Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உத்தரவாதம் இல்லாத பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்)

ஓய்வு கால வாழ்க்கைக்கு கைகொடுப்பதில் பி.எஃப். போல, பி.பி.எஃப். என்கிற பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் முதலீடும் முன்னணியில் இருக் கிறது.

இந்த பி.பி.எஃப். திட்டத்தில் வரிச் சலு கை பெற தனிநபர் ஒருவர் ஓராண்டில் எழுபதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம் என்று இருந்ததை அதிகரி த்து ஒரு லட்சம் ரூபாய் வரைக்கும் முத லீடு செய்யலாம் என மத்திய அரசு அறி வித்துள்ளது. மேலும், வட்டியும் எட்டு சதவிகிதத்திலிரு ந்து 8.6 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்திருக்கி றது.

 இதை கேட்டு சந்தோஷமாகிப் போன மக்கள், பி.பி.எஃப்.-ல் பணத்தை 

கொண்டு போய் கொட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், பி.பி.எஃப். முதலீட்டில் நிலையான வட்டி கிடைக்கும் என மக்கள் நினைப் பதால்தான். இதனால் இந்த முதலீட்டில் எந்த ரிஸ் க்கும் இல்லை என்று நினைக்கின்றனர். ஆனால், பி.பி.எஃப்.-ல் போடும் பணத்திற்கு ரிஸ்க் உண்டு என்று சொல்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். எப்ப டி?

பி.பி.எஃப். முதலீட்டுக்கான வட்டியை அரசாங்கம் வெளியிடும் பாண்டுகளின் வருமானத்திற்கு ஏற்பவே நிர்ணயித்து வரு கிறது மத்திய அரசாங்கம். அரசாங்க பாண்டுகளின் வருமானத்திற்கு ஏற்ப பி.பி.எஃப்.பிற்கு அளிக்கப் படும் வட்டி விகிதம் கூடும், குறையும். அரசாங்கம் தற்போது அறிவித்திரு க்கும் 8.6% வட்டியானது அடுத்த பதி னைந்து ஆண்டுகளுக்கும் நிலையான தாக இருக்கும் என்பதற்கு எந்த உத்த ரவாதமும் இல் லை.

அடுத்து வரும் நிதியாண்டுகளில் அர சு பாண்டுகளின் வருமானம் குறையு ம் பட்சத்தில் பி.பி.எஃப்.-க்கான வட் டியும் குறையவே செய்யும். அப்படி குறைந்தால் பதினைந்து ஆண்டுகளு க்குப் பிறகு நமக்கு கிடைக்கும் தொகை குறைய வாய்ப்பிருக்கிறது” என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.

தபால் நிலைய சேமிப்பு கணக்குகள், டைம் டெபா சிட் போன்ற சேமிப்புக் கணக்கு களுக்கு வட்டி என் பது நிலையானதாக இருக்கும். அதனால் சேமிப்புக் கணக்கு தொடங்கும்போதே முதிர்வின் போது எவ் வளவு தொகை கிடைக்கும் என்பது தெரியும். ஆனா ல், பி.பி.எஃப்.-ல் இடையி டையே வட்டி விகித மாற்றம் வரும் என்பதால், வட்டி வருமானம் கூடு ம் அல்லது குறையும். அந்த வகையில் பி.பி.எஃப். பில் நாம் போடும் பண மும் வட்டி ரிஸ்க்கிற்கு உட்பட்டதாக இருக்கும்.

எனவே,

கவனம், கவனம், கவனம், கவனம், கவனம், கவனம், கவனம், கவனம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்

Leave a Reply