1. போனுடன் வந்துள்ள மொபைல் போன் மேனுவல் எனப்படும் போன் வசதிகள் குறித்த தக வல்கள் அடங்கிய சிறு நூலைப் படிக்கவும். நீங்கள் எதிர்பார் க்காத அடிக்கடி பயன்படுத்தாத சில வசதிகள் அதில் இருக் கும். அதில் பட்டியலிடப்பட்டு ள்ள அனைத்து வச திகளையும் பயன்படுத்துங்கள்.
2. கடையில் கொடுத்த பில் மற் றும் வாரண்டி கார்டினைப் பத் திரப் படுத்தவும். அதிலேயே மொபைல் போனின் ஐ.எம்.இ. எண் ணை எழுதி வைக்கவும்.
3. உங்கள் மொபைல் போன் தயாரித்து வழங்கிய நிறுவனத்தின் வெப்சைட்டிற்குச் சென்று உங்கள் போன் மாடலுக்கு அந்நிறுவனம் தந்துள்ள குறிப்புகளை டவுண்லோட் செய்து படித்து உணரவும். அல்லது ஒரு பிரிண்ட் காப்பி எடுத்து வைத்து அவ்வப்போது படிக்கவும்.
4. உங்கள் மொபைல் சர்வீஸ் குறித்த தகவல் களைப் பெற ஒரு கட்டணமற்ற தொலைபேசி எண் தரப்பட்டிருக்கும். அது 1800 எனத் தொட ங்கலாம். அல்லது வேறு எண்ணிலும் தொடங் கலாம். அதனையும் கண்டறிந்து குறித்து வைக் கவும். மொபைல் சேவை பயன் பாட்டில் குறை ஏற்பட்டால் அந்த எண்ணில் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள். தொடர்பு கொள்ளும் முன் நீங்கள் வாங்கிய போனி ன் மாடல் எண், நிறுவனத்தின் பெயர், பிரச்னை குறித்த தகவல்கள் ஆகியவற்றை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
5. மொபைல் போன் திரையில் ஸ்கிராட்ச் ஏற்படாமல் இருக்க ஸ்கிராட்ச் கார்டு மொபைல் போன் கடையில் கிடைக்கும். விலை ரூ.10 முதல் ரூ.30க்குள் இருக்கலாம். அத னை வாங்கி கடை விற்பனையாள ரையே ஒட்டித் தரச் சொல்லவும். இது மொபைலின் திரை க்குப் பாது காப்பு.
6. இன்னும் பத்திரமாக வைத்துக் கொள்ள மற்றும் பாதுகாப்பாகப் பயன்படுத்தத் தேவையான சாதன ங்கள் இருந்தால், விலை விசாரித் து வாங்கிப் பயன்படுத்தலாம்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
hi