புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன் மகள் சரச்வதிக்குத் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். திருமணப் பத்திரிக்கை
யைத் தன் உறவினர்கள், நண்பர்களுக் கெல்லாம் அனுப்பினார்.
திருமணத்திற்கு அவசியம் குடும்பத் துடன் வந்து கலந்து கொள்ள வேண் டும் என அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் கலைவாணர் என்.எஸ் கிரு ஷ்ணனுக்கு மட்டும் பத்திரிகை அனுப் பிக்கூடவே ஒரு வித்தியாசமான கடி தத்தையும் இணைத்தி ருந்தனர்.
அன்புள்ள கலைவாணர் அவர்களுக்கு இத்துடன் எனது மூத்த மகள் சரஸ்வதியின் திருமணப் பத்திரிக் கையை அனுப்பியுள்ளேன். தங்களுக்கு ஒய்வு இருக்கிறது என்று திருமணத்திற்கு வந்துவிடாதீர்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
திருமணம் ஒரு சிறிய கிராமத்தில் நடை பெறுகிறது. இங்கு நீங்கள் வந்தால் சுற்று வட்டார மக்களும், பாண்டிச்சேரி மக்களும் கூடி விடு வார்கள். அத்துணைப் பேருக்கும் வேண்டிய வசதிகளை என்னால் செ ய்து கொ டுக்க இயலாது.
கூட்டத்தை சமாளிப்பது திருமண நேரத்தில் சிரமமாகிவிடும். என வே தயவு செய்து தங்களது வாழ்த் தை மட்டும் அனுப்பி வைத்தால் நான் மிகவும் சந்தோஷப்படு வேன்.
இந்த துணிச்சல் பாரதிதாசனைத் தவிர வேறு யாருக்கு வரும்?