(ஓர் ஆசிரியரது அனுபவத்திலிருந்து . . .)
மனிதன் தான் விழித்துக் கொண்டே தூங்கும் விலங்கு ! மாவீரன் நெப் போலியன் குதிரையில் செல்லும்போ தே தூங்குவாராம். நாம் ஒவ்வொருவரும் இப்படித் தான் ஏதோ ஒரு சூழலில் விழித்துக் கொண்டே தூங்கி விடுவோம். அதற்காக நாமெல்லாம் மாவீரர்கள் என பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடாது.
வகுப்பறையில் மாணவர்கள் விழித்துக்கொண்டே தூங்கி விடுவ துண்டு. சாப்பாட்டு நேரமும், சாப்பாட்டுக்குப் பின்னான மாலை நேரமும் மாணவர்கள் தூக்கத்துடன் போராடும் காலங்களாகும். இவ் வேளையில் விழித்துக்கொண்டே தூங் குபவர்களைக் கண்டறிய நான் சில உளவி யல் முறைகளைக் கையாள்வதுண்டு.
வழிமுறை – 1
மாணாக்கர்களே நான் இப்போது 1,2,3 என எண்ணியவுடன் கை தட்டுவேன் நீங்களும் என் னுடன் 3 முறை கைதட்டவேண்டும் என் பேன். அவர்களும் சரி என காத்திருப்பார்கள். நான்………… 1, 2 எண் ணிவுடனேயே கை தட்டிவிடுவேன். என்னுடன் சேர்ந்து விழித் துக் கொண்டே தூங்கும் சில மாணாக்கர்களும் சேர்ந்து தட்டி விடுவா ர்கள்..
இதிலிருந்து நான் அவர்களை எளி தில் அடையாளம் கண்டுகொள் வே ன். பாவம் இவர்கள் செவி மட்டுமே கேட்கிறது. அந்தச் செய்தி அவர்க ளின் மூளைக்குச் சென்று சேரவில் லை என்பதை அவர் களுக்குப் புரி யவைப்பேன்.
வழிமுறை – 2
நான் கேட்கும் எளிமையான கேள்வி க்குப் பதிலளியுங்கள் என் பேன்.. (என்ன கேள்வி என்பார்கள்)
நான் 100 ரூபாய்க்கு நூல் வாங்கி நூற்றைம்பது (150) ரூபாய்க்கு விற்றால் எனக்கு இலாபமா? நட்டமா? என்பேன்..
சிலர் இலாபம் என்றும் சிலர் நட்டம் என்றும் சிலர் துயில் நிலை யிலிருந்து வெளிவரவும் இதுபோன்ற எளிய வினா அடிப்ப டையாக இருக்கும்.
பின்..
100 ரூபாய்க்கு நூல் வாங்கி அதை நூற்று 50 ரூபாய்க்கு விற்றால் நட்டம்.
100 ரூபாய்க்கு நூல்வாங்கி அதை 150 ரூபாய்க்கு விற்றால் அது இலாபம் என்றும் அவர்களை விழிப்பு நிலைக்குக் கொண்டு வரு வேன்.