Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை: பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்துல் கலாம் எழுதிய கடிதத்தில் ….

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, சில ஆலோ சனைகளை தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அப்துல் கலாம் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடித த்தில் அவர் குறிப்பி ட்டு இருப்பதாவது:-

கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத் துக்கு அதிக தண்ணீர், இர ண்டு மாநிலங்களு க்கும் பொதுவான அ ணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொ ண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளவே ண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலா க, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணை யில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழு ப்பலாம்.

அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், தமிழக மக்க ளுக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு கூடுதல் மின்சார மும் கிடைக்கும். அணையின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

நாட்டில் உள்ள அனைத்து அணைகள், புதிதாக அமையும் அணை கள் இவற்றின் கட்டுப்பாடுகளையும், பராமரிப்பையும் ராணுவத் தின் வசம் ஒப்படைக்க வேண்டும். அமெரிக்கா உள்பட பல நாடு களில் அணை கட்டுவது மு தல், அதை கட்டுப்படுத்தி பரா மரிப்பது வரை அனைத்து பணிகளையும் ராணுவமே மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், நதிகள் இணை ப்பு போன்ற நடவடிக்கைக ளின் போது, எந்த பிரச்சினை யும் ஏற்படுவதில்லை.

முல்லைப் பெரியாறு பிரச்சினையால் இரு மாநில உறவும் பாதிக் கப்பட்டு விடக் கூடாது. இரு மாநில மக்களும் அமைதி காத்து, தே சிய ஒருமைப்பாட்டை நிலை நாட்ட வேண்டும். இவ்வாறு கடிதத் தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

thanks to babu loganathan from facebook

One Comment

  • ராணுவத்திடம் ஒப்படைக்க‍வேண்டியது அணைகளை மட்டுமல்ல‍ நமது நாட்டையும்தான்!

    ஏனென்றால், மக்க‍ளாட்சி என்ற பெயரில் “”சில அரசியல்வாதிகள்””” செய்யும் கூத்துக்களால் உலக அரங்கில் நமது இந்தியா தலைகுனிந்து நின்றதும், தற்போது நின்றுகொண்டிருப்ப‍து அப்பட்டமாக தெரிந்த உண்மை!

    ராணுவம் தலைமையிலான் சர்வாதிகாரம் நமது இந்தியாவில் தற்போதைய காலக்கட்ட‍த்திற்கு மிக மிக அவசியமானது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: