சித்துகள் பற்றிய தகவல் கள் நம் இலக் கியங்களிலும் புராணங்க ளிலும் நிறைய உண்டு. நமது முன் னோர்களான ரிஷிகள் எல்லா ருமே சித்தர்கள்தான். இதிகாசங்களை எழு திய வால்மீகி, வியாசர் இருவரும் சித்தர்களே. ராமாயணத்தில் வரும் வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகி யோரும் கூட சித்தர்கள்தான்.
வசிஷ்டர் தம் தவ வலிமை முழுவ தையும் தன் கையிலிருந்த தண்டத் தில் இறக்கி, அதைத் தன் முன்னால் நிறுத்தி வைத்து விட்டார்.
ரிஷி ஆவதற்குமுன் மன்னராய் இருந்த விஸ்வாமித்திரர், வசிஷ்ட ரிடம் இருந்த பசுவான காமதேனுவைக் கவர ஆசைப்பட்டு, தன் படைவீரர்களையும் இணைத்துக் கொண்டு கடும் யுத்தத்தில் ஈடு பட்டார்.
அந்த மாபெரும் யுத்தம் முழுவதும் வசிஷ் டரின் தண்டம் என்கிற அந்த ஊன்றுகோலுடன் தான் நடந்தது! அவர்கள் எறிந்த அத்தனை அம்பு கள், வாள், வேல், ஈட்டி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும் வசிஷ் டரின் தண்டமே சரசரவென அள்ளி விழுங்கி விட்டது!
விஸ்வாமித்திரர் விதிர்விதிர்த்துப் போனார். வசிஷ்டர் கைவரப் பெற் றிருந்த அந்த சித்தை தானும் அடை ய விரும்பி அவர் தவம் மேற் கொண்டதையும், வசிஷ்டர் வாயா லேயே பிரம்ம ரிஷி என்று அவர் பட்டம் பெற்றதையும் ராமாய ணம் சொல்கிறது.
அது மட்டுமா? விஸ்வாமித்திரருக்கும் சித்துகள் கைவரப் பெற்ற தையும், அவர் பின்னா ளில் சொர்க்கத்திற்குப் போட்டியாக இன் னொரு சொர்க்கமாக திரிசங்கு சொர்க்கத்தை ஆகாயத்தில் நிர்மா ணித்ததை யும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.
சித்தர்கள் சித்துகளைச் செய்ய வல்லவர்கள் என் பதால் சித்துக ளைச் செய்ய வல்லவர்கள் எல்லா ரையுமே ஒரு கண்ணோட்ட த்தில் சித்தர்கள் என் று சொல்லலாம். அப்படிப் பார்த்தால் அனுமன் கூட ஒரு சித்தர்தான்!
இன்று கடவுளாகவே கொண்டாடப் படும் அனுமன், அபார சக்தி நிறை ந்தவன் அல்லவா? சஞ்சீவி மலை யையே தூக்கிய அவன், தன்னை வழி படுபவர்களின் வாழ்க்கையையும் தூக்கி விடக் கூடி யவன் ஆயிற்றே? அனுமன் தன் இடைவிடாத ராம நாம ஜபத்தால் ஏராளமான சித்துக ள் கைவரப் பெற்றிருந்தான்.
அஷ்டமா சித்திகள் என்று சொல்லப் படுபவை சித்துகள்தான். அதா வது எட்டுவிதமானஆற்றல்கள் கைவரப் பெறுவது. அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாமி யம், ஈசத்துவம், வசித்து வம் என அந்த எட்டுவித ஆற்றல்கள் புரா ணங்களில் பட்டியலிடப் படுகின்றன.
மகிமா என்றால் மிகப் பெரிய உருவம் எடுக்கும் வகையிலா ன சித்து கைவரப் பெறுதல். ஆனால் அப்படியொரு சித்து அனு மனு க்கு வாய்த்திருந்தது என்பதை அவனே அறியாதிரு ந்தபோதுதான் ஜாம்பவான் அ வன் ஆற்றலை அவனுக்குச் சொல்லிலி அவனை உற்சாகப் படுத்த வேண்டியிருந்தது. அப் படி உற்சாகப்படுத்திய பிற கு அனுமன் அந்த சித்தின் வலிலிமையால் கடலையே கடந்தான் என் பதை கம்ப ராமாயணத்தில் பார்க்கிறோம்.
மகேந்திர மலையின்மேல் நின்று பேருருவம் எடுத்து அனுமன் கடலைத் தாண்டியபோது பற்பல உற்பா தங்கள் நிகழ்ந்ததாக கம்பர் வர்ணிக் கிறார். அனுமன் காலை உந்தியதால் மகே ந்திர மலை அழுந்தப் பெற்று, அதிலிருந்த அருவி நீருடன் அந்த மலையில் எங்கும் பரவியிருந்த செந்தூரத் துகள் கலந்து வழிந்த தாம். அது மலையரசன் சிந்திய ரத்தம்போல் தென்பட்டதாம்.
மலையிலிலிருந்து அஞ்சி வெளிப்பட்ட பாம்புகள் மலையரசனின் குடல்போல் தோன்றியதாம். அதுமட்டுமல்ல; நீண்ட வாலோடு அனுமன் கடலைத் தாண்டியது பட்டம் பறப்பதுபோல் தோன்றியது என்கி றார் கம்பர். (கம்பர் காலத்திலேயே பட்ட ம் விடும் பழக்கம் இருந்தது என்பதையும் நாம் புரிந்துகொள்ள முடிகிறது.) அனுமன் பெற்றிருந்த சித்திகளின் சிறப்பை அவன் சீதா தேவிமுன் பேரு ருவம் கொண்டு காட்சி தந்தபோதும் நாம் அறிய இயலும். அவனது காதில் சூரிய- சந்திரர்கள் இரு குண்டலங்க ளைப் போல் தோன்றின என்றும்; அவன் தலைமுடியில் அகப்பட்டுக் கொண்ட நட்சத்திரக் கூட்டங்கள், காட்டில் மின்னும் மின்மினிப் பூச்சி களைப்போல் காட்சி தந்தன என்றும் கம்பர் வர்ணிக்கும் அழகே அழகு!
இந்த இடத்தில் கம்ப ராமாயணத்தி ற்குப் பேருரை எழுதிய வை.மு. கோ பாலகிருஷ்ண மாச்சாரியார், தம் உரையையே ஒரு கவிதை போல் எழுதுகிறார். மகிமா என்ற பேருருவம் எடுக்கும் சித்தைப் பற்றி வி ளக்கும்போது, கூடவே சித்துகளில் இன்னொன்றான அணி மா என்ற சித்தைப் பற்றியும் விளக்குகிறார் அவர்.
அணிமா என்றால் மிகச் சிறிய உருவம் எடுப்பது. எப்படி என்றால் ‘சோவெனப் பெய்யும் பெருமழையின் இடையே மழைநீர் மேலே படாதவாறு மிக மெல்லிய உரு எடுத்து இடை நட த்தல்‘ என்கிறார்! கம்பர் எழுதியது கவி தையா அல்லது கம்பர் கவிதைக்கு எழு தப் பட்ட வை.மு.கோ. வின் உரை கவிதையா என்ற பிரமிப்பு ஏற்படு கிறது நமக்கு.
இத்தகைய சித்துகள் ஒருவருக்குத் தவ ஆற்றலால் வருவதா அல்லது குருவரு ளால் வருவதா என்ற கேள்வி எழுகிறது. இரண் டாலும் வரும் அல்லது இரண்டும் இணைந்தும் வரும் என்று கொள்ளலா ம். ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஏராளமான ஆற்றல்கள் இரு ந்தன. கடும் தவத்தினால் அவர் பெற்ற சித்துகள் அவை.
அவர் பூத உடலைத் துறப்பதற்கு நாட் கள் நெருங்கிக் கொண்டிருந்த இறுதிக் காலம். மாடியில் ஓர் அறையில் மிக வும் பலவீனமாக அவர் கட்டிலில் படு த்திருந்தார். தற்செயலாக சாரதாதேவி அந்த அறைக்கு வந்தார். ஒரு விந் தையான காட்சியை அவர் கண்டார். பரமஹம்சர் திடீரெனத் துள்ளிக் குதி த்து அவர் இருந்த மாடி யிலிலிருந்து தட தடவெனப் படியில் இறங்கி கீழே ஓடினார்! சற்று நேரத்தில் திரும்ப வந் து அதே கட்டிலிலில் பழையபடி புற்று நோயா ளியாகப் படுத்துக் கொண்டு விட்டார்!
சாரதா தேவியால் தன் கண்களை நம்ப இயலவில்லை. யார் இவர்? நோய்வாய்ப்பட்ட இவரால் எப்படி ஒரு பதினாறு வயது பையனை ப்போல் இத் தனை வேகமாக ஓட முடிந்தது? அப்ப டியானால் எப்போதும் இப்படி ஓடும்படி யாக அவர் தன் உடலை மாற்றிக் கொள் ளாதது ஏன் என எண்ணற்ற கேள்விகள். சாரதை பரமஹம் சரின் கட்டிலருகே நின்று கண்களாலேயே என்ன நடந்தது என வினவினார். பரமஹம்சர் விளக்கி னார்.
விவேகானந்தர் கீழே ஒரு மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிரு ந்தார். மரத்தின் மேலிலிருந்து ஒரு பாம்பு அவரை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. இந்தக் காட்சி யை மாடியில் தன் அறையில் கண்ணை மூடியவாறே படுத்திருந்த பரமஹம்சர் அகக் கண்ணால் பார் த்து விட்டார். தடதடவென ஓடோ டிச் சென்று அந்தப் பாம்பை விர ட்டி விட்டு வந்திருக்கிறார் அவர்.
இதைக் கேட்ட சாரதாதேவி ஆச்ச ரியத்தில் ஆழ்ந்தார். பரமஹம் சர் பகவானேதான்அல்லவா? அவரால் ஓரிடத்தில் இருந்தபடி யே உலகம் முழுவதும் பார்க்க முடிவதில் என்ன ஆச்சரியம்? காளி யின் சக்தி அல்லவா அவர் உடலிலில் இறங்கியிருந்தது? அதனால்தா னே அவர் சித்தி அடை ந்ததும், “காளி! நீ எங்கே போய்விட்டாய்?’ என்று சாரதை கதறினார்.
உண்மையில் பரமஹம்சர் இறைவனை நேரே காணவேண்டும், இறைவனுடன் இரண்டறக் கல க்க வேண்டும் என்று விரும்பி னாரே தவிர, சித்துகளை அடை வதில்அவருக்கு அதிக அக்கறை இருந்த தில்லை. சித்துகள் மூலப் பரம்பொருளை அடையும் மார்க் கத்தில் பக்தர்களின் கவனத்தை சிதறச் செய்துவிடக் கூடியவை என்று அவர் கருதினார். உயர் நிலைத் தவத்தால் சித்துகள் தா மே சித்தி யாகும் என்றும்; ஆனா ல் அதைப் பொருட் படுத்தாமல் தவத்தைத் தொடரவேண்டும் என் றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்மேல் நடக்கும் சித்து கைவரப் பெற்ற ஒருவர், “இப்படி உங்க ளால் செய்ய இயலுமா?’ என்று கேட்டத ற்கு பரமஹம்சர் சொன்ன பதில்:
“இந்தச் சித்தினால் என்ன பயன்? இ து நாலணா பெறும். ஏனென் றால் நீர் மேல் நடக்க முடியாதவர்கள் நால ணா கொடுத்து ஓடக் காரர் உதவி யுடன் ஓடத்தில் போகிறார்கள்.
அவ்வளவுதானே? இத்தகைய சித்து களால் இறைவனைக் காண இயலா தபோது இவை பற்றி ஆணவம் கொள்வதில் அர்த்தமெ ன்ன?’
விவேகானந்தரிடம் ஒருமுறை தாம் பெற்ற சித்துகள் அனைத்தை யும் அவருக்குத் தர விரும்புவதாகவும்; அவற்றைப் பெறுவதில் அவருக்கு ஆர்வமுண்டா என்றும் பரமஹம்சர் கேட்டார். அவற்றா ல் இறைவனை நேரில் காண உதவ இயலாது என்கிறபோது அவற்றை ப் பெறுவதில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என்று விவே கானந்தர் பதிலளித்தார். அந்த பதி லைக் கேட்டு பரமஹம்சர் மிகுந்த நிறைவடைந்தார்.
சித்துகளைப் பெற்றவர்கள் அந்த ஆற்றல் களை நல்ல விஷயத்திற் காக மட்டுமே பயன்படுத்த வேண் டும். அல்லாமல் சொந்த சுக போகங்களுக்காக அதர்மமான வழி யில் பயன்படுத்தினால் சித்துக ளால் விளைந்தஆற்றல்கள் அவர் களை விட்டுப் போவதுடன், அவை விட்டுப் போகிற நே ரத்தில் தம் மை சரிவரப் பய ன்படுத்தாத வர்களுக்குத் தீ மையையும் செய்து விட் டுப் போய்விடும்.
பரமஹம்சருடன் இரு துற விகள் தங்கியிருந்தார்கள். அவர்கள் தங்கள் உடலைப் பிறர் காணாமல் உலவும் ஆற்றல் கைவரப் பெற்றிருந்தார்கள். அந்த சித்தை அவர்கள் அடை ந்தவுடன் மிக அக்கிரமமான முறை யில் அதை அவர்கள் பயன் படுத்தத் தொடங்கினார் கள். பலரது அந்தப்புரங்களில் அவர்கள் பிறரறியாமல் உலவ லானார்கள்.
அதர்ம வழியில் அந்த ஆற்றலைப் பயன் படுத்தியதால் அவர்களு க்குப் பெருங்கெடுதல் நேர்ந்தது. பரமஹம்சரே அவர்களின் உதார ணத் தைச் சொல்லிலி தம் சீடர்களை எச்சரித்திருக்கிறார்.
அந்த இருவர் எவ்வகையில் தங்கள் ஆற்றலை அதர்ம நெறியில் பயன்படுத்தினார்கள்? அதனால் அவர்கள் பெற்ற தண்டனை என்ன? (தொடரும்.)