Friday, August 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எட்டு வித பொய்கள்

பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.
“பொய்மையும் வாய்மை இடத்த, புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்”
என்ற குறள் மூலம் “குற்ற மில்லாத நன்மை விளை விக்கும் எனில், பொய் யான சொல்லும் உண்மை என்றே கருதப்படும்” என் று திருவள்ளுவர் கூறி இருக்கிறார். இதைச் சொ ன்னபின், எந்தக் குறிப்பி ட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பொய் சொல்லப்படலாம் என்ப தற்குரிய நியாயங்களையும் அறிய வேண்டிய அவசியம் ஏற்படு கிறது.
ஹிப்போ அகஸ்டின் பொய்களை எட்டு விதமாக வகைப்படுத்து கிறார்.
 
1. மதபோதனையின் போது சொல் லப்படும் பொய்கள்.
2. யாருக்கும் உதவிடாமல் மற்றவ ர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொய்கள்
3. மற்றவர்களுக்குத் தீங்கு விளை வித்து, ஒரு சிலருக்கு உதவிடும் பொய்கள்.
4. பொய் சொல்வதில் கிடைக்கும் மனமகிழ்ச்சிக்காகக் கூற்படும் பொய்கள்.
5. மற்றவர்களின் திருப்திக்கா கக் சொல்லப்படும் பொய்கள்.
6. யாருக்கும் தீங்கிழைக்காத, ஆனால் யாருக்கோ உதவி டும் பொய்கள்.
7. யாருக்கும் தீங்கிழைக்காது ஆனால் யாரையோ காப்பாற் றுவதற்காகச் சொல்லப்படும் பொய்கள்.
8. யாருக்கும் தீங்கிழைக்காத ஆனால் யாருடைய தூய்மையை யோ பாதுகாக்கச் சொல்லப்படும் பொய்கள்
 
பொய் என்ற வார்த்தை ஒரு சமூக ஆர்வல ரைப் பொறுத்த வரை, “மிகைப் படுத்தப்பட்ட நோக்கத்தைக்” குறிக்கிறது. ஒரு அரசியல் வாதியைப் பொறுத்தவரை, அவர் “தனது கனவுகளை, விற்பனை செய்வதைக்” குறிக்கிறது. சாதார ண மனிதனுக்கு, அது சந்தர்ப்பத்தின் தேவையைப் பொறுத்ததாக இருக்கிறது.
யாரும் பொய் சொல்லவே கூ டாது எனத் தடை விதிக்கப்பட் டால் நமது அன்றாட வாழ்க்கை ஸ்தம்பித்துப் போகும். ஊடகங் களில் நாம் காணும் ஆபூர்வ விளம்பரங் களிலிருந்து, நமது சினிமா நட்சத்திரங்கள், அதிகா ரிகள், அரசியல்வாதிகளுக்குச் சூட்டப்படும் புகழ் மாலைகள், பாராட்டுக்கள் எல்லாம் மாயமாகிவிடும்.

இலக்கியங்கள், மதங்கள், அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல்வாதி கள் தீட்டும் சொற் சித்திரங்கள் எல்லாம் வறட்சியைச் சந்திக் கும். இதனால் வாழ்க்கையே, சுவையும் சுறுசுறுப்பும் இல்லா மல் போய்விடும். ஆகவே, பொய் சொல்வது அல்ல பிரச் சினை. “எப்பொழுது, எந்த இடத்தில் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று வரையறை செய்து கொள்வதுதான் பிரச்சினை” என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு தனிமனிதனின் மூளை அமைப்பில் உள்ள ஒரு கூறு சரியாகச் செயல்படாமல் போனால், தன் னை அறியாமலே அவர் பொய் யுரைகள் கூறுவதற்கு அது வழி வகுக்கும். இப்படிப்பட்ட நிலை யை மருத்துவ அறிவியல் மைதோமேனியா Mythomania எனக் கூறுகிறது. அத்துடன் “ பொய் சொல்லும் ஒருவர் எப் பொழுதுமே பொய் சொல்லிக் கொண்டிருப்பாரா? என்ற கேள் வி எழுகிறது. அது அவசி யமில்லை.

பொய் சொல்வது ஒரு அறிவாற்றலின்படியான செயல். அதாவது ஒரு மனிதர் உணர்ந்தே அந்தப் பழக்கத்தை வைத்திருக்கிறார். அதன்படி அவர் எப்போது, எங்கே பொய் சொல்வது என்பதைத் தன் விருப்பத்திற்கேற்றபடி வைத்துக் கொள்கிறார். அது பெரும்பாலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையாகவே இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: