Monday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உலகின் மிகப் பெரிய குகை – – வீடியோ

‘ஹாங் சொன் டொங்’ என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படு கின்றது. வியட் நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகை யானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சி யாளர் களால் கண்டுபிடி க்கப்பட்டது. இக்குகையி ன் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொ ருவரால் கண்டு பிடிக்கப் பட்டது.

எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிர ட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக் கான காரணம் அத னுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக் கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர் ந்தே இது தொட ர்பில் வெளியுலகிற்கு தெரியவந்தது.

இதன் நீளம் 2.5 மைல்கள் உயரம் 800 அடி என்பதுடன் அகலம் 300 அடியெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இக்குகையின் உள்ளேயே காடு அமைந்திருப்பது இதன் விசாலத்திற்கு ஓர் உதாரணம்.

மேலும் சுமார் 150 குகைகள் இப் பிரதான குகையோடு இணைந் திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இக்குகையா னது 2 முதல் 5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உருவாக்கி யிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply