Friday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பங்கு வணிகத்தில் நட்ட‍மடைவது ஏன்?

வர்த்தகம் என்றாலே லாபமும் நட்டமும் இயல்பு தான். ஆனாலும் வர்த்தகத்தில் வெற்றி பெற சரியா ன தொலைநோக்கு பார்வை வேண் டும். பெரும்பாலோர் புரிந்து கொள் ளாத விஷயம் வர்த்தகம் ஆரம்பித் த நாளிலிருந்து லாபம் எதிர்பார்ப்ப து. எந்த வர்த்தகத்தில் இது சாத்திய ம்? பின் ஏன் பங்கு வர்த்தகத்தில் மட்டும் எதிர்பார்கிறார்கள். நான் வர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு சொல்வது ஒன்றே ஒன்று தான் நீங் கள் எதிர் பார்க்கும் லாப சதவிகித ம் தான் உங்கள் ரிஸ்க் சதவிகித மும்.

நீங்கள் பூ விற்கலாம், உணவு பொருள் விற்கலாம், பிளாஸ்டிக் பொருள் விற்கலாம். பூ ஒரே நாளில் கெட்டுவிடும், உணவு பொரு ள் இரண்டு நாள் வரை தாங்க லாம், பிளாஸ்டிக் பொருள் அழியாமல் இருக்கும். அதே அளவு லாப அளவும் இருக்கும் என்பது தான் வியாபார உண் மை. நீங்கள் என்ன வியாபாரம் செய்ய போகிறிர் கள் என்பதில் தான் உங்கள் தொலைநோக்கு பார்வை இருக்கிறது. இன்றே லாபம் வேண்டுமென்றால் அத ற்கான ரிஸ்கையும் புரிந்து கொ ள்ளவேண்டும்.

மார்கெட் குறியீட்டு எண் சரிந்த போதும் பல நிறுவன பங்குகள் நல் ல முறையில் ஏறி கொண்டிருந்தது. தினம் பல செய்தி தளங்களில் அந்த செய்தியும் வருகிறது, அதையெல்லாம் படிக்க நமக்கு ஒரு மணிநேரம் போதுமானது.

முக்கியமாக நீங்கள் தெரிந்து கொள்ள‍வேண்டியது என்ன‍வெ ன் றால்

சமீபகாலமாக ஆன்லைன் தொ ழில், மல்டி லெவல் மார்கெட்டி ங், என்று பல நூதன முறைகளி ல் ஏமாற்றும் வேலை நடந்து கொண்டி ருக்கிறது! எத்தனை முறை அனுபவபட்டாலும் மக்களால் இந்த கவர்ச்சியை விட்டு வெளிவர முடியவில்லை! சென்ற மாதம் மதுரையில் நண்பர் ஸ்ரீயுடன் பேசி கொண்டிருக்கும் போது சொன் னார்! ஒரு லட்சம் கொடுத்தால் அடுத்த மாதம் 35 ஆயிரம் தருவா ர்களாம், அதற்கு அடுத்து 25 ஆயிரம், அடுத்து 20 ஆயிரம், கிட்ட தட்ட ஒரு வருடத்தில் 3 மடங்கு நீங்கள் கொடுத்த பணம் ரிட்டர்ன்!

சிலர் அம்மாதிரி சம்பாதித்திருக்கிறார்கள் என் றான்! ஆரம்பத்தில் பணம் கொடுப்பார்கள் மொத் தமாக ஒரு பெரிய தொகையை லவட்டி கொண்டு ஓடுவார்கள் என்றேன்! முதலில் அந்த அளவு வரு மானத்திற்கு சாத்தியமா என்று யோசிக்கனும்! அப்படி சாத்தியம் என்றால் அது கள்ளநோட்டாக தான் இருக்கும்! பேராசை பட்டு பண த்தை கொடுத்துட்டு ”எதோ ஒரு” கனவு கண்டா வெளி யே சொல்ல முடியாதுன்னு சொல்வாங்கள் ள அந்த மாதிரி இருக்கக்கூ டாது!

நீங்கள் கோடீஸ்வரர் ஆக லாம்! நேர்மையான வழியி லேயே, பொறுமையாக பத்து வருடங்களில்! அதற்கு ஒவ் வொரு வருட மும் உங்களது முதலீடு இரட்டிபாக வேண்டு ம்! நீங்கள் எந்த துறையை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளுங்கள் ஆனால் ஒவ் வொரு வருடமும் உங்கள் பணம் இரட்டிப்பு ஆகினால் பத்தே வருடங்களில் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்!

ஆனால் நீங்கள் தேர்வு செய்யும் துறையில் கவனமும், கொஞ்சம் அறிவும் இருத்தல் நலம்!

உங்களுடய முதலீடு பத்தாயிரம் ருபாய் மட்டுமே!

10,000 உங்கள் முதலீடு
20,000 முதல் வருடம்
40,000 இரண்டாம் வருடம்
80,000 மூன்றாம் வருடம்
1,60,000 நான்காம் வருடம்
3,20,000 ஐந்தாம் வருடம்
6,40,000 ஆறாம் வருடம்
12,80,000 ஏழாம் வருடம்
25,60,000 எட்டாம் வருடம்
51,20,000 ஒன்பதாம் வருடம்
1,02,40,000 பத்தாம் வருடம்

ஒரு கோடியே ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் பத்தாம் வருட இறுதியில் உங்கள் கையில்!

பத்தாயிரத்துக்கு நல்ல பங்காக பத்து வாங்கினால் அடுத்த வருடம் இரு பதாயிரத்துக்கு இருபது வாங்கலாம்! கமாடிடியில் தங்கம், வெள்ளியில் முதலீடு செய்யலாம்! பணம் இரட்டிப் பாக ஒரு வருட கால அவகாசம் இரு ப்பதால் பொறுமையாக நிதானமாக சரியான இடத்தில் வாங்கலாம்! இதை பகுதி நேரமாக ல்லது மாதத்திற்கு ஒரு நாள் மட்டுமே செய்வதால் உங்க ளுடய வழக்கமான பணிகளுக்கு இடையூறு வராது! உங்கள் இல்லங்க ளுக்கு அருகில் இருக்கும் ஷேர் புரோக் கிங் அலுவலகத்தை தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலா ம்! நேர்மையான வழியில் சம்பாரித்தால் நாட்டிற்கும் நல்லது, வீட்டிற்கும் நல்லது!

சில ஆலோசகர்கள் சரியில்லை அதனால் தான் நட்டமடைந்தேன் என்கிறார்கள். அனுபவம் வாய்ந்த ஒரு ஆலோசகர் வர்த்தகத்தில் ஈடு படுகிறவர்களுக்கு சொல்வதெல் லாம். 5 கால் தருகிறேன் ஒவ்வொ ன்றும் 1000 லாபம் அதே நேரம் ஸ்டாப்லாஸ் 200௦௦ இருக் கும். 4 கால் தோல்வி அடைந்தாலும் ஒரு காலி ல் 1000௦௦௦ லாபம். ஆக மொத்தம் 200௦௦ லாபம் தான். ஸ்டாப்லாஸ் போடா மல் நீங்கள் செய்யும் வர்த்தகம் ரிஸ்கானது. அதை புரிந்து கொண் டால் உங்க ளால் தினசரி வர்த்தகத்திலும் லாபம் பார்க்க முடியும்.

ஆலோசனைக்கு தொடர்பு கொள்க : 9994500540

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply