமை மகளை மாணிக் கவாசர், நடராஜர் அருளால் பேசச் செய்த தலம். இத்தலத்து திரு க்கோயிலில் சிற்றம் பலம்,பொன்னம்பலம், பேரம்பலம், நிரு த்த சபை, இராசசபை என்னும் ஐந்து மன் றங்களும் அமைந்திருத் தலும், சிவன் விஷ்ணு இருவர் திருச்சந்நிதிகள் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும்படி அமைந் திருத்தலும் தனிச் சிறப்புகளாகும். பிரம் மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளும் கோயில் கொண் டுள்ள திருத்தலம் இது. 

இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ர மணி யர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியு ள்ளார்.

பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோ யிலின் மூலவர் என்றா லே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயி லுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதி யை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் இலிங்கவடிவில் “ஆதிமூலநாதர்” என்ற பெயரில் அருள் செய்கிறார். பதஞ் சலி, வியாக்ரபாத முனிவர்கள் கயிலை யில் தாங்கள் கண்ட சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், “திரிசகஸ்ர முனீஸ்வரர்கள்” என் போரை கயிலையிலிருந்து,சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தை மாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களே “தில்லை மூலவாரயிவர்”என்று சொல் வதுண்டு.

திருவாரூரில் பிறந்தால் முக்தி. காஞ்சியில் வாழ்ந் தால் முக்தி. காசியில் இற ந்தால் முக்தி. திரு வண்ணா மலையை நினைத்தால் முக்தி. உயிர் போகும் நேரத் தில் “நினைக்க அருள்புரி வாய் அருணாச்சலா” என அப்பர் கூறியுள்ளார். 

இது போல்,வாழ்நாளில் ஒரு தட வையேனும் நடராஜரையும், திரு மூலநாதரையும் தரிசித்தால் முக்தி கிடைத்து விடும். எனவே தான் நந்தனார், தாழ்த்தப்பட்டவர் களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜ மான பக்தியால், சர்வ மரி யாதை யுடன் கோயி லுக்குள் சென்று, நடராஜ ருடன் ஐக்கியமானார். இத் தலத்து நடராஜரைக் காண உலகமே திரண்டு வருகிறது. ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, நடரா ஜரின் சிற்பச் சிறப்பைக் காண வருகின்றனர். அப்படி ப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறா ர்கள்.

ஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார்.இதற்காக, தில் லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்திய லோக த்துக்கு அழைத்தார்.தில்லையிலேயே இரு ந்து, நடராஜரின் திருநடனத் தைக் காண்பதை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத் து விடப்போகிறது எனக் கூறினர்.அப்போது, நட ராஜர் யாகத்திற்கு செல்லும்படியும்,யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுவதாகவும் வாக்களி த்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை“ரத்னசபாபதி” என்கின்ற னர். இவரது சிலை நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும்.சிலையின் முன்புறமும், பின்புறமுமாக இந்த தீபாராதனையைச் செய்வர்.

மனிதனின் உருவ அமைப்பிற்கும், தங்கத்தால் ஆன நடராஜர் சன்னதிக்கும் நிறைய ஒற் றுமை இருக்கிற து. பொன் னம்பலத்தில் நம சிவாய மந்திரம் பொறிக்க ப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிர த்து 600 தங்க ஓடு கள், மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணி க்கையைக் குறிக்கும். பொன்னம்பலத்தில் அடிக் கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்புகளைக் குறிக்கிறது. கோயிலில் உள்ள 9வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. இதுதவிர ஆன்மிக ரீதியான அமைப் பும் உண்டு. 

ஐந்தெழுத்து மந்திரமான “சிவாயநம” என்பதின் அடிப் படையில் பொன்னம்பலத்தின் ஐந்து படிகளும், 64கலைகளின் அடிப்படையில் சாத்து மரங் களும், 96தத்துவங்களைக் குறி க்கும் விதமாக 96 ஜன்னல்களு ம், 4 வேதங்கள், 6 சாஸ்திரங் கள், பஞ்ச (5)பூதங்களின் அடிப் படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்ரீ சக்ரம் அம்மன் சன்னதியில் உள்ளது.

அர்த்தஜாம பூஜை இத்தலத்தின் தனி சிறப்பு. அர்த்தஜாம பூஜை யில் உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் கலந்து கொள்வ தாக ஐதீகம். இதை அப்பர் “புலி யூர்(சிதம்பரம்) சிற்றம்பலமே புக் கார் தாமே” எனப்பாடு கிறார். சேக்கிழார் இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் தான் பெரியபுராணம் பாடி அரங்கேற்றினார். அருண கிரி நாதர் இத்தலத்தில் உள்ள முரு கப்பெருமானை தனது திருப்புக ழில் பாடியுள்ளார்.இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சித ம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமை ந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக் கின்றன.

கோயிலுக்குள் திருமூலட்டானக் கோயில் மேற்கு பிரகார த்தின் மேல்பால் இருக்கின்றது. கருங்கல் வடிவத்தில் செய்து வைக் கப்பட்டுள்ளது.

நடராஜர் சன்னதியின் எதிரில் உள்ள மண்டத்தில் நின்றபடி பிரம் மா, விஷ்ணு, சிவன் என மூவ ரையும் தரிசிக்கலாம். நடரா ஜர் சன் னதி அருகிலேயே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவிந் தராஜப் பெருமாள் தலம் இருப்பது விசேஷத்தி லும் விசேஷம்.

சிவனுக்கும், சக்திக்கும் நட ந்த போட்டி நடனத்தில்,ஆடிய தில்லை காளியின் கோயில் நடராஜர் கோயில் அருகில் உள்ளது.

51 ஏக்கர் பரப்பளவில் அமைந்த பிரம்மாண்டமான சிவ தலம் இது. மிகச் சிறந்த கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்த அற்புத தலம்.

நடராஜரின் பஞ்ச சபைகளில் இது சிற்றம்பலம். இங்கு மூலவர் திருமூலநாதர் சுயம்பு மூர்த்தியாக அரு ள்பாலிக்கிறார். ஆனால் நடராஜரே இங்கு பிரதான மூர்த்தி. பஞ்ச பூத தலங் களில் இது ஆகாய தலம் ஆகும்.

பாடியவர்கள்:

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர்

தேவாரப்பதிகம்

அலையார் புனல்சூடி யாகத் தொருபா கம் மலையாள் மகளொடு மகிழ்ந்தான் உலகேத்தச் சிலையால் எயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத் தலையால் வணங்குவார் தலையானார்க ளே.

-திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது முதன் மையானது.

திருவிழா:

மார்கழி திருவிழா – 10 நாள் திருவிழா. திருவாதிரை உற்சவம் இத்தலத்தில் மிக விசேசமாக நடக்கும். திருவாதிரை நட்சத்தி ரத் திற்கு முன் கொடி ஏற்றி பத்து நாள் விழா நடைபெறும். இத்திரு விழாவில் ஒரு தனி விசேசம் உண்டு. இவ்விசேசம் மாணிக்க வாசகருக்கு அமைவது. பத்து நாட்களிலும் சாயுங்கால தீபா ராத னையின் போது மாணிக்க வாசகரை சுவாமியின் திருச்சந் நிதிக்கு எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாட்டுகள் பாடிச் சுவாமி க்குத் தீபாராதனை நடைபெறும்.நாள்தோறும் காலை விழா வில் மாணிக்கவாசகரையும் எழுந்தருளச் செய்வது டன் 10 ஆம் நாள் தரிசனம் முடிந்தவுடன் மாணிக்கவாசகருக்கும் தீபா ரதனை நடைபெறும். சுவாமிக்கு விடையாத்தித் திருவிழா முடி ந்த மறுநாள் மாணிக்கவாசகருக்கும் விடையாத்தித் திருவிழா நடை பெறும்.

ஆனித்திருமஞ்சனம் – 10 நாள் திரு விழா. ஆனி உத்திர நட்சத்திரத்தி ற்குப் பத்துநாள் முன் கொடிஏற்றி முதல்நாள் திருவிழா முதலாக எட் டாந்திருவிழா வரையில் உற்சவ மூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்த நாயகி, விநாயகர், சுப்பிரமணியர்,சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வெள்ளி, தங்க வாகனங்களில் வீதி யுலா வருவார்கள். சித்திரை வருடப்பிறப்பு,திருவாதிரை நட்சத் திரம், அமாவாசை முதலிய விசேச நாள்களில் நடராஜமூர்த்தி சிவகங்கையில் தீர்த்தம் கொடுத்தருள்வார். மற்ற மாதங்களிலும் இவ்வாறு தீர்த்தம் கொடுத்தருள்வார். சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோசம் ,வெள்ளி க்கிழமை, திருவாதிரை, கார்த்திகை,அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.

பிரார்த்தனை:

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இங்கு உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகி றது. கலை களில் தேர்ச்சி பெ ற விரும்புவோர் இத்தலத்தி ன் மேல் அதீத ஆர்வம் கொ ண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமை யும் என்பது நம்பிக்கை. மே லும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகிய வற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நேர்த்திக்கடன்:

பால், பழம், பொரி முதலியவற்றை நைவேத்தியம் செய்து, தீபாரா தனை செய்து, சுவாமியின் பாதுகையை வெள்ளி தங்கப் பல்ல க்கில் எழுந்தருளப் பண்ணி கொண்டு வந்து நடராஜரின் அரு கில் வைத்து நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால்,பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாரா தனை செய் வதை “திருவனந்தல்” என்றும் “பால் நைவேத்தியம்” என் றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்ட ளையாக ஏற்று செய்யலாம்.சுவாமிக்கு நல்லெண்ணெய், திரவியப் பொடி, பால்,தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் ,பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம்.தவிர உல ர்ந்த தூய ஆடை சாத்தலாம். இது தவிர சுவாமிக்கு சங்காபிசேகம், கலசாபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகிறது. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்யலாம். உண்டியல் காணிக்ககை செலுத்தலாம்.கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். வசதி படைத் தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

வழிகாட்டி :

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்திற்கு தமிழகத்தின் முக் கிய நகரங்களிலில்இருந்து பஸ் வசதி உள்ளது. நகரின் நடுவே கோயில் அமைந்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply