Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’!

சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு நிலைமையின் இறுக்கத்தை தளர்த்தினார்.

மாதவன் நடிக்க, சமீரா ரெட்டி நாயகியாக நடிக்க, லிங்குசாமி இய க்க உருவாகியுள்ள படம் வேட்டை. இப்பட த்தில் கேரளாவைச் சேர் ந்த ஆர்யா, அமலா பால் ஆகியோரும் ஜோடி போட்டு நடித்து ள்ளனர். இந்தப்படத்தின் ஆடியோ வெளியீடு சென் னை அண்ணா நூற்றாண்டு அரங்கி ல் நடந்தது. நிகழ்ச்சியை நடிகர் ஜெகன் – ரம் யா (இருவரும் விஜய் டிவி மூலம் பிரபல மானவர்கள். ஜெகன் பல படங்களில் ஹீரோ வுக்கு தோழனாக நடித்துள்ளார்.) இருவரும் தொகுத் து வழங்கினார்.

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண் டிருந்த ஜெகன், அமலா பாலைப் பார்த்து, கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு அழகான பெண் களை கொடுக்கிறீ ர்கள். ஆனா ல், குடிக்க தண்ணீ ர் கேட்டால் மட்டும் கொடுக்க மாட்டேன் கிறீர்களே? என்று டைமி ங்காக வாரி னார்.

இதைக் கேட்டு சற்றே திடுக்கிட் டார் அமலா பால். பின்னர் சுதா ரித்துக் கொண்டு, இது பிரஸ் மீட் இல்லையே, ஆடியோ நிக ழ்ச்சிதானே என்று கேட்டார். நிகழ்ச்சி ரூட் மாறுவதைக் கவனித்த ஆர்யா, டக்கென மேடைக்குத் தாவி வேறு பேச்சைப் பேசி நிலை மையை மாற்றினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: