Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு

எம்.ஜி.ஆர். என்ற மூன்று எழுத்தால் பாரெங் கும் புகழ்பெற்ற புரட்சித் தலைவர் மக்கள் தில கம் பாரத ரத்னா டாக்டர். எம்.ஜி. இராமச்சந் திரன் (எம்.ஜி.ஆர்) என்ற மருதூர் கோபா லமேனன் இராமச்சந்திரன் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவ லப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின் தாயும் மகனும் தமிழகத்தில் கும்பகோணத்தில் குடியேறினார்கள். குடும்ப சூழ் நிலை காரணமாக சிறுவயதிலேயே அவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின் னர் படிப்படியாக உயர்ந்து திரைப்படங்களில் நடிக்கத் துவ ங்கினார்.

1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித் திருந்தும், 1947ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், எம்.ஜி.ஆர். தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமான வர்களில் ஒருவ ராக விளங்கினார். எம்.ஜி.ஆர். நடித்த திரைப் படங்கள் 135. இவற்றுள் அவர் கதா நாயகனா க நடித்த படங்களின் எண்ணிக்கை 115.

எம்.ஜி.ஆர். முதலில் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோயுற்று இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதி யை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட் டார். பின்னர் எம்.ஜி.ஆர். வி. என் .ஜான கியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவச மாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்க வில்லை.

எம்.ஜி.ஆர். ஆரம்ப நாட்களில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், நேதாஜி பக்தராகவும் இருந்தார். பின்னர் ராஜகுமாரி, மந்திரிகுமாரி படப்பிடி ப்பு நாட்களில் கலைஞர் கருணா நிதியுடன் கொண்ட நட்பால் திரா விட முன் னேற்றக் கழகத்தின் பால் ஈர்க்கப்பட்டார். பின்னர் திராவிட முன் னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக திகழ்ந்தார். எம். ஜி. ஆர்.  அக்கட்சியின் பொருளாளராக வும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாதுரையின் மறைவுக்குப் பின், முதலமைச்சராக பதவி ஏற்ற கலைஞர் மு. கருணாநிதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரண மாக எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறி னார். 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் நாள் அனைத்திந்திய அண்ணா திரா விட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவங்கினார். 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று தமிழக முதல்வ ராகப் பொறுப் பேற்றார். பின்னர் 1980ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று மீ ண்டும் இரண்டாம் முறையாக முதல்வ ரானார். 1984ல் இவர் சிறுநீரகக் கோளா று காரணமாக கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதற்கு சிகி ச்சை பெற அமெரிக்காவின் புருக்ளின் மரு த்துவமனையில் அனும திக்கப்பட்டார். மருத்துவமனை யில் இருக்கும் போதே தமிழக த்தில் நடை பெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற் றார். 1987ஆம் ஆண்டு வரை 10 ஆண் டுகள் தொடர்ச்சியாக முதல மைச்சர் பதவியை வகித்து பத வியிலிருக்கும் போதே 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் நா ள் இயற்கை எய்தினார். அவரது மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இன்றளவும் எம்.ஜி.ஆர். அவர்கள் தாம் நடித்த திரைப்படங் களுக்காக மட்டுமின்றி, தம் ஆட்சிக்காலத்தில் செயல்படுத்திய பல மக்கள் நல் வாழ்வு திட்டங்களுக்காகவும் மிக வும் போற்றப்படு கிறார். அவற்றுள் மிக முக்கியமானது பள்ளி மாண வர்களுக்காக அவர் கொண்டுவந்த சத்துணவுத் திட்டம் ஆகும். மேலும் ஈழ மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமது இறுதிநாள் வரை பெரிதும் துணைநின்றார் எம்.ஜி. ஆர். அவர்கள்.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

1960 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டும் இந்தி யில் அதன் வாசகங்கள் இருந்ததால் ஏற்க மறுத்துவிட்டார்.

1972 ஆம் ஆண்டு ரிக்ஷாகாரன் படத் துக்காக சிறந்த நடிகருக்கான தேசி ய விருது

1987 ஆம் ஆண்டு மரணத்துக்கு பிந் தைய பாரத ரத்னா விருது
சென்னை பல்கலை மற்றும் அரிசோ னா உலகப் பல்கலையின் டாக்டர் பட்டம்

எம்.ஜி.ஆர். நடித்துள்ள படங்கள்

முப்பதுகளில்

1. சதி லீலாவதி – 1936 – மனோரமா பிலிம்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
2. இரு சகோதரர்கள் – 1936 – பரமேஸ்வரி சவுண்ட் பிக்சர்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
3. தட்ச யக்ஞம் – 1938 – மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
4. வீர ஜகதீஷ் – 1938 – வி.எஸ். டாக்கீஸ் – டி.பி.கைலாசம், ஆர் பிரகாஷ்
5. மாய மச்சேந்திரர் – 1939 – மெட்ரோபாலிடன் பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
6. பிரஹலாதா – 1939 – சேலம் சங்கர் பிலிம்ஸ் – பி.என். ராவ்

நாற்பதுகளில்
7. அசோக்குமார் – 1941 – முருகன் டாக் கீஸ் பிலிம் கம்பெனி – ராஜா சந்திரசேகர்
8. வேதவதி அல்லது சீதா ஜனனம் – 1941 – சியாமளா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத்
9. தமிழ் அறியும் பெருமாள் – 1942 – உமா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத்
10. தாசி பெண் அல்லது ஜோதி மலர் – 1943 – புவனேஸ்வரி பிக்சர்ஸ் – எல்லிஸ் ஆர். டங்கன்
11. அரிச்சந்திரா – 1943 – ஸ்ரீ ராஜ ராஜே ஸ்வரி பிலிம் கம்பெனி – நாகபூஷணம்
12. மீரா – 1945 – சந்திரபிரபா சினிடோன் – எல்லிஸ் ஆர். டங்கன்
13. சாலிவாகனன் – 1945 – பாஸ்கர் பிக்சர்ஸ் – பி.என். ராவ்
14. ஸ்ரீ முருகன் – 1946 – ஜுபிடர் – எம். சோமசுந்தரம், வி.எஸ். நாராயண்
15. பைத்தியக்காரன் – 1947 – என்.எஸ்.கே. பிலிம்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
16. ராஜகுமாரி – 1947 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி – 160 நாட்கள்
17. அபிமன்யூ – 1948 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி
18. மோகினி – 1948 – ஜுபிடர் – லங்கா சத்யம் – 133 நாட்கள்
19. ராஜ முக்தி – 1948 – நரேந்திரா பிக்சர்ஸ் – ராஜா சந்திரசேகர்
20. ரத்னகுமார் – 1949 – முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி – கிருஷ்ணன், பஞ்சு
ஐம்பதுகளில்
21. மந்திரி குமாரி – 1950 – மாடர்ன் தியேட்டர்ஸ் – டி.ஆர். சுந்தரம், எல்லிஸ் ஆர். டங்கன் – 146 நாட்கள்
22. மருதநாட்டு இளவரசி – 1950 – ஜி.கோவிந்தன் அண்ட் கோ – 133 நாட்கள்
23. மர்ம யோகி – 1951 – ஜுபிடர் – கே. ராம்நாத் – 151 நாட்கள்
24. ஏக்தா ராஜா – 1951 – இந்தி (டப் பிங்) 
25. சர்வாதிகாரி – 1951 – மாடர்ன் தியேட்டர்ஸ் – 141 நாட்கள்
26. சர்வாதிகாரி – 1951 – தெலுங்கு (டப் பிங்) 
27. அந்தமான் கைதி – 1952 – ராதாகிருஷ்ணா பிலிம்ஸ் – வி. கிருஷ்ணன் – 133 நாட்கள்
28. என் தங்கை – 1952 – அசோகா பிக் சர்ஸ் – சி.எ. நாராயணமூர்த்தி – எம்.கே.ஆர். நம்பியார் – 181 நாட்கள்
29. குமாரி – 1952 – ஆர்.பத்மநாபன், ராஜேஸ்வரி – ஆர். பத்மநாபன் – 112 நாட்கள்
30. ஜெனோவா – 1953 – சந்திரா பிக்சர்ஸ் – எப். நாகூர் – 133 நாட்கள்
31. ஜெனோவா – 1953 – மலையாளம் (டப்பிங்)
32. நாம் – 1953 – ஜுபிடர், மேகலா – ஏ. காசிலிங்கம் – 84 நாட்கள்
33. பணக்காரி – 1953 – உமா பிக்சர்ஸ் – கே.எஸ். கோபாலகிருஷ்ணன் – 70 நாட்கள்
34. கூண்டுக்கிளி – 1954 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 77 நாட்கள்
35. மலைக்கள்ளன் – 1954 – பக்ஷிராஜா – எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு – 150 நாட்கள்
36. குலேபகாவலி – 1955 – ஆர்.ஆர். பிக்ச ர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 166 நாட்கள்
37. அலிபாபாவும் 40 திருடர்களும் – 1956 – மாடர்ன் தியேட்டர்ஸ் – டி.ஆர். சுந்தரம் – 168 நாட்கள்
38. மதுரை வீரன் – 1956 – கிருஷ்ணா பிக்சர்ஸ் – யோகானந்த் – 169 நாட்கள்
39. தாய்க்குப் பின் தாரம் – 1956 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 147 நாட்கள்
40. சக்கரவர்த்தி திருமகள் – 1957 – உமா பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 140 நாட்கள்
41. மகாதேவி – 1957 – ஸ்ரீ கணேஷ் மூவி டோன் – சுந்தர் ராவ் நட்கர்னி – 117 நாட் கள்
42. புதுமைப்பித்தன் – 1957 – சிவகாமி பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 112 நாட்கள்
43. ராஜராஜன் – 1957 – நீலா புரொ டக்சன்ஸ் – டி.வி. சுந்தரம் – 77 நாட்கள்
44. நாடோடி மன்னன் – 1958 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – எம்.ஜி.ஆர். – 161 நாட்கள்
45. தாய் மகளுக்கு கட்டிய தாலி – 1959 – கல்பனா கலா மந்திர் – ஆர். ஆர். சந்திரன் – 86 நாட்கள்

அறுபதுகளில்
46. பாக்தாத் திருடன் – 1960 – சதர்ன் மூவிஸ் – டி.பி. சுந்தரம் – 112 நாட்கள்
47. மன்னாதி மன்னன் – 1960 – நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் – எம். நடேசன் – 93 நாட்கள்
48. ராஜா தேசிங்கு – 1960 – கிருஷ்ணா பிக்சர்ஸ் – டி.ஆர். ரகுநாத் – 77 நாட்கள்
49. அரசிளங்குமரி – 1961 – ஜுபிடர் – ஏ.எஸ்.ஏ. சாமி – 92 நாட்கள்
50. நல்லவன் வாழ்வான் – 1961 – அரசு பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 84 நாட்கள்
51. சபாஷ் மாப்பிள்ளை – 1961 – ராகவன் புரொடக்சன்ஸ் – எஸ். ராகவன் – 70 நாட்கள்
52. தாய் சொல்லைத் தட்டாதே – 1951 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 133 நாட்கள்
53. திருடாதே – 1961 – ஏ.எல்.எஸ். – பி. நீலகண்டன் – 161 நாட்கள்
54. குடும்பத் தலைவன் – 1962 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 108 நாட்கள்
55. மாடப்புறா – 1962 – பி.வி.என். புரொ டக்சன்ஸ் – எஸ்.ஏ. சுப்புராமன் – 77 நாட்கள்
56. பாசம் – 1962 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா – 84 நாட்கள்
57. ராணி சம்யுக்தா – 1962 – சரஸ்வதி பிக்சர்ஸ் – யோகானந்த் – 70 நாட்கள்
58. தாயைக் காத்த தனையன் – 1962 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 140 நாட்கள்
59. விக்கிரமாதித்தன் – 1962 – பாரத் புரொடக்சன்ஸ் – டி.ஆர். ரகுநாத், என்.எஸ். ராம்தாஸ் – 79 நாட்கள்
60. ஆனந்த ஜோதி – 1963 – ஹரிஹரன் பிலிம்ஸ் (பி.எஸ்.வி.) – வி.என். ரெட்டி
61. தர்மம் தலைக்காக்கும் – 1963 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம் – 117 நாட்கள்
62. கலை அரசி – 1963 – சரோடி பிரத ர்ஸ் – ஏ. காசிலிங்கம்
63. காஞ்சித் தலைவன் – 1963 – மே கலா பிக்சர்ஸ் – ஏ. காசிலிங்கம்
64. கொடுத்து வைத்தவள் – 1963 – ஈ.வி.ஆர். பிக்சர்ஸ் – பி. நீலகண்டன் – 91 நாட்கள்
65. நீதிக்குப் பின் பாசம் – 1963 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
66. பணத்தோட்டம் – 1963 – 84 நாட் கள்
67. பரிசு – 1963 – கௌரி பிக்சர்ஸ் – யோகானந்த்
68. பெரிய இடத்துப் பெண் – 1963 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
69. தெய்வத் தாய் – 1964 – சத்யா மூவிஸ் – பி. மாதவன்
70. என் கடமை – 1964 – நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் – எம். நடேசன்
71. படகோட்டி – 1964 – சரவணா பிலிம்ஸ், டி. பிரகாஷ் ராவ்
72. பணக்கார குடும்பம் – 1964 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
73. தாயின் மடியில் – 1964 – அன்னை பிலிம்ஸ் – ஆடூர்தி சுப்பா ராவ்
74. தொழிலாளி – 1964 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
75. வேட்டைக்காரன் – 1964 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
76. ஆசை முகம் – 1964 – மோகன் புரொடக்சன்ஸ் – பி.புல்லையா
77. ஆயிரத்தில் ஒருவன் – 1965 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
78. எங்க வீட்டுப் பிள்ளை – 1965 – விஜயா கம்பைன்ஸ் புரொடக்சன்ஸ் – சாணக்யா – 236 நாட்கள்
79. கலங்கரை விளக்கம் – 1965 – சர வணா பிலிம்ஸ் – கே. சங்கர்
80. கன்னித் தாய் – 1965 – தேவர் பிலி ம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
81. பணம் படைத்தவன் – 1965 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
82. தாழம்பூ – 1965 – ஸ்ரீ பால முரு கன் பிலிம்ஸ் – எஸ். ராமதாஸ்
83. அன்பே வா – 1966 – ஏ.வி.எம். – ஏ.சி. திரிலோகசந்தர்
84. நான் ஆணையிட்டால் – 1966 – சத்யா மூவிஸ் – சாணக்யா
85. முகராசி – 1966 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
86. நாடோடி – 1966 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
87. சந்திரோதயம் – 1966 – சரவணா பிலி ம்ஸ் – கே. சங்கர்
88. பறக்கும் பாவை – 1966 – ஆர்.ஆர். பிக்சர்ஸ் – டி.ஆர். ராமண்ணா
89. பெற்றால் தான் பிள்ளையா? – 1966 – ஸ்ரீ முத்துகுமரன் பிக்சர்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
90. தாலி பாக்கியம் – 1966 – வரலக்ஷ்மி பிக்சர்ஸ் – கே.பி. நாகபூஷணம்
91. தனிப்பிறவி – 1966 – தேவர் பிலிம்ஸ் – என்.எஸ். வர்மா
92. அரச கட்டளை – 1967 – சத்யராஜா பிக்சர்ஸ் – எம்.ஜி. சக்ரபாணி
93. காவல்காரன் – 1967 – சத்யா மூவிஸ் – பி. நீலகண்டன்
94. தாய்க்கு தலைவணங்கு – 1967 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
95. விவசாயி – 1967 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
96. ரகசிய போலீஸ் 115 – 1967 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
97. தேர் திருவிழா – 1968 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
98. குடியிருந்த கோயில் – 1968 – சரவணா ஸ்கிரீன்ஸ் – கே. சங்கர்
99. கண்ணன் என் காதலன் – 1968 – சத்யா மூவிஸ் – பி. நீலகண்டன்
100. ஒளி விளக்கு – 1968 – ஜெமினி – சாணக்யா
101. கணவன் – 1968 – வள்ளி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
102. புதிய பூமி – 1968 – ஜே.ஆர். மூவிஸ் – சாணக்யா
103. காதல் வாகனம் – 1968 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
104. அடிமைப் பெண் – 1969 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – கே. சங்கர்
105. நம் நாடு – 1969 – விஜயா இண்டர்நேசனல் – ஜம்பு

எழுபதுகளில்
106. மாட்டுக்காரன் வேலன் – 1970 – ஜெயந்தி பிலிம்ஸ் – பி. நீலகண்டன் – 156 நாட்கள்
107. என் அண்ணன் – 1970 – வீனஸ் பிக்சர்ஸ் – பி. நீலகண்டன்
108. தலைவன் – 1970 – தாமஸ் பிக்சர்ஸ் – பி.ஏ. தாமஸ்
109. தேடி வந்த மாப்பிள்ளை – 1970 – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர். பந்துலு
110. எங்கள் தங்கம் – 1970 – மேகலா பிக்சர்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
111. குமரிக் கோட்டம் – 1971 – கே.சி. பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
112. ரிக்ஷாக்காரன் – 1971 – சத்யா மூவிஸ் – எம். கிருஷ்ணன் நாயர்
113. நீரும் நெருப்பும் – 1971 – நியூ மணி ஜே. சினி புரொடக்சன்ஸ் – பி. நீலகண்டன்
114. ஒரு தாய் மக்கள் – 1971 – நாஞ்சில் புரொடக்சன்ஸ் – பி. நீலகண்டன்
115. சங்கே முழங்கு – 1972 – வள்ளி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
116. நல்ல நேரம் – 1972 – தேவர் பிலிம்ஸ் – எம்.ஏ. திருமுகம்
117. ராமன் தேடிய சீதை – 1972 – ஜெயந்தி பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
118. அன்னமிட்ட கை – 1972 – ராமசந்திரா புரொடக்சன்ஸ் – எம். கிருஷ்ணன்
119. நான் ஏன் பிறந்தேன் – 1972 – காமாட்சி ஏஜன்சிஸ் – எம். கிருஷ்ணன்
120. இதய வீணை – 1972 – உதயம் புரொடக்சன்ஸ் – கிருஷ்ணன், பஞ்சு
121. உலகம் சுற்றும் வாலிபன் – 1973 – எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் – எம்.ஜி.ஆர். – 203 நாட்கள்
122. பட்டிக்காட்டு பொன்னையா – 1973 – வசந்த் பிக்சர்ஸ் – பி.எஸ். ரங்கா
123. நேற்று இன்று நாளை – 1974 – அமல்ராஜ் பிலிம்ஸ் – பி. நீலகண்டன்
124. உரிமைக் குரல் – 1974 – சித்ரயுகா – சி.வி. ஸ்ரீதர்
125. சிரித்து வாழவேண்டும் – 1974 – உதயம் புரொடக்சன்ஸ் – எஸ்.எஸ். பாலன்
126. நினைத்ததை முடிப்பவன் – 1974 – ஓரியண்டல் பிக்சர்ஸ் – பி. நீல கண்டன்
127. நாளை நமதே – 1975 – கஜேந் திரா பிலிம்ஸ் – கே.எஸ். சேது மாதவன்
128. பல்லாண்டு வாழ்க – 1975 – உத யம் புரொடக்சன்ஸ் – கே. சங்கர்
129. இதயக்கனி – 1975 – சத்யா மூவி ஸ் – ஏ. ஜெகந்நாதன்
130. நீதிக்கு தலை வணங்கு – 1976 – ஸ்ரீ உமையாம்பிகை புரொட க்சன்ஸ் – பி. நீலகண்டன்
131. உழைக்கும் கரங்கள் – 1976 – கே.சி. பிலிம்ஸ் – கே. சங்கர்
132. ஊருக்கு உழைப்பவன் – 1976 – வீனஸ் பிக்சர்ஸ் – எம். கிருஷ்ணன்
133. இன்று போல என்றும் வாழ்க – 1977 – சுப்பு புரொடக்சன்ஸ் – கே. சங்கர்
134. நவரத்னம் – 1977 – சி.என்.வி. மூவிஸ் – ஏ.பி. நாகராஜன்
135. மீனவ நண்பன் – 1977 – முத்து எண்டர்பிரைசஸ் – சி.வி. ஸ்ரீதர்
136. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் – 1978 – சோலீஸ்வர் கம் பைன்ஸ் – பி. நீலகண்டன்

நன்றி: பல இணையதளங்கள். 

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: