Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (04/12) – சில தோல்விகள் வெற்றிகளுக்கு இயற்கை உரமாய் அமையும்

அன்புள்ள சகோதரிக்கு —

என் வயது 59; என் மனைவிக்கு 54. எங்களுக்கு, நான்கு பெண்கள். கடின உழைப்பிற்கு அஞ்சாதவன். இளமை யில் கஷ்டப்பட்டு, பின் நடுத்தர குடும்பத்தின ன் ஆனேன். சிறு வய தில் தாயன்புக்கு ஏங் கியவன். என் தந்தை யின் மறுதாரத் தின் மகன் நான். என்னை பெற்றவளை நான் போட்டோவில் பார்த்த தோடு சரி. என் அம்மாவுக்கு (வளர்த்தவர்) நான்கு ஆண், மூன்று பெண். என்னை பெற்றவளுக்கு என்னுடன், இரண்டு ஆண், ஒரு பெண். என்னை பெற்றவளும், தங்கையும் கோலாலம் பூரில் உள்ளதாக கேள்வி. என்னை யும், என் தம்பியையும் மலேசியா வில் இருந்து தூக்கி வந்து விட்டதாக வும், தங்கை பெற்றவளிடம் இருப்பதாகவும் பின் அறிந்தேன். 

என் அம்மா, என்னை பெற்றவள் இல்லை என்பதை, நான்கு வயது முதல் எனக்கு தெரிய வந்தது. என் அம்மா, என் மீது அதிகம் பாசம் காட்ட வில்லை என்றாலும், வெறுப்பும் காட்டவில்லை. சிறு வய தில் என் அம்மா மீது பற்று ஏற்படவில்லை. என்றாலும், பிறகு அவ ர்மீது அளவற்ற அன்பு ஏற்பட்டது. காரணம், மாற்றாந்தாய் கொடு மை பற்றி கண்டும், கேட்டும், படித்தும் இருந்ததுதான். என் மனை வி என் மீது ஆர்பாட்டம் இல்லாத அளவான அன்பு காட்டு வாள். எனக்கு உடம்பு சரியில்லை என்றாலும், என் தொழில் நிமித்தம் அடிபட்டு குருதி வழிந்தாலும் மனதிற்குள் தான் மருகு வாள். 

நான், 30 வருடம் மரம் அறுக்கும் தொழில் செய்தேன். முதலில், சம்பளத்திற்கு, பத்து வருடம். சதவீதத்தில் ஏழு வருடம். லீசுக்கு, இரண்டு வருடம். பின் வாடகை இடத்தில் சொந்தமாக, பத்து வரு டம். சதவீத அடிப்படை வேலை செய்யும் போது, 29 வயதில் என க்கு திருமணம் ஆனது. ஒன்றரை வருடம் கழித்து மகன், பின் ஒரு மகன் பிறந்து, மருத்து வரின் தவறான சிகிச்சையில் மர ணம். மூன்றாவது பெண், நான்கா வது பெண் (இரட் டையர்). நான்காவது குழ ந்தைகளுக்கு, 11 மாதம் நடக்கும் போது, என் மூத்த பையன், ஆறு வயதில் பாம்பு கடித்து இறந்தான். 

அப்போது எனக்கு வாழ்க் கையே சூன்யமாகி விட்டது. இருக்கும், மூன்று பெண் குழந்தைகளையும் கொன்று விட்டு, நாமும் தற்கொ லை செய்து கொள்ளலாம் என, என் மனைவியிடம் கேட்டேன். அவளும் சரி என்று சொல்ல, குழந்தைகளுக்கு யார் விஷம் கொடு ப்பது என்ற வாக்குவாதத் தில் நாள் கடந்தது. பின் ஒரு முஸ்லிம் அன்பர் அறிவுரைப் படி, இருக்கும் பிள்ளைகளுக் காக வாழ்வது என்று முடிவு செய்தோம். பிறகு தான், மில்லை லீசுக்கு எடுத்து நடத்தி, சொந்தமாக இடம் வாங்கி, அதில் ஒரு இழைப்பு பட்டறை வைத்து, அதையும் சதவீத அடிப்படையில் நடத்தி வருகிறேன். இதில் எனக்கு போதிய வருமானம் இல்லை. முன்புறம் ஒரு பெட்டி கடை வைக்கலாம் என்ற யோசனையில் உள்ளேன். மில் லீசுக்கு எடுத்து நடத்தும் போது, ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின் சொந் தமாக நடத்தும் போது, ஒரு பெண் குழந்தை பிறந்தது. பிறகு, இர ட்டை பெண்களில் ஒன்று, 11 வயதில் கிணற்றில் விழுந்து இற ந்து விட்டது. அது, மிகப்பெரிய சோகம்; சொல்லி மாளாது. தற் சமயம் எனக்கு நான்கு பெண் குழந்தைகள். 

சகோதரி… எனக்கு என்ன பிரச்னை என்றால், என் மூத்த மகளுக்கு, 22 வயதில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தேன். மாப்பிள்ளை புகைப்படம் காட்டும் போது, பையன் பிடிக்கவில்லை என்றோ, ஊர் பிடிக்கவில்லை என்றோ கூறியிருந்தால், நான் வேறு பையனை பார்த்திருப்பேன்; ஆனால், திருமணமே வேண்டாம் என்று கூறி னாள். நான் காரணம் கேட்க, “காரணம் எனக்கு சொல்ல தெரிய வில்லை…’ என பதில் கூறவும், எனக்கு அதிர்ச்சி. இதற்குப்பின், மூன்று பெண் குழந்தைகள் உள்ள நமக்கும் வயது ஏறிக் கொண்டே செல்கிறதே என அவசரம், அவசரமாக ஐ.டி.ஐ., படித்து, துபாயில் வேலை செய்து வரும் பையனை சரியாக விசாரிக் காமல், சிலர் சொன்னதை வைத்து, மணம் செய்து வைத்தேன். 

திருமணம் முடித்து, இரண்டு வருடம் துபாய் சென்று வந்தான். வந்தபின் அவர்கள் வீட்டில் போய் வாழ ஆரம்பித்தாள். மாமியார், மாமனார் சுயரூபம் கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வந்தது. இவனும் இங்கு வந்ததிலிருந்து எந்த வேலைக்கும் செல்லாமல், ஊர் சுற்ற ஆரம்பித்தான். இப்படியே, மூன்று மாதங்கள் சென்றன. “என்ன… ஏதாவது வேலை செய்யாமல் ஊர் சுற்றுகிறாய்…’ என, என் மகள் கேட்டதற்கு, “நான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. என் அப்பா சேர்த்து வைத்துள்ள சொத்தை வைத்து, நாம் குடும்பம் நடத்தலாம். உன் அப்பா எனக்கு என்ன செய்து விட்டார். வெறும், 13 பவுன், சீர்வரிசை செய்தால் மட்டும் போதுமா? எனக்கு பைக்கும், ஒரு லட்சம் ரூபாயும் வாங்கி வா… நான் சொந்த தொழி ல் செய்கிறேன்…’ என்று பதில் கூறி இருக்கிறான்.

மேலும், அவன் தாய், தகப்பனும், “என் பையன் வேலை செய்து, வயிறு வளர்க்க வேண்டும் என அவசியம் இல்லை. நீ உன் அப்பா விடம், உன் பங்கை வாங்கி வா…’ என்றும் பலவாறு தொந்தரவு கொடுத்துள்ளனர். ஒருநாள் பிரச்னை முற்றி, என் மகளிடம் இரு ந்து போன் வந்தது. “அப்பா… இங்கு எல்லாரும் என்னை கொடு மைப்படுத்துகின்றனர். என்னை இங்கிருந்து அழைத்து செல்லுங் கள்…’ என்று. நான், என் நண்பர் இருவருடன் சென்று விசாரிக்கும் போது, என் மகள் மீது பொய் புகார் பல கூறினர். நான் என் மகளை அழைத்துச் சென்று, புத்திமதி சொல்லி, சமாதானப்படுத்தி அனுப் பி வைக்கிறேன் என கூறியதற்கு, மருமகனின் பெரிய அக்கா, என் னை தரக்குறைவான வார்த்தைகளால் பேச ஆரம்பித்தார்.

பிறகு மருமகனும், அவன் தாய், தந்தையும் அந்த பெண்ணோடு சேர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தனர். எனக்கு என்ன செய்வது என தெரியாமல், கண்ணீர் விட்டேன். பிறகு, என் நண்பர்கள், எல்லாரை யும் சமாதானப்படுத்தி, ஒரு வாரம் கழித்து, இருவரையும் பொங்க லுக்கு அனுப்பி வையுங்கள் எனக் கூறினர்; பொங்கலுக்கு வந்தனர். பின், என் மகள், அங்கு இனிமேல் செல்ல மாட்டேன். மீறி அனுப்பி னால் என்னை உயிரோடு பார்க்க மாட்டீர்கள். வேறு வீடு பார்த்து, என் கணவர் சம்பாதிக்கும் பணத்தில் நான் குடும்பம் நடத்துகிறேன் எனக் கூறவும், எங்களுக்கு அதிர்ச்சி. இதனிடையே மருமகன், சம்ப ந்தி ஆகியோர், “நாங்கள் சொன்னபடி நடக்க வேண்டும், இல்லை யேல் தீர்த்து கொள்ளுங் கள்…’ என்றனர். நானும், இனிமேல் என் பெண்ணை அனுப்ப மாட்டேன் என்று கூறிவிட்டேன்.

பிறகு நான்கைந்து முறை பஞ்சாயத்து வைத்தனர். என் மகளோ, “தனியாக வரட்டும்… இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே வேண்டாம்…’ என திட்டவட்டமாக கூறி விட்டாள். பிறகு எனக்கு அவர்கள் கொலை மிரட்டல் விட துவங்கினர். நான் வக்கீல் துணை யோடு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன். அவர்கள் இருவரையும் விசாரித்து, எச்சரிக்கையும், ஆலோசனையும் வழங் கி, மூன்று முறை அலைய விட்டனர். நான்காவது முறை தனி வீடு பார்த்து இருக்க சம்மதித்து, இருவரும் உடன்பட்டோம். 

இதுசமயம், அவன், அரசு பணிமனையில் தற்காலிக மெக்கானிக் காக, ஒரு வருடம் வேலை செய்ய ஆரம்பித்தான். வருட முடிவில் என் மகள் கருவுற்று பெண் குழந்தை பெற்றாள். அவனுக்கும் வேலை முடிந்தது. மீண்டும் அவன் வேதாளம் மரத்தில் ஏறிய கதையாக நடக்க ஆரம்பித்து இருக்கிறான். நாங்கள் எங்கள் மகளை சமாதானப்படுத்தி போக சொன்னால், “அந்த ஊரில் அவர் களை பற்றி கேட்டு பாருங்கள்… பத்து பேர் நல்லவிதமாக சொன் னால், நான் செல்கிறேன்…’ என கூறினாள். நாங்களும் விசாரிக்க, “இந்த பெண் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது, இப்படி பள்ளத் தில் தள்ளிவிட்டு விட்டீர்களே…’ என கூறவும், எங்களுக்கு மரண அடி. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம். என் மருமகன் குடும்பத் தை பற்றி சரியாக விசாரிக்காமல், மாபெரும் தவறு செய்து விட் டோமே என்று தற்கொலை முயற்சிக்கு கூட சென்று விட்டேன். மற்ற குழந்தைகளை பார்த்து, அந்த முயற்சியை கைவிட்டேன். மன உளைச்சலில் தினம், தினம் தவிக்கிறேன். எனக்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள் சகோதரி.
— அன்பு சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —

சோகங்களும், துக்கங்களும் நிறைந்த தாயிருக்கிறது உங்கள் வாழ் க்கை. “சரியான மாப்பிள்ளை பார்க்காமல், என் வாழ்க்கையை கெடுத்து விட்டீர்கள்…’ என்று உங்கள் மகள், உங்களை குற்றஞ் சாட்டுகிறாளா? தகுந்த விளக்கம் தந்தும் மேலும், மேலும் பழி சுமந்துகிறாளா? “ஆம்’ என்றால் உங்களின் மன உளைச்சல் பல மடங்காய் பெருகிதான் போயிருக்கும். விடுங்கள்… சில விடு கதையான உண்மைகளை காலம்தான் விடுவிக்கும். அடுத்தடுத்து நீங்கள் செய்கிற நிவாரணங்கள் தான் உங்கள் மகளை சாந்தப் படுத்தும். நீங்கள் செய்ய வேண்டியவை என்னென்ன தெரியுமா?

1.முதலில் உங்கள் மகளை, ஏதேனும் ஒரு தனியார் பள்ளி யில் ஆசிரியை யாக சேருங்கள். அவருக்கு பொருளாதார சுதந் திரம் கிடைக் கட்டும். உங்களின் மூன்று வயது பேத்தி, உங்கள் வீட்டில் வளரட்டும்.

2.நீங்களும், உங்கள் மனைவியும் பாதிக்கபட்ட மகளுடன் அமர்ந்து, திருமண பந்தத்தை வெட்டிவிட விரும்பு கிறாளா என் பதை கேட்டறிந்து, அவளின் விருப்பத்திற்கேற்ப செயல்படுங்கள். குடும்பநல நீதி மன்றம் மூலம் விவா கரத்து பெறுங்கள் அல்லது மாப்பிள்ளை திருந்தி வர, மூன்று வருட அவகாசம் அளித்து, விலகி நில்லுங்கள்.

3.மற்ற மூன்று மகள்களை படித்த படிப்புக்கேற்ப வேலைக்கு அனுப்புங்கள். சீக்கிரமாய் மணமுடித்து வைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லாமல் அவர்களுக்கு மாப்பிள்ளை பாருங்கள். திரு மணத்திற்கு பின்னும் கூட மூன்று மகள்களும் வேலையை தொடர வேண்டும்.

4.உலகத்திலேயே நமக்குதான் சோகங் களும், பிரச்னைகளும் அதிகம் என சுணங்கி போய் நிற்காதீர்கள். உங்கள் சுணக்கம் உங்கள் குடும்ப அங்கத்தினர்களின் எதிர்காலத்தை எதிர்மறையாய் தாக் கும். தன்னம்பிக்கையாய் இருப்பது போல் நடியுங்கள். தொடர்ந்து நடிக்க, நிஜத்திலேயே உங்களுக்கு தன்னம்பிக்கை வந்து விடும்.

5.நீங்கள் பொறுப்பான குடும்பத் தலைவன். நான்கு மகள்களையும் படிக்க வைத்துள்ளீர்கள். நான்கு மகள்களுமே அப்பா பிள்ளைகள் என நம்புகிறேன். 

6.விவாகரத்து பெற்றபின் உங்களது மகளுக்கு நீங்கள் செய்து வைக்கும் மறுமணம், அவளுக்கு எல்லா சந்தோஷங்களையும் வாரி வழங்கட்டும்.

7.நீங்கள் கடைபிடிக்காத குடும்பக் கட்டுப்பாட்டை உங்கள் மகள்கள் பின்னாளில் கடைபிடிக்க, உங்கள் மனைவி தகுந்த ஆலோசனையை வாரி வழங்கட்டும்.

8.திருமண பந்தம் தவிரவும், வாழ்க்கையில் நிறைய கட்டங்கள் உள்ளன. உச்சங்களை ஜெயிக்க கற்றுக் கொண்டால், அடிவாரத் தில் ஒளிந்திருக்கும் தோல்விகள் சமாதியாகும். சமயங்களில் சில தோல்விகள் வெற்றிகளுக்கு இயற்கை உரமாய் அமையும்.

மூத்த மகளின் வாழ்க்கையில், வசந்தம் வர வாழ்த்துகிறேன் சகோ தரா.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்  
விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: