ஒரு சிறுவன் இருந்தான்.அவனுக்குக் கராத்தே கற்றுக் கொள்ள வே ண்டும் என மிகுந்த ஆசை.ஆனால் அவனுக்கு இடது கை இல்லை .
முழுக்கையும் ஒரு விபத்தில் இழந்து விட்டிருந்தான். ஆயினும் அவன் ஆ சைப்பட்டான்.
ஒரு கராத்தே மாஸ்டரிடம் சென்றா ன். அவரும் கற்றுக் கொடுக்க இசைந் தார். பயிற்சி தொடங்கியது . சிறுவ னும் மிக ஆர்வத்துடன் தீவிரமாகக் கற்றுக் கொண்டான்.
ஆனால் ஓராண்டுக்குப் பின்னும் ஒ ரே ஒரு தாக்குதல் முறையை யே அவனுக்குச் சொல்லிக் கொடுத்திரு ந்தார்.அவனுக்கு அது ஏன் என்றே தெரியவில்லை.அவன் மாஸ்ட ரிடம் கேட்டான் ”வேறு முறைகள் ஏதும் கற்றுத்தரவில்லையே?”
மாஸ்டர் சொன்னார்”இது ஒன்று போதும் உனக்கு.இதில் முழுத் தேர்ச்சி பெற்றால் போதும்.” சில மாதங்களுக்குப் பின் மாஸ்டர் அவனை ஒரு கராத்தே போட்டியில் கலந்து கொள்ளச் செய்தார். அவனே ஆச்சரியப் படும் விதத்தில் அவன் முதல் இரண்டு சண்
மூன்றாவது போட்டி சிறிது கடினமா க இருந்தது.சிறிது நேரச் சண்டை க்குப் பின் எதிராளி பொறுமையிழ ந்த நேரத்தில் சிறுவன் அவனது ஒ ரே தாக்குதலைப் பயன் படுத்தி வெ ன்றான்.
இறுதிப்போட்டிக்கு அவன் தகுதி பெற்றுவிட்டான். அப்போட்டியில் அவன் எதிரி பெரியவனாக, பலம் வாய்ந்தவனாக இருந்தான். அவ னுடன் ஒப்பிடும்போது சிறு வன் சண்டைக்கே தகுதியற் றவன் போல் காணப்பட்டான்.
போட்டி முடிந்து திரும்பும்போது மாஸ்டர் எல்லாச் சண்டையைப் பற்றியும் தன் கரு த்துகளைச் சொன்னார்.அப்போது பையன் கேட்டான் ”மாஸ்டர்.ஒரே ஒரு தாக்குத லை வைத்துக் கொண்டு என் னால் எப்படி வெற்றி பெற முடிந்தது?”
மாஸ்டர் சொன்னார்”நீ கற்றுக்கொண்டது கராத்தேயிலேயே மிகக் கடினமான ஒரு தாக்குதல்.அதோடு இந்தத் தாக்குதலிரு ந்து எதிரி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உன் இடது கையைப் பிடி த்தால்தான் முடியும்!”
ஆம்!அச்சிறுவனது பெரிய பலவீனமே அவனது பெரிய பலமாகி விட்டது! உண்மைதான்.சரியான மனப்பாங்கும்,அணுகு முறையும் இருந்தா ல், நமது பலவீனத்தையே நமது பலமாக மாற்ற முடியும்!
தொடர்ந்து சிறப்பான பதிவுகள் எழுதும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்…