Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை

இன்று தனது 62ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் சுப்பர் ஸ்டாருக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள் குவி ந்த வண்ணமுள்ளன. அவருக்கு எமது இணையத்தளம் சார்பாக வும் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்கின்றோம். தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதி த்து இன்று தமிழ கத்தின் சுப்பர் ஸ்டாராகத் திகழும் ரஜினி கட ந்து வந்த பாதை மிகவும் கடினமானது. தனது பாதையில் இருந்த தடை கள் அனைத்தையும் வெற்றிப்படிக் கட்டுக்களா மாற்றி இன்று இந்த உய ரிய நிலையை அடைந்தி ருக்கிறார்.

அவர் கடந்து வந்த பாதை.

தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என தமிழ் நா டே தூக்கி வைத்துக் கொ ண்டாடும் ரஜினிகாந்த் தின் இயற்பெயர் சிவாஜி ராவ் கைக்வாட். சினிமா விற்காக கே. பாலச்சந்த ராலேயே ரஜினி காந்த் என பெயர் மாற்றம் பெற் றார். அதிலிருந்து ரஜினி யின் வாழ்க்கையும் மாற்ற ம் பெற்றது.

ராமோசி ராவ் காயக்வாடு க்கும் ரமாபாய்க்கும் நான் காவது குழந்தையாக டிச ம்பர் 12 1949 அன்று இந்தி யாவின் கர்நாடகத்தில் பிறந்தார். பெங் களூரில் உள்ள ஆசாரிய பாடசா லை மற்றும் விவேகான ந்த பாலக சங்கம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.

படித்து முடித்ததன் பின் னர் பெங்களூரிலேயே பே ருந்து நடத்துனராக வே லை பார்த்துக்கொண்டு மேடை நாடகங்களிலும் நடித்து வந்தார். பின்னர் திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வத்துடன் தமிழகத்தின் சென் னைக்கு சிவாஜி ராவாக வந்து சேர்ந்தார்.

திரைப்படக்கல்லூரியில் முறையாக நடிப்புப் பயின்றார். இந்நிலையில் பாலச்சந்தரின் ஆபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத் தில் தோன்றினார். இதில் கத வொன்றினைத் திறந் தபடி அறிமுகமானார் ரஜினி. அன்று, தான் திறந்தது தி ரையுலகின் கதவை என்று பின்னாளில் திரை யுலகி ற்கு உணர்த்தினார்.

அறிமுகப் படத்தினைத் தொடர்ந்து சில படங்களி ல் வில்லனாக தனது நடி ப்பாற்றலை வெளிப்படுத் தினார். முதன் முதலாக புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் மூலம் நாயகனா க அறிமுகமாகி முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் மூலம் தன்னை நாயகனாக நிலை நிறுத் திக் கொண் டார் ரஜினி.

பின் நாட்களில் பில்லா, போக்கிரி ராஜா, முரட்டுக் காளை, தில்லு முல் லு என தொடர்ந்து பல படங்கள் தொடராக வெற்றி பெற நட்சத்திர அந்த ஸ்துள்ள நாயகனாக தன்னை உயர்த்திக் கொண் டார். இக்காலப்பகுதி யில், 16.02.1981 அன்று லதாவுடன் திருமண பந்த த்தில் இணைந்தார். ஐஸ்வர்யா, சௌந்தர்யா என இரு பெண் குழந்தை களுக்கு தந்தை ஆனார். தனது மகள்கள் இருவருக்கும் தற்போது திரு மணம் முடித்து வைத்து தகப்பன் என்ற தனது பாத்திரத்தின் நிறை வை யும் கண்டுள்ளார்.

ஆன்மிகத்தில் பெரும் ஈடு பாடு கொண்ட ரஜினி கா ந்த அதனை வெளிப்படு த்தும் வண்ணம் தனது 100 ஆவது படமாக ஸ்ரீ ராக வேந்திரா படத்திலும் 2002 ஆம் ஆண்டும் பாபா படத் திலும் விரும்பி நடித்திரு ந்தார். மேலும், ஒவ்வொ ரு படமும் முடிந்த பிறகு பாத யாத்திரையாக வே ஸ்ரீ ராகவேந்திரா கோயிலு க்கு செல்வதை வழக்கமா கக் கொண் டுள்ளார்.

தொடர்ந்து வேலைக்கார ன், மனிதன், தர்மத்தின் தலைவன் போன்ற ஜனர ஞ்சகமான திரைப்படங் கள் மூலம் ஆறிலிருந்து 60 வயது வரை யான அ னைத்து ரசிகர்களை தன து நடிப்பு மற்றும் ஸ்டை லினால் தன் பக்கம் சாய் த்துக்கொண்டார்.

1990ஆம் ஆண்டுக்கு பின் னரான காலப்பகுதியில் வெளியான அண்ணாம லை, பாட்ஷா, அருணாச் சலம், முத்து, படையப்பா என வரிசையாக அனை த்துப் படங்களும் பெரும் வசூலுடன் பெரும் சாதனைகள் படை த்தன.

1990ஆம் ஆண்டுக்கு பிறகு தன்னை ஒரு முழு நடிகனாகவும் அதே நேரத்ததில் தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாகவும் பல் வேறு சாதனைகளை சினி மாவில் நிகழ்திக்காட்டி னார். நடிகராக மட்டுமன் றி தயாரிப்பாளர், திரைக் கதாசிரியராகவும் சினிமா வில் தன் பன்முகத் தைக் காட்டியுள்ளார். தற்போது இவருக்கு தமிழகத் தில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நூறு ரசிகர் மன்றங்களை தோற்றுவிக் குமளவிற்கு இவரது இடம் சினி மாவில் மிகப்பெரியது. குறிப்பாக ஜப்பா னில்கூட இவருக்கு ரசிகர் மன்றம் உள்ளது. ஆசியா விலே ஜெக்கிச் சானுக்கு அடுத்த படியாக அதிக ரசிகர்க ளைக் கொண்ட வராக ரஜினியே கருதப் படுகிறார். தமிழ் சினி மாவின் வியாபாரம் இந் தியா தாண்டி பெ ரியளவில் வருமானம் பெற இவர் ஒரு முக்கிய காரண மாவார். 

மேலும், ரஜினி தமிழக அரசியலி லும் அவ்வப்போ து பெரும் தாக்கம் செலுத்தினார். இ வரது படங்களிலு ம் அரசியல் வா டை சற்று தூக்க லாகவே இருக்கு ம். இதனாலே இவ ர் அரசியலுக்கு வ ருவார் என பலரு ம் ஆருடம் கூறி வருகின்றனர். ஆ னால் ரஜினியின் பதில் இன்று வ ரை வருவேன் ஆ னா வரமாட்டேன் என்ற பா ணியி லே அமை ந்துள்ள து.  இது வ ரை தமி ழ் மொழியிலும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காள மொழி ஆகிய மொழி களிலும் 170 திரைப்படங்களில் நடித்துள் ளார். பிலிம் பெயார், தமிழக அரசு விருது, கலை மாமணி, பத்ம ஸ்ரீ என பல விருதுகளையும் பெற்று ள்ளார். 

சாதாரணமாக த னது வாழ்க்கை யை ஒரு பேருந்து இயக்குநராக ஆர ம்பித்து இன்று சுப்பர் ஸ்டாராக உயர்ந்த இவரது வளர்ச்சி பலரை யும் கவர்ந்து பலர் தங்களது ரோல் மொடலாக இவ ரை கொள்ள வழி செய்தது. இதில் இன்றைய தலை முறை நடிகர்கள் ஏராளமாக உள்ள னர். குறிப்பாக தற் போதைய முன்ன ணி நடிகர்களான அஜித், விஜய் இரு வரும் சுப்பர் ஸ் டாரையே ரோல் மொடலாகக் கொ ண்டுள்ளனர்.  வெற்றி தலைக்கேறாமல் இருக்கும் அரிய வகை மனித ர்களில் இவரும் ஒருவர் என்பதை இன்று வரை நிரூபித்து வருகிறார். தான் இந்நிலைக்கு வர பெரிதும் உதவிய கே. பாலச்சந்தர் மற்றும் ரஜி னியின் நெருங்கிய நண் பரான உலக நாயகன் கமல்ஹாசன் போன்ற பலருக்கும் இந்நாள் வரை நன்றி கூறி வருகிறார். 

அரசியலுக்குள் நு ழையா விட்டாலு ம் பலருக்கு அற க்கட்டளைகள் மூ லம் விளம்பரம் இன்றி பல உதவி களை செய்து சினி மா கடந்து நல்ல மனித ராகவும் மக் கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்வாறு தனக் கென தனி வழிய மைத்து திரையு லக ஜாம்பவானா கத் திகழும் சுப்பர் ஸ்டார் ரஜினிகா ந்த் இன்று தனது 62 ஆவது பிறந்த நாளைக் கொண் டாடுகிறார். இன்று போல் என்றும் பல்லாண்டு காலம் நோய் நொடி யின்றி வாழ நாமும் சுப்பர் ஸ்டாரை வாழ்த்துவோம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: