Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அபார்ஷனு(கருச்சிதைவு)க்கான தீர்வு:

* அபார்ஷன் என்றால், கருத்தரித்த 5 மாதங்களுக்கு முன்புவரை (20 வா ரம்) எப்போது வேண்டுமானாலும் முடிவடைந்து விடக்கூடிய கர்ப்பம் என்பதாகும். மருத்துவ ரீதியாக பா ர்த்தால், (மிஸ்கேரேஜ்) என்றால் தானாகவே கருச்சிதைவு என்று பொருள்.

* அபார்ஷன் ஏற்படுவதற்கான சரி யான காரணத்தைச் சொல்வது மிக வும் கடினம். எப்படியிருந்தாலும் நிறைய அபார்ஷன்களுக்குக் கார ணமாக இருக்கும் ஒரு விஷயம் அப்நார்மல் எண்ணிக்கையிலான குரோ மோசோம்கள்தான். அது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக் கலாம். இதற்கான ஒரு சில தீர்வுகள் இதோ.

த்ரெட்டண்ட் அபார்ஷன்:

* இந்தப் பிரச்னையில் அல்ட்ரா சவு ண்ட் மூலமாக கருவிலிருக்கும் குழந் தையின் இதயத் துடிப்பை பார்க்க முடிந்தால், அந்த கர்ப்பம் தொடர்ந்து வளர்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். த்ரெட்டண்டு அபா ர்ஷனில், வலியில்லாத லேசான ரத்தப்போக்கும் ஏற்படலாம். இதற்கு உங்கள் மகப்பேறு மருத்துவர், ஒன்று (அ) இரண்டு நாட்கள் பெட் ரெஸ்ட் எடுக்கச் சொல்லுவார்.

* இப்படிச் செய்தால் ரத்தப்போக்கு நிற்பதுடன் கர்ப்பமும் தொடர்ந்து நன்றாக ஆரம்பிக்கும். இதுபோன்ற சமயங்களில், நீங்கள் ஏற்கென வே செய்து வந்த உடற்பயிற்சி, நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பது, தாம்பத்ய உறவையும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வரை தள் ளி வையுங் கள்.

* த்ரெட்டண்ட் அபார்ஷன் என்ற இந்தப் பிரச் னைக்கு பல வருடங்களாக ஹார்மோன் மாத் திரையோ அல்லது இன்ஜெக்ஷனோ தேவையில்லை என்று நிரூபிக் கப்பட்டுள்ளது.

இன்கம்ப்ளீட் அபார்ஷன்:

* ரத்தப்போக்கு ஆரம்பித்து கருவின் சில பாகம் மட்டும் வெளியேறினால் ரத்தப்போக்கு அதிகமாகிவிடும். இதற் கு டி அண்ட் சி மூலமாக கருப்பையி ன் உள்ளே மீதமிருக்கும் திசுக்களை எடுப்பார்கள்.

மிஸ்டு அபார்ஷன்:

*இதில் கருப்பையில் இருக்கும் கரு வானது, எந்தவித ரத்தப்போக்கும் இ ல்லாமல் இறந்து போயிருக்கும். இது முதல் சில வாரங்களில் ஆகி இருந்தால் மாத்திரைகள் மூலமாகவே கருப்பையை சுத்தம் செய்யலாம். கரு பெரியதாக இருந்தால் `டி அண்ட் சி’ அல்லது பிரசவ வலியை ஏற்படுத் தியோ இறந்த அந்தக் கருவையும், நச்சுக் கொடியையும் அகற்றி விடு வார்கள்.

எந்த கர்ப்பமாக இருந்தாலும் உங்களு டைய ரத்த வகையைத் தெரிந்து கொ ள்ளுங்கள். உங்கள் ரத்தவகை நெக ட்டிவாக இருந்தால், அதற்கான பாது காப்பு ட்ரீட்மெண்ட்டை செய்து அடுத் தடுத்த கர்ப்பங்களில் இதனால் பிர ச்னை வராமல் டாக்டர் பார்த்துக் கொள்வார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: