Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ்: படிப்பைவிட இது முக்கியம்!

‘வெளிநாடுகளுக்குப் போய் என்ன படிக்க வேண்டும் என நம்மூர் இளைஞர்களுக்குத் தெரிகிற அளவுக்கு, எந்தெந்த இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் இழப்புகளிலிருந்து தப்பிக்க லாம் என்பது தெரிவதில்லை. சில ஆயி ரம் ரூபாயைக் கவலைப்படாமல் கட்டி னால், பல லட்சரூபாய் செலவை எளிதா க தவிர்க்கமுடியும்” என்கிறார் நிதி ஆலோசகரான வி.ஹரிஹரன். எப்படி என்பதையும் அவரே விளக்கிச் சொன்னா ர்.

”இந்தியாவிலிருந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளுக்கு ஆண்டுக்கு சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் படிக்க ச் செல்கிறார்கள். இந்த மாணவர்களில் வெறும் 10 சதவிகிதத்தின ரே ஸ்டூடண்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கிறார்கள் என்பது அதிர்ச்சிகரமான உண்மை. மாணவர் மற்றும் பெற்றோர் இடை யே போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே இதற்கு காரணம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில்தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் வெளிநாடுகளுக்குப்படிக்கச்செல் கிறார்கள். அப்போதே இந்த இன்ஷூரன்ஸை எடுத்துக் கொண்டால் நல்லது” என்றவர், வெளி நாடு செல்லும் மாணவர்கள் என்னென்ன இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

டிராவல் இன்ஷூரன்ஸ்!

”வெளிநாட்டுப் பயணத்தின் போது, இந்தியாவிலிருந்து கிளம்பி அங்கு சென்று சேரும் வரை இந்த பாலிசி பயனளிக்கும். விமானப் பயணத் தின்போது ஏற்படும் விபத்து மற் றும் உடல்நிலை பாதிப்பு, லக்கேஜ் காணாமல் போவது, பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ் போன்றவைக ள் காணாமல் போவது, தீவிரவாதிகளால் விமானம் கடத்திச் செல் லப்படுவது, விமானப் பயணம் காலதாமதமாவது போன்ற காரணங் களுக்கு இந்த பாலிசியில் இழப்பீடு கிடைக்கும்.

60 முதல் 90 நாட்களுக்கான படிப்பு என்றால், போக – வர சேர்த்து டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வருடக் கணக்கில் சென்று படிக்கப் போகிறார்கள் எனில், போகும்போது தனியாக டிராவல் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொண்டு, வரும் போது தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


மெடிக்ளைம் இன்ஷூரன்ஸ்!

பொதுவாக ஒரு இடத்திலிருந் து இன்னொரு இடத்திற்குச் செல்லும்போது தட்ப வெப்பநி லை காரண மாக உடல்நிலை பாதிப்படையும். இந்தியாவில் ஆகும் மருத்துவச் செலவை விட வெளிநாடுகளில் பல மட ங்கு கூடுதலாகச் செலவாகும். அந்த வகையில் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். ஆ க்ஸ்ஃபோர்டு போன்ற பல்க லைக்கழகங்கள் அனைத்துவி தமான அம்சங்களும் அடங்கி ய பாலிசியை காப்பீடு நிறுவன ங்களுடன் இணைந்து வழங் கி, அதற்கான செலவை கட்டணத்து டன் சேர்த்து விடுகின்றன. சில பல்கலைக் கழகங்களில் இந்த வசதி கிடையாது. அப்படியே இருந் தாலும் பிரீமியம் அதிகமாக இருக்கும். இதை அலசி ஆராய்ந்து பல் கலைக் கழக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதா? அல்லது தனியாக மெடிக்ளைம் பாலிசி எடுப்பது நல்லதா என்பதை முடிவு செய் துகொ ள்ள வேண்டும்.

கவனிக்க வேண்டியவை..!

எவ்வளவு காலம் வெளிநாட் டுக்குப் படிக்க போகிறீர்களோ, அதற்கு தகுந்த மாதிரி பாலிசியை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே ஏதாவது ஒரு நோய் இருந்தால் அதை பாலிசி எடுக்கும்போது மறக்காமல் குறிப் பிடுங்கள்.

மருத்துவமனை மற்றும் மருத்துவமனை அல்லாத சிகி ச்சைகள் என இரண்டுவிதமா க கவரேஜ் இருக்கிறது. தே வைக்கேற்ப இதை எடுத்துக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், பெற் றோர்கள் அங்கு செல்வதற்கு ம், உடலை இந்தியா கொண்டு வருவதற்கும் ஆகும் செலவுகளைச் சேர்த்து கவரேஜ் கிடைக்கும் படியாக பாலிசி எடுக்கலாம்.

கலவரம், உடல்நிலை பாதிப்பு போன்ற காரணங்களால் படிப்பு தடையானால் ஏற்படும் இழப்புக்கும் சேர்த்து கவரேஜ் இருக்க வே ண்டும்.

கிளைம் எப்படி வாங்குவது?

இங்கிருக்கும் இன்ஷூரன்ஸ் நிறுவனங் கள் வெளிநாடுகளில் இருக்கும் இன்ஷூர ன்ஸ் நிறுவனங்களுடன் சேர்ந்து பாலிசி யை விற்கின்றன. எனவே, இந்தியாவில் பாலிசி எடுத்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றால், இங்குள்ள நிறுவனம் நீங்கள் எடுத்திருக்கும் பாலிசியின் வெளிநாட்டு நிறுவனத்தின் கட்டணமில்லா டெலிபோ ன் நம்பரை கொடுத்துவிடும். அந்த நம்ப ரை தொடர்பு கொண்டால் கிளைம் விவ ரங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரீமியம் மற்றும் கவரேஜ்!

எல்லாம் சரி, இதற்கு எவ்வள வு பிரீமியம் என்றுதானே கேட் கிறீர்கள். 23 வயதான ஒரு மாணவர், ஒரு லட்சம் அமெ ரிக்க டாலர் கவரேஜ் கிடைக் கும் வகையில் இரண்டு வருட பாலிசிக்கு ஆண்டுக்கு 31,000 ரூபாய் பிரீமியம் கட்ட வேண் டும். டிராவல், மெடிக்ளைம் மற்றும் தனிநபர் விபத்து பாலி சிகளை உள்ளடக்கியது இந்த பாலிசி.

மருத்துவச் செலவு – 50,000 டாலர், அசம்பாவிதம்-1 லட்சம் டாலர், பொதுவான சிகிச்சை – 250 டாலர், பாஸ்போர்ட் கா ணாமல் போனால்- 200 டால ர், லக்கேஜ் காணாமல் போனா ல் – 1,000 டாலர், தனிநபர் விபத்து – 10,000 டாலர், படிப்பு இடையில் தடைப்பட்டால் – 7,500 டாலர், தற்செயல் பாதிப்பு – 1 லட்சம் டாலர் போன்ற அம்சங்கள் கவராகும்.

மேலே குறிப்பிட்ட ஏதாவது ஒன்று நடந்து கிளைம் கிடைத்தால் அதுபோக மீதி இருக்கும் தொ கையைத்தான் மீண்டும் கி ளைம் செய்ய முடியும்” என்று முடித்தார்.

இனியாவது வெளிநாட்டுக்கு ப் படிக்கப் போகும் மாணவர் கள் இந்த பாலிசியையும் எடு த்துக்கொண்டு பறந்தால் எந் தச் சூழ்நிலையிலும் பதற வே ண்டியதிருக்காது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: