நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும்.
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒரு போ தும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லை களும், கட ன்களும் பாவங்களும் கூடும்.
திரியில்லாமல் தீபம் ஏது?
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன் கள் பற் றியும் பார்க்கலாமா?
சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது தான் பஞ்சுத்திரி.
முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வை த்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்கு வோர் வாழைத்தண்டு திரிபோட்டு விள க்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள் ளெருக்குப் பட்டைத் திரியில் விளக் கேற்ற வேண்டும். முழுமுதற்கடவுளா ன கணேசப் பெருமானுக்கும் உக ந்தது இது.
தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப் பேறு பெறவும் மஞ்சள் நிறங் கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண் டும்.
திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரி யும்?
எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணை யினால் பலன்கள் நேரெதிராகவும் வாய் ப்புகள் உண்டே?
ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
வேப்பெண்ணை தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீப ம். எள் எண்ணை (நல்லெண் ணை) தீபம் என்றுமே ஆண்டவ னுக்கு உகந்தது;
நவக்கிரகங்களைத் திருப்தி செ ய்யவு ம் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீப மேற்ற வேண் டும்.
செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண் ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டு வோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண் ணைகளையும் கலந்து விள க்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளை யும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
dear friend
thanks for this post “”””dheepam””””
Superb explanation of grand old tradition, very useful too. Hats off to you for this particular mail.on the right occasion.