Wednesday, March 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக . . .

டிசம்பர் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

கொடுப்ப‍தெல்லாம் எடுப்பதற்காக• . .

அதிரடி என்றால் அது அம்மா தான்! பால் விலை, பஸ் கட்ட‍ணம் என ஒரே அடியில் சிக்ஸரையும், பவுண் டரிகளையும் அடித்துத் தமிழக மக்க‍ளை ஒரேயடியாய் வீழ்த்தியுள்ள‍துடன் மின் கட்ட‍ண உயர்வு என்ற இமாலய சிக்ஸ ரையும் அடிக்கப்போவதால், கலங்கி நிற்கிறார்கள் களத்திலுள்ள‍ மக்க‍ள்.

க‌டந்த ஆட்சியில் ஏன் இந்த விலையே ற்ற‍ம் இல்லை. பொதுத் துறை நிறுவன ங்களை கடந்த ஆட்சி நஷ்டத்திலேயே இயங்கவைத்த‍ மர்மம் என் ன? என்று நம்மால் கேட்காமல் இருக்க‍ முடியவில்லை.

மத்திய அரசு நிதி தரவில்லை. கடந்த ஆட்சி கஜானாவை காலி யாக்கிவிட்ட‍து. கடன் சுமை களை இந்த ஆட்சியின் மீது ஏற்றி விட்ட‍து. அரசால் என் ன‍ செய்யமுடியும்? என்று பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந் தேன் என்று மக்களிடமே நீதி கேட்டு . . . மன்னிக்க‍வும் நிதி கேட்டிருக்கிற முதல்வரின் வேதனையும் நமக்குப் புரிகி றது. ஆனாலும். . . . . .

நிதி நெருக்கடியும், பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமை யும் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அரசுக்குத் தெர்ந்தா? தள்ளா டும் நிதி நிலையில் இத்த‍ னை கோடி ரூபாய்க்கு இல வசங்கள் தேவைதானா? இலவசங்களுக்காக தேர்த லுக்கு முன்னரோ அல்ல‍ து பின்னரோ செய்த பொருளா தார ஏற்பாடுகள் என்ன‍?

தொலை நோக்குத்திட்ட‍ங்க ளுக்கு அல்லாமல் வாக்கு வங்கி திட்டங்களுக்கு நிதி கேட்டால் மத்திய அரசினால் தர இய லுமா? அப்படித் தந்தால் மற்ற‍ மாநில அரசுகள் தான் சும்மா இருக்குமா?

ச‌மச்சீர் கல்வியில் பிடிவாதம், தலைமைச்செயலக இடமாற்ற‍ ம், பின்பு அதையே மருத்துவ மனையாக்கும் திட்ட‍ம், நூலக இட மாறறம் பின்பு அதையே மருத்துவமனையாக்கும் திட்ட‍ ம் போன்ற வற்றிற்கு இந்த அரசு செய்கின்ற செலவுகள் அவ சியமானது தானா?

இப்ப‍டி எக்கச்சக்க‍ கேள்விகளை உரத்த‍ சிந்தனை உள்ள‍ ஒவ் வொருவரும் கேட்பதில் தவறென்ன‍?

கட்ட‍ண உயர்வு, அந்த வரி, இந்த வரி என்று மக்க‍ளிடமி ருந்தே நிதியைப் பெற்று அதை யே இலவசப் பொருட்களாக மக்க‍ளுக்குத் தருகிற இத்திட் ட‍த்திற்குப் பெயர்தான் நமக்கு நாமே திட்ட‍மோ? எந்த ஆட்சி இதை செய்தாலும் இது அரசி யல் திறன் அல்ல‍. கடைந் தெடுத்த‍ வியாபாரம் தவிர வெறென்ன?

குடிப்பது முதல் கும்பிக்குச் சோறிவிடுவது வரை எல்லாவற்றை யுமே ஆண்டவன் (ஆள்பவன்) கொடுப்பான் என்று கையேந்துகிற தன்மானமுள்ள‍ தமிழன் என்று திருந்துவான்???

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

%d bloggers like this: