Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

3ஜி வை-பி இணைந்த பட்ஜெட் போன்கள்

தொலை தொடர்புத் துறையின் நவீன அறிமுகமாக மக்களிடையே பரவி வருவது 3ஜி பயன்பாடு. தொடக்கத்தில் இதெல்லாம் நமக்கெதுக்கு என்று எண்ணி யவர்கள், தங்கள் மொபைல் சேவை நிறுவனத்திடம் கே ட்டு பெற்று பயன்படுத்தத் தொடங்கி யுள்ளனர். இந்த வசதியுடன் வை-பி எனப் படும் வசதியும் பெரும் பாலா ன போன்களில் கொடு க்க ப்படுகிறது. இந்த வகை யில், பலரும் வாங்கும் வகை யில் ரூ.10,000க்கும் குறைவா ன விலையில் மக்கள் அதி கம் வாங்கும் மொபைல் போ ன்கள் எவை என்று சந்தை யில் சுற்றிப் பார்க்கும் போது, கீழ்க்காணும் போன்கள் தென் பட்டன.

1. மைக்ரோமேக்ஸ் க்யூ 80: இது ஒரு ஸ்மார்ட் போன் இல்லை என் றாலும், இதன் 3G மற்றும் WiFi சப்போர்ட் இதற்கு தனி அந்தஸ்தினைத் தந்துள்ளது. ஜாவா அடிப்படையில் இயங்கும் இந்த மொபைல் போனில் நிம்பஸ், நியூ ஷன்ட், என்.ஜி.பே மற்றும் புளூம்பெர்க் போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளன. எளிதாக டைப் செய்திட வசதியாக இதன் கீ போர்ட் அமைக்கப் பட்டுள்ளது. மற்ற மைக்ரோமேக்ஸ் போன்களுக்கு மாற்றாக இதில் ஆப்டிகல் ட்ராக் பேட் தரப்பட்டுள்ளது. 240 x 320 ரெசல்யூசன் கொ ண்ட 2.4 அங்குல டி.எப்.டி. திரை, நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE /GPRS, WiFi புளுடூத், யு.எஸ்.பி.2., 3 மெகா பிக்ஸெல் கேமரா, வீடியோ பதிவு, இரண்டாவதாக விஜிஏ கேமரா, 3.5 மிமீ ஆடியோ ஜாக்கெட், 8 ஜிபி வரை அதிகப்படுத்தும் திறன் கொண்ட மெமரி ஆகியவை இதன் சிறப் பம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 4,900.

2. மைக்ரோமேக்ஸ் ஏ 70: இந்த மொபைல் போன் குறித்து ஏற்கனவே இந்த பகுதியில் எழுதப்பட்டது. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட்வொர்க் இணைப்பிற்கு 3G, EDGE/GPRS, WiFi புளுடூத், 5 மெகா பிக்ஸெல் ஆட் டோ போகஸ் கேமரா, 32 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி ஆகியவை மற்ற மைக்ரோமாக்ஸ் போன்களிலிருந்து இதனை வேறு படுத்திக் காட்டுகின்றன. இத ன் அதிகபட்சவிலை ரூ. ,200.

3. லாவா எஸ்12: இந்நிறுவ னம் இன்னும் பிரபலமாக வில்லை என்றா லும், இந்த எஸ்12 மொபைல் பார்க்கப் பட வேண் டிய ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் மொபைல் போ ன்களில் இல்லாத ஒருவகை வடிவமைப்பு இதி ல் உள்ளது. இதில் ப்ராசசர் இயங்கிய போதும், இதன் முப்பரிமாண யூசர் இன்டர்பேஸ் எந்த பிர ச்னையும் இன்றி இயங்குகி றது. இந்தியாவை மையப்ப டுத்தி பல அப்ளிகேஷன்கள் இதில் தரப்படுள்ளன. டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தி தளம் தரப்பட்டு ள்ளது. இதன் பேட்டரி சார்ஜ் செய்த பின்னர் இரண்டு நாட்களுக்குப் பயன்படுத்தும் வகையில் மின்சக்தியை அளிக்கிறது.இதன் மற்ற அம் சங்கள்: 

480 x 320 பிக்ஸல்களுடன் 3.2 டி.எப்.டி. கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், நெட் வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம், அஎககு சப்போர்ட்டு டன் GPS, A2DP இணைந்த புளுடூத், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 640 x 480 ரெசல்யூசனில் வீடீயோ பதிவு, 3.5 மிமீ ஆடியோ ஜாக், 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொ ண்ட நினைவகம். இதன் அதிக பட்ச விலை ரூ.8,200.

4. சாம்சங் காலக்ஸி பிட் எஸ் 5670: ஆண்ட்ராய்ட் 2.2 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், சற்றே பெரிய திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைல் வை-பி மற்றும் 3ஜி சேவையினைத் தேடுபவர்களின் கவன த்தை ஈர்க்கிறது. SWYPE இதில் பதியப்பட்டு, DNSe ஒலி தொழில் நுட்ப த்துடன் கிடைக்கிறது. ஆட்டோ போகஸ் கொண்ட 5 எம்பி கேமரா பல செட்டிங்ஸ் வசதியுடன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 320 x 240 ஆக உள்ளது. தொடுதிரை இயக்கத்தில் TouchWiz 3.0 UI யூசர் இன்டர்பேஸ் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத் திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. கூடுத லாக, AGPS சப்போர்ட்டுடன் GPS, A2DP இணைந்த புளுடூத் கிடைக்கிறது. 32 ஜிபி வரை அதிகப்படுத்தும் வசதி கொண்ட நினைவகம் தரப்ப ட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,100.

5.நோக்கியா இ5: ஓராண்டுக்கு முன்னர் சந்தையில் இது அறிமுகமாகி யிருந்தாலும், இன்றும் பலரின் விருப்பத் தேர்வாக உள்ளது. வசதியான குவெர்ட்டி கீ போர்ட், சிம்பியன் பதிப்பு 9.3 இயக்கம் என அனைத்தும் கூடு தல் வசதியுடன் உள்ளன. துல்லிதமான, ரம்மியமான ஒலி வெளிப் பாட்டினைத் தரும் சிறப்பினைக் கட்டாயம் இங்கே குறிப்பிட வேண்டும். கூடுதலாக எம்.எஸ்.ஆபீஸ், ஸிப் பைல் வசதி, பி.டி.எப். ரீடர் ஆகி யவையும் கிடைக்கின்றன. இதன் பேட்டரியும் நீண்ட நாள் உழைப் பதாகவும், நீண்ட நேரப் பயன்பாட்டினைத் தருவதாகவும் தரப்பட்டுள் ளது. மற்ற சிறப்பம்சங்கள்: இதன் திரை 2.3 அங்குல அகலத்தில் டி.எப்.டி. திரை 320 x 240 ரெசல்யூசனுடன் பளிச்சிடுகிறது. நெட்வொர்க் இணை ப்பிற்கும் ஹாட் ஸ்பாட் இயக்கத்திற்கும் 3G, EDGE/GPRS, WiFi தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. 5 எம்பி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தக் கூடிய ராம் நினைவகம் உள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,700. 

இந்த பட்டியலில் சில மொபைல் போன்கள் விடுபட்டுப் போயிருக் கலாம். இருப்பினும் மேலே தரப்பட்டவை பலரின் விருப்பத் தேர்வாக, குறைந்த விலையில் கிடைப்பனவாக இருப்பதால் தரப்பட்டுள்ளன. 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: