Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் ….

ஜெயலலிதாவுக்கு எதிராக சொத்துக் குவிப்பு வழக்கில் ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தால் அதைப் பயன் படுத்தி ஆட்சியைப் பிடிக்க சசிகலா தரப் பு திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதனா ல்தான் ஜெயலலிதா, ஒட்டு மொத்தமாக அத்தனை பேரையும் அதிமுகவை விட் டு விரட்டி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.

என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்து விட்டது என் று ஒரு வார்த்தை சொல்வார்கள். ஜெய லலிதா விஷயத்தில் அதுதான் நடந்திரு க்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கி றது என்பதை யோசித்துப் பார்ப்பதற்குள் என்னவெல்லாமோ நடந்தேறி விட்டதை பார்த்து அதிர்ந்து போய்த்தான் சசிகலா கும்பலை விரட்டி விட்டுள்ளார் ஜெயலலிதா என்கிறார்கள்.

விஷயம் ரொம்ப சிம்பிள். பெங்களூர் கோர்ட்டில் கடந்த 14 வருடங்க ளுக்கும் மேலாக நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கை மையமாக வைத்து சசிகலா தர ப்பு ஒரு அபாரமான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்துள்ள தாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த வழக்கில் ஜெய லலிதாவுக்கு பாதகமாக நிச்சய ம் தீர்ப்பு வரும். எனவே அவர் பதவி விலக நேரிடலாம். அப்படி நடந்தால், ஆட்சி யைப் பிடிப்பது என் பதுதான் இந்த சதித் திட்டத்தின் மையப்புள்ளி என்கிறார்கள் ‘கார்டனுக்கு’ நெருக்க மானவர்கள்.

ஜெயலலிதா 3வது முறையாக முதல்வர் பதவிக்கு வந்த நாள் முதலே இந்த சதித் திட்டத்தை படிப்படியாக அமல்படுத்த ஆர ம்பித்து விட்டது சசிகலா தரப்பு என்கிறது விவரம் அறிந்த வட்டாரங்கள்.

முதலில் ஜெயலலிதாவுக்கு அரசு நிர்வாகத் தகவல்கள், முக்கியத் தகவல்கள் எதுவும் போகாமல் தடுக்க ஆரம்பித்துள்ளது இந்த ‘குரூப்’. உளவுத்துறைத் தகவல்களை ஜெய லலிதாவிடம் போகாமல் திட்டமிட்டு தடுத் துள்ளது. இதற்கு வசதியாகவே நேர்மையா ன அதிகாரியாக அறியப்பட்ட கூடுதல் டிஜி பி ராஜேந்திரனை உளவுத்துறை பொறுப்பி லிருந்து திட்டமிட்டு அகற்றியுள்ளனர். அவருக்குப் பதில், ஐஜியான பொன். மாணிக்கவேலை கொண்டு வந்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேல் உளவுத்து றை தகவல் எதையும் நேரடியாக ஜெய லலிதாவுக்குக் கொண்டு போகவே இல்லை என்கிறார்கள். மாறாக சசிகலாவிடமே நேரடியா க உளவுத் தகவல்களை கொடுத் து வந்துள்ளார். இதில் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக வே மாலைக்கு மேல் ஜெயலலி தாவை யாரும் சந்திக்காத வகை யில் திட்டமிட்டு ஜெயலலிதா வையே குழப்பி வைத்துள்ளனர்.

இதனால் மாலைக்கு மேல் ஜெயலலிதாவை உளவுத்துறையினர் மட்டு மல்லாமல் யாருமே தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமை ச்சர்கள், அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கட்சித் தலைவர் கள் என யாருமே ஜெயலலிதாவை பார்க்க முடி யாத நிலை ஏற்பட்டது. இதனால் அத் தனை பேருமே சசிகலாவை பார்க்க வேண்டிய நிலையை செட்டப் செய்து உருவாக்கியுள்ளனர். அதாவது திட்ட மிட்டு செய்து ள்ளனர்.

இதெல்லாம் ஆரம்பத்தில் ஜெயலலிதா வுக்குப் புரியவில்லை என்கிறார்கள். பொன்.மாணிக்கவேலின் செயல் பாடுகள் குறித்து ஜெயலலிதாவுக்குச் சந்தேகம் வந்தபோதுதான் நடந்த து, நடக்கிறது, நடந்து கொண்டிரு ப்பது என்ன என்பது லேசாக அவருக் குப் புரிந்திருக்கிறது. இதனால் தான் பொன்.மாணிக்கவேலை அவர் தூக்கி னார்.

இதையடுத்து சசி தரப்பில் என்ன நட க்கிறது என்பதை அவர் சற்று சீரிய ஸாகவே கண்காணிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தன்னைச் சுற்றி எவ்வ ளவு பெரிய சதி வலை பின்னப்பட்டுள்ளது என்பது அவருக்குப் புரி ந்து அதிர்ந்திருக்கிறார். அதா வது கடந்த 6 மாதமாக தான் பெயரளவுக்கே முதல்வராக இருந் திருப்பதை யும், உண்மையில் நிர்வாகத் தில் முழு அளவில் சசிகலாவே தலையிட்டு வந்திருப்பதும் அவ ருக்குப் புரிந்தி ருக்கிறது.

இதையடுத்து சசிகலாவுக்கு நெருக்கமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி பன்னீர்செல்வத்தை திட்ட செயலாக்கல் துறை செய லாளர் பதவியி லிருந்து தூக்கினார். இந்தத் துறைதான், அதிமுக அரசின் இலவச திட் டங்களை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளது என்பது குறி ப்பிட த்தக்கது. ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி வைத் த இல வசத் திட்டங்களை இந்த து றை கண்டு கொள்ளாமல் விட்டு ள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது குடும்பத்துக்கு மிக வும் நெருக்கமானவரான பன்னீர் செல்வத்தை வைத்து பெரிய அள வில் விளையாடியுள்ளார் சசிகலா என்கிறார்கள். மேலும் பன்னீரை வைத்து நடராஜனும் பெருமளவில் காரியங்கள் சாதித்துள்ளாராம். பல முக்கிய நியமனங்களில் தனக்கு வேண்டியவர்களை போட்டிருக்கிறார் நடராஜன் என்கிறார்கள்.

மேலும் தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கியிடமே சசி கலா தரப்பு நேரடியாக உரச, விஷயம் ஜெயலலிதாவுக்கு போயுள்ள து. சாரங்கியே இதுகுறித்து நேரடியாக புகார் தர கோபமான ஜெயலலிதா, பன்னீர்செல்வத் தைத் தூக்க முடிவு செய்தார். இதை உணர்ந்து பன்னீரே பதவியை விட்டு போய் விட்டார்.

மொத்தத்தில் ஆட்சியைப் பிடிக்கும் சதி, அவ ர்களை மீறி நாம் நடந்து விடக் கூடாது என்று நடராஜனுடன் சேர்ந்து சசிகலா போட்ட திட் டம் உள்ளிட்டவைதான் ஜெயலலிதாவின் விஸ்வரூப கோபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

போயஸ் தோட்டத்தை மையமாக வைத்து நடந்துள்ள இந்த ரகசிய செயல்கள் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply