Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இணைய இணைப்பு இயங்குவது எப்படி?

எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட் டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட் டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத் தும் அனைவருக்கும் இருக்கும். தெளி வான மற்றும் நிறைவான பதில் கிடை க்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங் கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் எதுவாக வே ண்டுமானாலும் — இன்டர் நெட் எக் ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக் ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக் — என எதுவாக வேண்டுமா னாலும் இருக்கலாம். இதனை “கிளை யண்ட்’ என அழைக்கிறோம். தற்போதைக்கு “வாடிக்கையாளர்’ என வைத்துக் கொள்வோம். இந்த வாடிக்கையாளர் நீங்கள் தேவை என்று சொன்ன, இ ணைய தளம் வேண்டும் என்று சொ ன்ன உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்ட ர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது. அந்த சர்வர், தான் இணைக்கப் பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப் படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரி லிருந்து இந்த வேண்டுகோள் “வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்’ என்னும் அதிவேக வழியில் செல்கிறது. இப்படி யே சென்று நீங்கள் டைப் செய்த முக வரி உள்ள தளத்தை அடை கிறது. அத னை “உபசரிப்பவர்’ என்று வேண்டுமா னால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட் டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்பு கிறது. நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அ னுப்புகிறது. இவ் வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வ ளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள வி ஷயமும் உள்ள து. 

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரி யை சொற்களில் அமைத்து அனுப்பு கிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்ட ருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொ ள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது. இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவு கிறது. புரோட்டோகால் என் பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமை க்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலா ம். இது டி.சி.பி., ஐ.பி., எச்.டி.டி.பி., எப்.டி.பி., எஸ்.எம்.டி.பி., மற்றும் வை-பி (TCPIP, HTTP, FTP, SMTP WiFi) எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக டி.சி.பி – ஐ.பி. பயன் ப டுத்துவதால் அது குறித்து காண் போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வோரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட் டாகwww.yahoo.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும். இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களு டைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலை யானது அல்ல. நீங்கள் அப் போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந் தமானது. முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண் டும் ஒரு முகவரி வழங்க ப்படும். இதற்குக் காரணம் ஒ ரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத் தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டி யுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன. இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது. ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட் டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தக வல் வர வேண்டியுள்ளது என்று தெரிய வரும். டி.சி.பி. (Transmission Control Protocol) என்பது அனுப்பப்படும் தகவல்க ளைக் கையாளும் வழி முறை. தகவல் களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு. ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறு தி செய்கின்றன. 

அதென்ன தகவல் பாக்கெட்? 

இன்டர்நெட் என்பது “பாக்கெட் ஸ்விட்ச்டு நெட் வொர்க்’ என அழை க்கப்படுகிறது. இதற்கு மாறான நெட்வொர்க் “சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர்க்’ என அழைக்கப் படுகி றது. சர்க்யூட் ஸ்விட்ச்டு நெட்வொர் க்கில் இணைப்பு ஏற்படுத்துகையில் அந்த இணைப்பை மற்றவர்கள் பயன் படுத்த முடியாது. ஆனால் பாக்கெட் ஸ்விட்ச்டு நெட்வொர்க் கைப் பலர் பகிர்ந்து கொள்ள முடியும். ஒரே நேரத்தில் பலர் கேட்கும் தகவல்கள் பிரித்து அனுப்பப்படு கின்றன. இவை அதனதன் சேரும் இடத்தைச் சேர்ந்தவுடன் ஒன்றாக இணைக்கப்பட்டு கேட்பவரிடம் தரப்படுகின்றன. ஒவ்வொரு பாக் கெட் தகவலிலும் ஏறத்தாழ 1500 கேரக்டர்கள் கொண்டதாக இருக் கும். ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஹெடர்கள் அமைக்கப் பட்டு அனுப்பப் படுகின்றன. இந்த ஹெடர்களில் இந்த பாக்கெட்கள் எப்படி இணைக்கப்பட வேண்டும் என எழுதப்ப ட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் இவை இணைக்கப்படும். ஒரு எடு த்துக் காட்டைப் பார்ப்போம். பழைய காலத்து அகலமான திறப்பு கொ ண்ட கடைகளில் அகலமான கதவு இருந்தால் அதனை திறந்து வைத் தால் அதிக இடம் பிடிக்கும் என்ப தால் சிறு சிறு பலகைகளை மேலும் கீழும் அவற்றைக் கொள்வதற்கான சிறிய பள் ளங்களை ஏற்படுத்தி செருகி பின் ஒரு பெரிய இரும்பு பா ளத்தில் இணைத்து பூட்டு போ டுவார்கள். காலையில் இதனைத் திறந்தவுடன் இந்த பலகைகளைக் கழற்றி ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைத்திடுவார்கள். மீண்டும் கடையைப் பூட்டுகையில் சரியாக வைப்பதற்காக கதவில் எண் அல்லது வேறு குறியீடுகளை அமைத்திருப் பார்கள். இதே போல் தான் சிறு சிறு பொட்டலங்களில் தகவல்கள் செலுத் தப்படுகின்றன. தேவை எனக் கேட்ட கம்ப்யூட்டரை அடைந்தவுடன் அவை ஒன்று சேர்க்கப்பட்டு தரப்படுகின்ற ன. ஒவ்வொரு ஹெடரிலும் “செக் சம்’ (Checksum) எனப்படும் ஒரு எண் தரப்படும். இந்த எண் மூலம் வர வே ண்டிய தகவல் சிந்தாமல் சிதறாமல் வந்து விட்டதா என்று அறியப்பட்டு இணைக்கப்படும். இந்த வேலையை டி.சி.பி. வழிமுறை செயல் படு த்துகிறது. 

இப்போது முதல் செயலுக்கு வருவோம். நீங்கள் சொற்களில் டைப் செய்திடும் முகவரி எந்த இடத்தில் எண்களாகக் கம் ப்யூட்டருக்கு ஏற்ற படி மாறுகிறது? நீங் கள் டைப் செய்த முகவரியை வைத்துக் கொண்டு உங்கள் ஐ.எஸ்.பி. சர்வர், “டொ மைன் நேம் சர்வர்’ (Domain Name Server DNS) என்ற ஒன்றை நாடுகிறது. இந்த சர் வரே நீங்கள் தந்த முகவரியின் பெயரின் அடிப்படையில் தேடுதலைச் சுருக்கித் தேடி முகவரிக்கான எண் தொகுப்பை ஐ. எஸ்.பிக்கு வழங்குகிறது. பின் அந்த எண் முகவரியை அடிப்படையாகக் கொண்டு இன்டர்நெட்டில் தேடல் தொடங்கி குறிப்பிட்ட சர்வரை அடைகிறது. பின் முன்பு கூறியபடி தகவல்கள் கிடைக்கின்றன. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: