மொபைல் போன் பயன்படுத்து கையில் ஏற்படும் கதிர்வீச்சு குறித்து நிபந்தனைகள் விதிப்பதில் அரசு கடுமையான முடிவிற்கு வந்துள்ளது. இதனால் மொபைல் போன்களின் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதிகக் கதிர்வீச்சு உள்ள மொபைல் போன்களை இனி விற்பனை செய் திட முடியாது. இந்தியாவில் மொபைல் போன் பயன்பாடு அதிகரிப்ப தனால், மக்கள் நலம் குறித்து இந்த நடவடிக்கைய அரசு மேற்கொள் கிறது. இந்த கதிர் வீச்சினை நம் உடலில் உள்ள திசுக்கள் அடையும் அளவை அடிப்படையாகக் கொண்டு இது தீர்மானிக்கப்படுகிறது. இத னை எஸ்.ஏ.ஆர். ரேட் (SAR – Specific Absorption Rate) எனக் கூறுகி ன்றனர். இது Watt per Kg என அளக்கப்படுகிறது. இதுவரை ஐரோப் பாவில் உள்ள நடைமுறைப்படி 2W/Kg மேலாகக் கதிர்வீச்சு உள்ள மொ பைல் போன்கள் மட்டுமே தடை செய்யப்பட்டன. தற்போது அமெரிக்க நடைமுறையினைப் பின்பற்றி இது 1.6W/Kg என நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதனால், இந்த அளவிற்கும் குறைவாக கதிர்வீச்சு உள்ள மொ பைல் போன்களை மட்டுமே, இந்தி யாவில் இறக்குமதி செய்து விற்ப னை செய்திட முடியும். இங்கே தயாரி க்கப்படும் போன்களும் இந்த நிபந் தனைகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி மொபைல் போன் ஒன்றின் கதிர்வீச்சு, அந்த போன், அதனுடன் தரப்படும் உதவிக் குறிப்பு புத்தகம் ஆகியவற்றில் குறிப்பிடப் பட வேண்டும். இவை தகவல் தொடர்பு துறை மற்றும் மொபைல் போன் நிறுவன ங்களின் இணைய தளங்களிலும் தகவலாகத் தரப்பட வேண் டும். மொபைல் போன்களை விற்பனை செய்திடும் கடைகளிலும், பொது மக்கள் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் இவை அறிவிக்கப்பட வேண்டும்.
இதே போல மொபைல் போன் டவர்களில் ஏற்படும் கதிர்வீச்சும் கட்டுப் படுத்தப் படுகிறது. தற்போதைய அனுமதிக்கப் பட்ட அளவு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இனி விற்பனை செய்யப்படும் மொபைல் போன் களுடன், போன்களைக் கைகளில் வைத்துப் பேசாமல் தள்ளி வைத்து, அதனை ஹெட்செட் ஒன்றுடன் இணைத்துப் பேச உதவிடும் வகையில், போனுடன் ஹேண் ட்ஸ் பிரீ ஹெட்செட் ஒன்று கட்டாயமாக வழ ங்கப்பட வேண்டும். இத னால், மொபைல் போன் விலை உயரும் வாய்ப்பு உள்ளது.
இன்னும் இந்த விதிமுறைகள் அறிவிக்கப் படாததால், மொபைல் போன் நிறுவனங்கள் இது குறித்த கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை. பெரு ம்பாலான சீன மொபைல்கள் மட்டுமே இந்த கதிர்வீச்சு அளவை மீறி இருப்பதாக ஒரு கருத்து மக்களிடையே நிலவி வருகிறது. மற்ற வெளி நாட்டு நிறுவனங்களின் போன்கள் அனைத்தும் இந்த விதிமுறைகளை ஏற்கனவே பின்பற்றி வருவதால், அவற்றிற்கு பாதிப்பு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்