விவசாயியை கடிக்க வந்த பாம்பை அவர் வளர்த்து வந்த நாய்க் குட்டி கடித்து குதறியது. இதில் பாம்பும் நாய்க்குட்டியும் இறந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி(40), விவசாயி. இவரது மனைவி ஜெய ந்தி. ஒன்றிய திமுக கவுன்சிலர். மகா லட்சுமி என்ற கைக் குழந்தை உள்ள து.
பழனி தனது வீட்டில் செல்லமாக 2 நாய்க்குட்டிகளை வளர்த்து வந் தார். இதில் ஒரு நாய்க்குட்டிக்கு தனது மக ள் பெயரான ‘மகா லட்சுமி’ என பெயர் வைத்துள்ளதோடு, பாசத் துடன் வளர்த்து வந்தார்.
தினமும் 2 நாய்க்குட்டிகளுக்கும் உணவு ஊட்டிவிட்டு, அவைக ளுடன் அமர்ந்து பழனி சாப்பிடுவாராம். நேற்று முன்தினம் இரவு பழனி தூங்கும்போது நாய்க்குட்டிகளும் அருகே படுத்திருந்தன.
நள்ளிரவு 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஒன்று, திடீரென வீட்டுக்குள் நுழைந்துள்ளது. இதைக்கண்ட 2 நாய்க்குட்டிகளும் குரைத்துள்ளன.
அந்த பாம்பு பழனியை கடிக்க முயன்றதாக தெரிகிறது. தனது எஜ மானருக்கு ஏற்பட உள்ள ஆபத்தை அறிந்த 2 நாய்க்குட்டிகளும் பாம்பிடம் மோதலில் ஈடுபட்டது.
அப்போது மகாலட்சுமி நாய்க்குட்டி பாம்பின் தலையை கடித்து குதறியது. இதில் ஆத்திரமடைந்த அந்த பாம்பு, மகாலட்சுமியை கடித்தது. இதில் விஷம் ஏறிய நிலையிலும், அந்த நாய்க்குட்டி போ ராடி, பாம்பின் தலையை கவ்வியது. இதில் நாய்க்குட்டி மற்றும் பாம்பு அதே இடத்தில் இறந்தன.
மற்றொரு நாய்க்குட்டி தொடர்ந்து குரைத்ததால் தூக்கத்தில் இரு ந்து எழுந்த பழனி, நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந் தார். தன்னை காப்பாற்றுவதற்காக தனது உயிரையே தியாகம் செய்த மகாலட்சுமி நாய்க்குட்டியை நினைத்து கதறி அழுதார். நாய் க்குட்டிக்கு பழனி மற்றும் அவரது குடும்பத்தினர் மாலை அணிவி த்து பூஜை செய்து அஞ்சலி செலுத்தினர்.