Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாணவனின் சாதனை

நெய்வேலியில் உள்ள ஜவஹர் உயர்நிலைப்பள்ளி. நெய்வேலி யில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் மாணவ – மாண வியருக்கும் ம ற்றும் பொது மக்களுக் கும் சுற்றுச்சூழல் குறி த்து, விழிப்புணர்வு ஏற் படும் வகையில் ஒரு சாதனை நிகழ்த்த வே ண்டும்; நெய்வேலி என் பது நிலக்கரியை வை த்து மின்சாரம் தயாரி க்கும் ஒரு தொழில் நக ரம் என்றளவில் மட்டு மே தெரிந்தவர்களுக் கு, இதன் பசுமையை வெளிப்படுத்த வேண் டும்; அதன் மூலம் இந் த நெய்வேலியின் சுற் றுச்சூழல் மீது அனைவருக்கும் உள்ள அக்கறையை மேம்படுத்த வேண்டும் என்பது பள்ளியின் திட்டம்.

இந்த திட்டத்தை செயல்படுத்த தேர்வு செய்யப்பட்ட மாணவனே திவாகரன்.

அந்த பள்ளியில் தற் போது பிளஸ் ஒன் படி க்கும், புகைப் படம் எடு ப்பதில் ஆர்வம் கொண் ட இந்த மாணவன், காலை, 6:00 மணியில் இருந்து, மாலை, 6:00 மணி வரை நெய்வேலி யில் பசுமை தொடர்பான படங்களை எடுத்து, அதை, உடனடியாக பிரின்ட் போட்டு, அந்த படங்களை வைத்து, சுற்றுச் சூழல் தினமான மறுநாள் கண் காட்சி நடத்த வேண்டும்; இதை, அனைவரும் பார் வையிட வேண்டும். இதுதான் திட்டம். லிம்காவும், சாதனைப் புத்த கமும் இந்த திட்டத்திற்கு பச்சை கொடி காட்டியது.

இதற்கான திட்டமிடலில் துவங்கி, அனைத்து வேலைகளையும், உதவி களையும் செய்ய தலைமையாசி ரியர் யசோதா, ஓவிய ஆசிரியர்கள் செ.பார்த்திபன், ந.செல்வன் உள் ளிட்டோர் கொண்ட குழுவின் வழி காட்டுதலின்படி பயணம் துவங்கிய து. நெய்வேலி நிறுவனமும் அனுமதி யையும் வழங்கி, பையனின் ஆர்வ த்தை ஊக்குவித்தது.

காலை, 4:00 மணிக்கு தயாராகி, நெய்வேலி நுழைவு வாயிலிற்கு வந்த மாணவன் திவாகரன், ஒரே நாளில் குறைந்தது, ஆயிரம் பசு மையான படங்களையாவது எடுத்து விட வேண்டும் என்று துடிப் புடன் சரியாக காலை, 6:00 மணிக்கு கிளம்பினான்.

அவனுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்யவும், வழிகாட்ட வும் ஒரு குழு உடன் செ ன்றது.

ஆர்வம் கொப்பளிக்க காலை உணவு, தேநீர் போன்றவைகளைக் கூட தேடாமல், பசுமையான இடங்களை தேடி பயணம் செய்தான். இப்படியாக, 20 கி.மீ., சுற்ற ளவில் உள்ள நெய்வேலியை சுற்றி, சுழன்று மாலை, 6:00 மணி வரை படம் எடுத்த போது, அயர்ச்சிக்கு பதில் முகத்தில் அபாரமா ன மகிழ்ச்சி. காரணம், எண்ணியதை விட கூடுதலாக அதாவது, 1,555 படங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

இதில், ஐநூறு படங்களை மட்டுமே கண்காட்சியில் வைக்க முடியும் என்ற நிலையில், அனுபவம் மிக்கவர்களைக் கொண்டு, அதற்கான படங்களை தேர்வு செய்து, அதன் பின் கடலூர் சென்று, அங்குள்ள கலர் லேப்பில், ஐநூறு படங்களையும் பெரிய அளவில் பிரின்ட் போட்டு, திரும்ப நெய்வேலிக்கு எடுத்து வந்து, அதற்கான அரங்கத்தில் படங்களை பார்வைக்கு ஏற்றபடி அடுக்கி வைத்து நிமிர்ந்த போது மறுநாள் காலை, 8 :00 மணி.

அடுத்த ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்டபடி கண்காட்சி துவங்கிய போது, படங்களைப் பார்த்த, 15 ஆயிரம் மாணவ – மாணவியர் களாகட்டும், பொது மக்களாகட்டும், இது நம்ம நெய் வேலிதானா என்று வியந்து போயினர்.

கேள்விப்பட்டு பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த விருந் தினர்கள், மாணவன் திவாகரனின் சாதனையையும், அவரது சாத னைக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் பாராட்டினர்.

கண்காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே சென்ற பொது மக்களில் பலர், வாசலில் இருந்த செடி, கொடிகளை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தபடி சென்றனர். 
***
எல். முருகராஜ் 

Leave a Reply

%d bloggers like this: