Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை!

ன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம் மா என்று எத்தனையோ பட்டங்க ளால் அழைக்கப்பட்டாலும் திரைப் படத் துறையில் புகழ் பெற்ற நடிகை யாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார்.
திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசி யலில் ருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக்கட்டுரை. திரை நட்சத்திரம் பற்றியதே…)

1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்த து என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் கூறி விரி வாக ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இந்த விவ ரங்கள் தெரியாத இளைய தலைமுறையினரு க்காக இங்கே அந்தப் பேட்டியைக் கொடுத்து ள்ளேன் :
ன் மகள் அம்மு – ஜெயலலிதா – திரைப்படங் களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே அம்மு எதையும் எளிதில் புரிந்து கொள் ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முத ல் மாணவி! படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்று தான் நானும் எண்ணினேன்.

சிறு வயதில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை யைக் கேட்டால் அதற்கேற்ப நடனமாடத் தொடங் குவாள் அம்மு. நடனத்தின் மீது அவளுக் குள்ள ஆர்வத்தை ஏன் வீண் அடிக்க வேண்டும் என்று நினைத்த நான், நடன ஆசிரியை திருமதி கே.ஜே. சரசாவிடம் அம்முவுக்கு நடனம் சொல் லிக் கொடு க்க ஏற்பாடு செய்தேன். அம்மு விரைவாகக் கற் றுத் தேறியதால் அவளுடைய நடன அரங்கேற்றத்தையும் ஏற்பாடு செய்து நடத்தி னேன்.

சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும் போதே அவளு க்கு நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம். திரு. ஒய்.ஜி.பார்த்தசாரதி குழு வினர் நடத்திய நாடகம் அது. ஆங்கில மொழி யை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு அந்த நாடக த்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத் தது. இந்த நாடகத்தில் வி்ல்லனாக நடித்தவர் சோ. அனைவரும் அம்மு வின் நடிப்பைப் பாராட்டினார்கள்.சற்றேறக்குறைய இதே சமயத்தில் திரு.சங்கர் கிரி (ஜனாதிபதி திரு.வி. வி.கிரி அவர்களி்ன் மக ன்) ஆங்கிலத்தில் டாக்குமெண்டரி படம் ஒன் றைத் தயாரிக்க ஏற்பாடு கள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகி யாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.


அம்முவின் நடிப்பைப் பாராட்டிய திருமதி. ஒய்.ஜி.பி., திரு.சங்கர் கிரி யிடம் அம்முவை சிபாரிசு செய்திரு க்கிறார். திரு.சோ அவர்களும் அம்மு வின் நடிப்பை சங்கர் கிரியிடம் புக ழ்ந்து கூறி, ‘‘உங்கள் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

அம்முவை தனது டாக்குமெண்டரி்ப் படத்தில் நடிக்க என்னிடம் அனுமதி கேட்டார் சங்கர் கிரி. ‘‘அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில் லை’’ என்று அவரிடம் சொன்னேன். ‘‘இது ஒரு டாக்குமெண்டரிப் படம். உங்கள் மகளின் படப்பிடிப்புக்கு இடையூ று ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நட த்திக் கொள்கிறேன். உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக் கும்’’ என்றார்.சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்த நான் சம்மதித்தேன். அந்தப் படம் தான் ‘எபிசில்’. படப் பிடிப்பு தொடங்கியது.

அப்போது நான் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க க ளை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர்.

அவர்கள் தேடிய வண்ணம் கதா நாயகி கிடைக்கா ததால் அந்தப் பாத் திரம் சம்பந்தப்ப ட்ட சில காட்சிக ளை விட்டுவைத் து விட்டு படத்தில் வரும் மற்ற காட் சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் கள்.
ஒருநாள் என்னிட ம் கால்ஷீட் வாங் க தயாரிப்பாளர்க ள் வந்தபோது தற் செயலாக அம்மு வைப் பார்த்து விட் டனர்.   ‘‘நாங்கள் தேடிய முகப்பொ லி வுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண் ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்றனர்.
ஆனால் நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.
ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் என்னிடம் வந்த னர். ‘‘இன்னும் எங்கள் படத்திற்குக் கதாநாயகி அமையவில்லை. உங்க ள் பெண்ணையே தயவுசெய்து நடி க்க அனுமதியுங்கள்’’ என்று கேட் டுக் கொண்டனர். நீண்ட நேரம் யோ சித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

  • GANESH

    நன்றி திரு.சத்தியமூர்த்தி சார்… டிச.3ல் தொடர்ச்சி வெளியிட உள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்…

Leave a Reply