Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆசிரியர் மாணவர்களிடம் கற்கவேண்டிய உளவியல் கூறுகள்

1. ஆசிரியரின் கண்கள் மாணவர்களைத் தம் கட்டுப்பாட்டிலேயே வைத் திருக்க வேண்டும்.

2. சில ஆசிரியர்கள் ஆண்கள்பக்க மோ, பெண்கள் பக்கமோ, நன்றாகப் படிக்கும் மாணவர்களின் பக்கமோ திரும்பி பிற மாணவர்களை நோக்கா து பாடம் நடத்துவர். இச்சூழலில் மா ணவர்கள் உள்ளத்தால் வகுப்பை வி ட்டு வெளியே சென்று விடுகின்ற னர்.உடல் மட்டுமே அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

3. ஆசிரியரின குரல் ஒலி அளவு எல் லா மாணவர்களுக்கும் கேட்குமாறு ஏற்ற இறக்கங்களு டன் இருத்தல் வேண்டும்.

4. ஆசிரியர் தாம் சொல்லவந்த கருத்துக்களை முழுவதும் வெளிப்படுத்த தேவைக்கேற்ப உட ல் அசைவு மொழிகளைக் கையாளவேண்டும்.

5. பாடத்தோடு தொடர்புடைய செய்திகளையும் இடையிடையே சொல் ல வேண்டும்.

6. பாடத்தை வாழ்க்கையோடு தொடர்புப டுத்திச் உரைக்க வேண்டும்.

7. பெரிய கருத்துக்களையும் மிக எளிமை யாகப் புரிந்து கொள்ளச் செய் வன நகைச் சுவைகளும், சின்னக் கதைகளும் என்ப தை ஆசிரியர் மனதில் கொள்ள வேண்டு ம்.

8. பாடத்திற்கு ஏற்ப கரும்பலகை, பவர்பா யின்ட், ஒலி, காணொளி, கணி னியின் து ணைகொண்டு விளக்கமுறைகளைக் கை யாள வேண்டும்.

9. மாணவர்களிடையே வினாக்களை எழுப்ப வேண்டும். அவர்கள் தவ றாகச் சொன்னாலும் அவர்களின் குறைகளை அவர்களுக்குப் புரிய வை த்து மீண்டும் சொல்ல ஊக்குவிக்கவேண்டும்.

10. “பாராட்டு“ ஆசிரியர் கையிலிருக்கும் மிகப் பெரிய ஆயுதம் என்பதை ஆசிரியர் நினை வில் கொள்ளவேண்டும்.

11. ஆசிரியர்கள் திட்டுவதாலோ, தண்டனை தருவதாலோ மாணவர்களைத் திருத்தி விட முடியாது என்பதை உணர்ந்து, அன்பாகப் பேசி அவர்களுக்கு அவர்களின் தவறைப் புரிய வைக்க வேண்டும்.

12. மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைவிட அப்பாடப் பொருள் குறி த்த ஆர்வமும், போதிய அறிவும், படைப்பாக்கத்திறனும் கொண்டவர்க ளாக உருவாக வேண்டும் என்பதை ஆசிரியர் புரிந்துகொள்ள வேண்டும்.

13. மாணவர்கள் தம் துறை சார்ந்து புதியன படைக்க ஆசிரியர்கள் முன் மாதிரியாக இருத்தல் வேண்டும்.

14. அந்தக் காலத்தில மாணவர்கள் வகுப்பு வேளையில் அலைபேசியை வைத்து குறுந்தகவல் அனுப்பிக் கொ ண்டிருந்தார்கள், இன்று நவீன தொழி ல் நுட்பத்துடனான அலைபேசிகளில் முகநூலில் (பேஸ்புக் சாட்) அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கையிலிருந்து நாம் அந்த அலைபேசியைப் பறிப்பது எளிது. ஆனால் அதைவிட நம்மை ஏமாற்றி அவர்கள் வகுப்பு வேளையில் அத னைப் பயன்படுத்துவது அதை விட எளிது. அதனால் காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்களும் அவர்களின் மனநிலையையும் அறிவுத் திறனை யும் புரிந்து கொண்டு அவர்களே அத னைப் புறந்தள்ளும் விதமாக புதிய தொழில் நுட்பங்களுடன் பாடம் நடத்த வேண்டும். அச்சூழலில் அவ ர்களே அந்த அலை பேசிகளைத் தூக்கி எறிந்துவிடுவார்கள்.

15. இவை எல்லாவற்றுக்கும் மே லே மாணவர்களுக்குத் தன்னம் பிக்கை அளி க்க வேண்டிய பெரும் பணி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

மாணவர்கள் வெள்ளைத் தாள்!  அதில் ஆசிரியர் என்ன எழுதினாலும் அப்படியே பதிகிறது!!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: