Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜி-5-ன் மூவி கிங் மொபைல்கள்

திரைப் படங்களை எந்த இடத்திலும் பார்த்து ரசிக்க வசதி அளி க்கும் வகையில், 20 படங்களைதன் மொ பைல் போன்களில் பதிந்து,விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது ஜி-5 மொபைல் நிறுவனம். G’FIVE E720, E780 மற்றும் E505 என்ற பெயர்களில் அண் மையில் இந் த மாடல் போன்கள் அறிமுகமாகியுள்ளன. இந்த போன்களுடன் தரப்படும் 4 ஜிபி மெமரி கார்டில், 20 திரைப்படங் கள், வீடியோ பாடல் பைல்கள், சில திரைப்பட தயாரிப்பு காட்சி நிகழ்வுகள், ரிங் டோன்கள் ஆகியவை பதியப்பட்டுத் தரப்படுகி ன்றன. இதனாலே யே இந்த மாடல்கள் தென் மாநிலங்களுக்கென ஒன்றும், வட மாநி லங்களுக்கென ஒன்றுமாகத் தயாரிக்கப்படு கின்றன.

G’FIVE E720 மாடல் போனில், 2.4 அங்குல அகலத்தில் தொடு திரை, 3.2 எம்.பி. திறன் உள்ள கேமரா, வீடியோ அழைப்புகளு க்கான முன்புற கேமரா, 1300 mAh திறன் கொண்ட பேட்டரி, A2DP இணைந்த புளுடூத், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், வயர் லெஸ் எப்.எம். ரேடியோ, 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியு டன் மெமரி, நல்ல ஒளியுடன் கூடிய எல்.இ.டி. டார்ச் ஆகிய வசதிகள் தரப் பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.2,909.

G’FIVE E780 மாடலில், 3.2 அங்குல அகலத்தில் தொடு திரை டிஸ் பிளே உள்ளது. இதிலும் இரண்டு கேமராக் கள் தரப் பட்டுள்ளன. 1050 mAh திறன் கொண்ட பேட்டரி, A2DP இணைந்த புளுடூத், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், வயர்லெஸ் எப்.எம். ரேடியோ, 16 ஜிபி வரை அதிகப் படுத்திக் கொள்ளும் வசதியுடன் மெமரி, யு.எஸ். பி.மோடம் இணை ப்பு, ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ.3,689.

மூன்றாவதாக வந்துள்ள G’FIVE E505 மாடலில், 2.2 அங்குல அகல திரை, இரண்டு கேமரா, 1000 mAh திறன் கொண்ட பேட்டரி, A2DP இணைந்த புளுடூத், மியூசிக் மற்றும் வீடியோ பிளேயர், வயர் லெஸ் எப்.எம். ரேடி யோ, 16 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியு டன் மெமரி ஆகியவை கிடைக்கின்றன. இந்த மாடலுக்குக் கூடு தலாக இரண்டு பின்புறக் கவர்கள் கிடைக்கின்றன. திரைப் படங் கள், ரிங் டோன்களுடன், நிறைய எண்ணிக்கையில் கேம்ஸ் பதிந்து தரப்படுகின்றன. இதன் அதிக பட்ச விலை ரூ.2,219. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply