Tuesday, January 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஜெயலலிதா, சசிகலா – நட்பு உருவான கதை

சசிகலா, ஜெயலலிதா இவர்கள் பிரிய மாட்டார்கள் என்று நினைத் திருந்த அத்தனை பேருக்கும் சசி கலாவை ஜெயலலிதா அதிரடியா க நீக்கிய உத்தரவு பெரும் வியப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதிமுக வினரே கூ ட இதை நம்ப மறுக்கிறார்கள் .

ஜெயலலிதாவின் அரசியல் மற்றும் தனி வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தியவர் சசிகலா. அப்படி ஒரு நட்பை இருவ ரும் பேணிக்காத்து வந்தனர். இவர்களின் நட்பு உருவான கதை சுவாரஸ்யமானது.

தமிழக அரசில், மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்து வந்தவர் எம். நடராஜன். இவரது மனைவிதான் சசிகலா. சா தாரணமான பெண்மணியா க, வீடியோ கடை நடத்தி வ ந்தவர் சசிகலா. 1982ம் ஆண் டு அப்போதைய தென் ஆற் காடு மாவட்ட மக்கள் தொட ர்பு அலுவலராகப் பணியாற் றி வந்தார் நடராஜன். அப் போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சந்திர லேகாவுடன் நல்ல நட்பை வைத்திரு ந்தார்.

அப்போது எம்.ஜி.ஆர் ஆட்சி தமிழகத் தில் நடந்து வந்தது. சந்திர லேகாவிடம் தனது மனைவியை நடராஜன் அறி முகம் செய்து வை த்தார். அவர் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு சசியை அறிமுகப்படுத் தினார். இப்படித்தான் ஜெயலலிதாவின் நட்பு வளையத்திற்குள் புகுந்தார் சசிகலா.

வீட்டில் தனியே இருந்த ஜெயல லிதாவுக்கு வீடியோ கேசட்களை கொண்டு சென்று கொடுத்து வந் தார் சசிகலா. அந்த நட்பு இறுகி இருவரும் பிரிய முடியாத தோழி களாயினர்.

அதன் பிறகு அவருக்கு உதவியா ளர் போல செயல்பட்டார். எம்ஜி ஆர் மறைவுக்குப் பின் கட்சியில் உறுப்பினரானார் சசிகலா. அதிமுகவில் பெரும் செல்வாக்கு மிக் கவராக உயர்ந்தார். அவருக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியும் தந்தார் ஜெயலலிதா.

அவரது அக்காள் மகனான டி.டி.வி.தினகரன் நாடாளும ன்ற உறுப்பினராகவும் கட்சி யின் பொருளாளராகவும் பின் னர் அமைப்பு செயலாளராக வும் ஆக்கப்பட்டார்.

வீட்டுக்குள் நுழைய நடராஜ னுக்கு ஜெயலலிதா தடை விதித்த போ து தனது வீட்டை விட்டுவிட்டு, கணவரைப் பிரி ந்து, போயஸ் தோட்டத்துக்கே வந்துவிட்டார் சசிகலா. கடந்த 29 ஆண்டுகளாக ஜெயலலிதாவின் வீடடில் தான் வசித்து வந்தார் சசி கலா.

இந்த நீண்ட கால நட்புக்கு வித் திட்ட சந்திரேலகா பின்னர் அப் போதைய ஆளுங்கட்சியினரா ல் தாக்கப்பட்டார் என்பது நி னைவிருக்கலாம். முகம் கருகி ப் போய் படுகாயமடைந்த சந்தி ரலேகா பின்னர் தனது பணி யை ராஜினமா செய்தார். ஜன தா கட்சித் தலைவர் சுப்பிரம ணிய சாமியுடன் இணைந்து அரசியலில் குதித்தார்.

சாதாரண பெண்மணியாக வலம் வந்து கொண்டிருந்த சசிகலா, போயஸ் தோட்டத்திற்குள் புகுந்த பின்னர் ஜெயலலிதாவின் ஆசி யுடன் சக்தி வாய்ந்தவராக வலம் வந்தார். தன து தோழியை எந்த இடத்திலும் விட்டுக் கொடு க்காமல் பேசி வந்தார் ஜெயலலிதாவும். சசி கலா மீது பல புகார்கள் வருகிறதே, ஏன் அவ ரை உங்களுடனே யே வைத்துள்ளீர்கள் என்று பலமுறை பல தரப்பிலும் கேட்கப் பட்டபோது ம், சசிகலா எனது தோழி என்று அழுத்தம் திருத் தமாக கூறி அவருடன் தனது நட்பை விட்டுக் கொடுக்காமல் இருந்தவர் ஜெயலலிதா.

ஆனால் பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பாக மாறி தன்னையே பதம் பார்க்க சசிகலா நினை த்ததால்தான் இன்று அவரை நீக்கும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.

ஆட்சியில் அராஜக தலையீடு:

கடந்த 2 அதிமுக ஆட்சியில் இல்லாத அளவுக்கு மிகப் பெரி ய அளவில், தற்போதைய 3 வது அதிமுக ஆட்சியில் சசி கலாவின் தலையீடுகள் அரா ஜகமாக இருந்ததாக தலைமை ச் செயலக வட்டாரத் தகவல் கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிக ளை மிகப் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்த முற்பட்டார் சசிகலா. நான் முதல்வரா யார் முதல்வர் என்று ஜெயலலிதாவே கொதித்தெழுந்து கேட்கும் அள வுக்கு சசி கலாவின் அட்டகா சம் அதிகரித்துள்ளது.

தனக்குப் பணியாத பல ஐஏ எஸ் அதிகாரிகளை மிரட்டி நீ ண்ட விடுப்பில் போக வைத் தார் சசிகலா என்று கூறுகிறா ர்கள். எந்த அதிகா ரியாக இரு ந்தாலும் தன்னைத் தாண்டி ஜெயலலிதாவிடம் போகக் கூடாது என்றும் சசிகலா உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

சசிகலாவின் செயல்பாடுகள் எல்லை மீறிப் போனதால்தான் கொ தித்தெழுந்து அவரை தூக்கி எறிந்துள்ளார் ஜெயலலிதா என்கிறார் கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


3 Comments

  • கிராமத்தான்

    ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி புரிந்த இத்தனை ஆண்டுகளும் சசி மாபியா கும்பல் மக்களை கொள்ளை அடித்தது, மிரட்டி, ஏமாற்றி அநியாயமாக அடுத்தவர்களின் சொத்துக்களை அபகரித்தது, கட்ட பஞ்சாயத்து மூலம் கபளீகரம் செய்தது, அரசாங்க இயந்திரத்தை தவறான வழிகளில் இயக்கி, எந்தவித முன்னேற்ற பணிகள் எதுவுமே நடைபெறாமல் கஜானவை மட்டும் காலி செய்தது, ரௌடி ராஜ்யம் செய்தது, நீதிக்காக போரடுபவர்களை மிரட்டுவது, மற்ற சாதியில் உள்ள ரௌடிகளை மட்டும் போட்டுத் தள்ளுவது (Monopoly in Rowdism), ரேட் நிர்ணயம் செய்து பட்டியலிட்டு அரசாங்க ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் மாறுதலுக்கு வசூல் செய்வது, மணல் கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, நல்ல முறையில் ஓடிக் கொண்டிருக்கும் எந்த தொழிலாக இருந்தாலும் மிரட்டியே அடைந்து கொள்வது, சாதிக்காரனுக்கு மட்டுமே சகல உரிமைகள் என ஆட்டம் போட்டது, ஏரியாவுக்கு அங்கீகரிக்கப்பட்ட சொந்தக்காரன் மூலம் மாமுல் வசூல் செய்வது – மந்திரி, உயர் அதிகாரிகள் மாதம் தோறும் கப்பம் கட்ட சாதிக்கார P.A மூலம் கறாராக வசூல் செய்வது, ஒத்துவராதவர்களுக்கு கல்தா கொடுப்பது, ஊடகங்களில் இவர்களின் அக்கிரமங்களைப் பற்றிய எந்தவிதமான செய்திகளும் வராதபடி சாதிக்காரர்களில் ஆளுமையில் வைத்திருப்பது – இன்னும் இது போன்ற காரியங்களால் தமிழக மக்கள் கடும் தொல்லைகளுக்கும், பாதிப்பிற்கும் ஆளாகி இருந்ததை ஜெயலலிதா தன் சுயநலத்தால் ‘எனது தோழி’ என்று மறைத்து, பாதுகாத்து துரோகம் செய்து வந்தார்.
    ஆனால், ஆட்டை கடித்து, மாட்டைக் கடித்து ஜெயலலிதாவைக் கடிக்கும் போது தான் சோ, மோடி, சு. சாமி எல்லாம் ஆஜாராகி இருக்கிறார்கள். ஏனெனில் இவர்களுக்கும் இதுநாள் வரை எந்தவித பாதிப்பும் இல்லை; ஜெ போய்விட்டால் தமது ராஜ்யத்திற்கே ஆபத்து என்று உணர்ந்து, இப்போது தான் ‘விழித்து’ சசி கும்பலை விலக்கி வைத்துள்ளார்கள். இது நிரந்தரமானதாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் வேண்டினாலும், தற்காலிக ஏற்பாடா என்று இன்னும் பலருக்கு ஐயம் உள்ளது.
    உண்மையாக மக்களைப் பற்றி, தான் அடி வாங்கிய பிறகு உணர்ந்தவராக இருப்பின், மாவட்டம் தோறும் ‘சசி கும்பல் மீட்பு நீதிமன்றம்’ அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து, கொள்ளை போனதை முறையிட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தாமதமில்லாமல் ரௌடிகளை அழித்திட வேண்டும்; கட்ட பஞ்சாயத்து கும்பலை நசுக்க வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்; உடமைகளை திரும்பக் கிடைத்திட சட்டப்பூர்வமாக செய்திடல் வேண்டும். மொத்தத்தில் தமிழகத்தில் மக்கள் சுதந்திரமாக இயங்க வழி செய்திடல் வேண்டும்.
    இப்படி செய்வதன் மூலம், ஜெயலலிதா புண்ணியம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லாவிட்டால் மக்களின் சாபம், தூபம் சும்மா விடாது.

Leave a Reply