Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘போதும்’கிற வார்த் தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!” – நடிகை நதியா

என் அம்மா – அப்பா இருவருமே வய சான பிறகும் ஒரிஜினல் வயசைக் கண்டு பிடிக்க முடியாத இளமையோடு இருக் காங்க. அதே பாரம்பரியம்தான் என் இள மைக்குக் காரணமா இருக்கலாம். 14, 10 வயசுல எனக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. கணவர், குழந் தைகளோடு ஒவ்வொரு நிமிஷத்தையும் சந்தோஷ மாக் கழிக்கி றதும் என் பொலிவுக்குக் காரணம்!”
”உடம்பை எப்படி இவ்வளவு ஃபிட்டா வெச்சிருக்கீங்க?”
”சிம்பிளான பயிற்சிகளைத் தொடர்ந்து பண்ணிட்டே இருப்பேன். சின்ன வயசுலயே விளையாட்டுல என க்கு ஆர்வம் அதிகம். கா லையில் வாக்கிங், ஜிம்மில் வெயிட் டிரெய்னிங் பண்றதோட வீட்டு வேலை களும் எடுத்துக்கட்டி பண் ணுவேன். குடும்பத்தின ரோட சந்தோஷமா பேசி ச் சிரிக்கிறப்ப, ஆழ்நிலை தியானம் பண்ண மன நிறைவு கிடைக்கும். பெட்ல விழுந்த உடனேயே தூக்கம் வரணும். அப்ப தான் நம்ம உடம்பு நல்ல நிலையில் இருக்குன்னு அர்த் தம். நம்ம உடம்பு சரி இல்லைன்னா, அதோட அறிகுறிகள் பசி, தூக்கம் இர ண்டிலும் தெரிஞ் சிடும். அது இரண்டும் சரியா இருந்தா ல், நாம சரியா இருக் கோம்னு அர்த் தம்!”
‘‘உணவு விஷயத்தில் எப்படி?”
”எந்த உணவையும் ஏத்துக்கிற உடம்பு எனக்கு. மும்பை உணவை எந்த அளவுக்கு ரசிச்சுச் சாப்பிடுவேனோ, அதே மாதிரி தென் இந் திய உணவுகளையும் சாப்பிடுவேன். இத்தாலி, ஜப்பானிய உணவு களும் ரொம்பப் பிடிக்கும். என்னதான் சுவை யாக இருந்தாலும், உடலுக்கு எவ்வள வு தேவையோ அதோட நிறுத்திக் குவேன். நிறைய சாப்பிடுறது தப்பு இல் லை. ஆனா, அதில் கிடைக்கிற சக்தி எரிக்கப்படுகிற அளவுக்கு நல்லா வே லை பார்க்கணும். உடல் உழைப்பையு ம் உணவு அளவையும் ஒப்பிட்டாலே, வீணாக சதை போடுவதை நிச்சயம் தடுத்துரலாம்!”
”முகப் பொலிவு, கூந்தல் மினுமினுப் பு… ரகசியம் சொல்லு ங்களேன்?” 
”எனக்கு இயல்பாவே ஸ்மைலி ஃபேஸ். அதனால பால்யம் மாறாத தோற்றம். மத்தபடி எந்த வயசுலயும் நம்ம முகத்தை ஒரே மாதிரி வெச்சுக்க முடியாது. அப்படி வெச்சுக்க நினைச்சு நாம தடவுற கண்ட கண்ட க்ரீம்கள் தான் முகத்தை ப் பாழாக்கும். ஃபேஷியல்ங் கிற பேர்ல முகத்தை ரசாயனத்தால் நனைக்கிறோம். இயற்கைக்கு மா றான எந்த விஷயமுமே அப்போதைக்கு அழகாத் தெரியுமே தவிர, நிலைச்சு நிக்காது. சொ ன்னா நம்ப மாட்டீங்க, முகத்துக் குன்னு நான் பயன்படு த்துறது நல்ல தண்ணீர் மட்டும்தான். அடிக் கடி முகம் கழு வுவேன். நிறையத் தண்ணீர் குடிப்பேன். குளிர்ச்சியான எண்ணெ யால் தலை யை மசாஜ் பண்ணுவேன். ஷாம்பு, பவர் ஃபுல் ஹேர் ஆயில்னு எது வும் பயன் படுத்த மாட்டேன்!”
”திருமணத்துக்குப் பிறகு உடலைக் கவனிக்கும் எண்ணமே பெண் களுக்கு இருப்பதில்லையே ஏன்?”
”குடும்பச் சூழல்தான் காரணம்! கணவர் தொடங்கி குழந்தைகள் பராமரிப்பு வரை ஒரு குடும்பப் பெண் பம்பரமாகச் சுழல வேண்டிய நிலை. எத்தனை குடும்பங்க ளில் பெண்களுக்கு உதவியாக கணவர் கள் கைகொடுக்கிறார்கள்? சுதந்திரமாக இருந்த ஒரு பெண் வீட்டுக் குள் அடை படும்போது, அவளுடைய உடல்வாகு மாறிவிடுகிறது. ஒரு நாளை க்குக் குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி ஒவ் வொரு பெண்ணு ம் சின்னச் சின்ன பயிற்சிகளையாவது மேற்கொள்ளணும். எப்பவு ம் ப்ரிஸ்க்கா இருக்கணும்னு மனசுல நினைச்சுட்டே இருக்கணும். உணவு தொடங்கி, உடை வரை நம்ம உடலை நாம முதல்ல நேசிக்கக் கத்துக்கணும்!”
‘‘மனசை ரிலாக்ஸா வெச்சுக்க டிப்ஸ் சொல்லுங்க?”
” ‘எதுக்காக நமக்கு இந்தக் கஷ்டம்?’ ரொ ம்ப டென்ஷனான நேர த்தில் இந்தக் கேள்வியை மனசுக்குள் எழுப்பிப் பாரு ங்க. ஆபீஸ் கிளம்புற அவசரத்தில் மகளைத் திட்டி இருப்போம். ஆனா, அந்த மக நல்லா இருக்கணும்னுதானே ஆபீஸுக்கு வர் றோம். நமக்குத் தேவையானதைக் கடவுள் கொடுத்திருக்கான்’னு எதையும் நிறைவோடு பார்த்தாலே மனசு லேசா மாறிடும். ‘போது ம்’கிற வார்த் தைதான் நிம்மதியின் முதல் புள்ளி!”

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: