அவள் புன்னகை என்னை ஈர்த்தது. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏரா ளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.
சின்ன சந்தோஷம் தரும் விஷ யமாக இருந்தாலும் பெண்கள் நீண் ட நேரம் சிரித்துக் கொண்டிருப்பா ர்கள். அவர்கள் ஏன் அப்படி இடை விடாமல் சிரிக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய் வாளர்கள் என்ன கூறுகி றார்கள் தெரியுமா… கலிபோர்னியாவில் உள்ள ஸ்டேன்போடு பல் கலைக் கழகம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
10 ஆண்களையும் 10 பெண்களையும் தேர்வு செய்து கார்ட்டூன் படங்களைக் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. அவ ர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங் களும் கண்காணிக்கப்பட்டது. கார்ட்டூன் படத்தில் இருந்த பஞ்ச் வசனம் அவர்க ளின் சிந்தனையைத் தூண்டி சிரிப்பை வரவழைத்தது. இதில் பெண்கள் நீண்ட நேரம் சிரித்தபடி இருந்தனர்.
இதற்கு அவர்களின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகும். அதாவது பெ ண்களின் மூளையின் கார்டெக்ஸ் பகு திக்கு முந்தைய அடுக்கு இதில் முக்கிய பங்காற்றுகிறது. அவர் களின் மூளை விவேகமாக செயல்படுவதுடன் அதிக எதிர்பார்ப்பின்றி இருக் கிறது.
எனவே இயல்பான ஜோக்குகள் கூட அவர்களு க்கு விசேஷமாகத் தெரிகிறது. இதனால் எளி தில் சிரிப்பைத் தூண்டி விடுகிறது. அத்துடன் பஞ்ச் வசனங்கள் மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துவிட்டால் விடாமல் சிரிப்பை வெளிப் படுத்துகிறார்கள்.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்? : ஆய்வில் சுவாரசிய தகவல்! பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் அமைகிறது. பெண்கள் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகவும் பிறரை நோ கச் செய்யாமல் இருக்கும் வகையிலும் அமை கிறது என்கிறது ஆய்வு. பிறர் நோகாமல் சிரி யுங்கள் நோயின்றி வாழுங்கள்!