Tuesday, November 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட்டால் . . .

இணைய தளங்கள் மூலம் ஆபாச படம் வீடியோக்களை வெளியிட் டால் அவர்கள் சிறையில் 5 ஆண் டுகள் கம்பி எண்ண வேண்டியது தான் என்று சைபர் கிரைம் போலீ சார் எச்சரித்துள்ளனர். வெளியூர், மாவட்டம், மாநிலம், நாடு, கண் டம் விட்டு கண்டம் என ஒற்றன், புறா மூலம் தகவல் பரிமாறிய கா லம் மாறி விட்டது. தொழில் நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தை எட்டி விட்டது. கடிதம், செல்போன் என தகவல் பரிமாறிய காலம் மாறி தற்போது இணை ய தளத்தில் பேஸ்புக், ஆர்குட், டுவிட்டர் போன்ற சமுதாய இணைய தளங்கள் மூலம் தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
வாழ்த்து, பாராட்டு, விமர்சனம் என அனைத்தும் சமுதாய இணை ய தளங்கள் மூலமே பெரும்பாலும் நடக்கிறது.  பிர பல இந்தி நடிகர் அபிஷேக்பச்சன் தனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என் று இணைய தளம் மூலம் கோரிக்கை விடு க்கிறார்.
இது ஒருபுறம் இருக்க நடிகர், நடிகைகள் பெயரில் போலி இணை ய தளங்களும் வலம் வருகின்றன. அதில், மார்பிங் மூல ம் ஆபாச படம் இணைக்கப்படுகிறது. தற் போது, இணைய தளங்கள் மூலம் தகவல் களை பரிமாறிக்கொள்ளும் பலரும் போ லியான தகவல் களை இணைய தளத்தில் பதிவு செய்து வருவதாக அதிர்ச்சியூட் டும் தகவல் வெளிவந்து ள்ளது.
இதன் மூலம் ஆபாச படம், கா ட்சிகளை பகிர்ந்து கொள்ளும் சம்ப வங்களும் நடக்கிறது. சிலர் பெயர், ஊர், முகவரி, புகைப்படம் உள்ளிட்டவைக ளில் தங்களது இணைய தள முகவரியில் உண்மைக்கு புற ம்பான தகவல்களை பதிவு செய்கின்றனர். அதனை நூற் றுக்கும் மேற்பட்டவர்கள் பார் த்து தொடர்பு கொள்கின்றனர். எனவே, இணைய தளம் மூலம் ஏமாறாமல் இளைஞர்களும், பெண் களும் தங்களை காத்துக் கொள்வது நல்லது.
இதுகுறித்து, சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இணைய தளம் மூலம் தகவல் பறி மாறிக்கொள்வது அதிகரித்து விட்டது. இது வளர்ச்சியை காட்டுகிறது. இருப் பினும் சிலர் பொய்யான தகவல்களை பதிவு செய்து பிறரை ஏமாற்ற முயற் சிக்கின்றனர். இது சட்டப்ப டி குற்றம். ஆபாச படங்கள், காட் சிகளை பறி மாறிக் கொள்வது வெளிநாடுகளில் சட்ட பூர்வமாக அனு மதிக்கப்பட்டுள் ளது. ஆனால், இங்கு இதுபோன்ற செய லில் ஈடுபட்டால் முதல் முறை 5 ஆண் டுகள், தொடர்ந்து செய்து வந்தா ல் 7 ஆண்டுகள் சிறை தண் டனை உண்டு’’ என்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply